மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க என்று கேள்வியோடு வெளியூர் சுற்றுலா செல்லும் மதுரை வாசிகளே! என்ன இல்லை மதுரையில்.

நீங்கள் ஆன்மீகவாதியா? தொல்லியல் மற்றும் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவரா? மானுடவியல் மீது ஆர்வம் கொண்டவரா? பசுமை மற்றும் பல்லுயிர்கள் மீது ஆர்வம் கொண்டவரா? அட எதுவும் இல்லைங்க, அப்படியே வண்டியெடுத்துட்டு போயி எங்கையாவது ஒரு நகர வாசமற்ற கிராமத்துல தங்கி குளிச்சு கும்மாளம் போடா மதுரையில் இடமிருக்கா என கேட்பவரா? உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதுரை பல்வேறு முகங்களை கொண்டு இருக்கிறது. அதிக செலவில்லாமல் மதுரை மாவட்டத்தில் நீங்கள் சுற்றி பார்க்க கூடிய இடங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

வரலாற்று மற்றும் தொல்லியல் சிறப்பிடங்கள்:
1. கீழடி
2. அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியம்
3. நரசிங்கப்படி ஈமக்காடு
4. பெருங்காமநல்லூர் நினைவுத்தூண்
5. யானை மலை சமண படுகை
6. கீழக்குயில்குடி மலை அய்யனார் மற்றும் சமண படுகை
7. முத்துப்பட்டி மலை சமணப்படுகை
8. மாங்குளம் - மீனாட்சிபுரம் சமணப்படுகை
9. அரிட்டாபட்டி மலை சமணப்படுகை
10. திருப்பரங்குன்றம் சமணப்படுகை
11. மேட்டுப்படி சித்தர்மலை சமணப்படுகை
12. மாடக்குளம் கண்மாய் கல்தூண்
13. வரிச்சூர் குன்னத்தூர் மலை படுகை
14. விக்கிரமங்கலம் நடுமுதலைக்குளம் மலை சமணப்படுகை
15. அழகர்மலை - கிடாரிபட்டி சமணப்படுகை
16. குப்பல்நத்தம் மலை சமணப்படுகை
17. கருங்காலக்குடி சமணப்படுகை
18. கீழவளவு மலை சமணப்படுகை
19. காரைக்கேணி சமணர் படுகை
20. மலைப்பட்டி புத்தூர்மலை சமணர்படுகை
21. கோவலன் பொட்டல்
22. மருதநாயகம் (கான்சா சாகிப்) கல்லறை, சம்மட்டிபுரம்
23. உச்ச பறம்பு மலை வைரவர் கோவில்
24. ஈசன் கோவில், கருங்காலக்குடி
25. அக்னீஸ்வரன் கோவில், தேவன்குறிச்சி மலை
26.சாப்டூர் அரண்மனை
27.கபாலி மலை கோவில்
28. கொங்கர் புளியங்குளம் சமணப்படுகை
29. ஓவா மலை சமணப்படுகை, திருவாதவூர்
30. குருவித்துறை பாண்டியன் அணை (சிற்றணை)

கோவில்களும் பழமையான கட்டிடங்களும்:
1. மீனாட்சி அம்மன் கோவில்
2. அழகர் கோவில்
3. திருப்பரங்குன்றம்
4. திருவாதவூர் கோவில்
5. நரசிங்க பெருமாள் கோவில்
6. திருமோகூர் கோவில்
7. கொடிக்குளம் பெருமாள் கோவில்
8. திருவேடகம் கோவில்
9. திருமலைநாயக்கர் மகால் & அருங்காட்சியகம்
10. புதுமண்டபம்
11. ராணி மங்கம்மாள் சத்திரம் (காந்தி அருங்காட்சியகம்)
12. வைகை ஆற்று மைய மண்டபம்
13. நரசிங்கப்பட்டி ராமயண ஓவிய சாவடி
14. விளக்குத்தூன்
15 மதுரை வாயில் கோட்டை
16. காந்தி நிகேதன் ஆசிரமம், கல்லுப்பட்டி
17. பாண்டிக்கோவில்
18. கூடலழகர் பெருமாள் கோவில்
19. மேலூர் பனங்காடி பெருமாள் கோவில்
20. குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் (குருபகவான் கோவில்)
21. கூடல் மலை மாயண்டி கோவில்

கோவில்காடுகள்:
1. இடையபட்டி கோவில்காடுகள்
2. அ.வளையபட்டி நொண்டி சாமி கோவில்காடு
3. கொடிமங்கலம் முனியாண்டி கோவில்காடு
4.மஞ்சமலை ஆண்டி கோவில்காடு

பெருவிழாக்கள்:
1. சித்திரை திருவிழா
2. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
3. தெப்ப திருவிழா
4. சந்தனகூடு திருவிழா
5. திருப்பரங்குன்றம் கிரிவலம்
6.பிட்டுத் திருவிழா
7. ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா, சோழவந்தான்
8. ஏழு ஊர் அம்மன் (முத்தலாம்மன்) தேர் திருவிழா, தே. கல்லுப்பட்டி
9. தர்கா கந்தூரி விழா
10. பத்திரகாளியம்மன் திருவிழா, திருமங்கலம்

நீராதார தளங்கள்
1. குட்லாடம்பட்டி அருவி
3.கேணி அருவி, சாப்டூர்
4. பரமசிவன் பாறை ஊத்து, சாப்டூர்
5. அழகர்மலை சித்தருவி
6. ராக்காயி தீர்த்தம் (சிலம்பாறு) அழகர்மலை
7. நாகதீர்த்தம், காக்கவூத்து, நாகமலை
8. வண்டியூர் தெப்பக்குளம்
9.  குளிராட்டி அருவி, தே.கிருஷ்ணபுரம் .
10. மொட்டூத்து, தாழையூத்து, வாசிமலை
11. அசுவமா நதி (குதிரை ஆறு) அணை
12. விரகணூர் வைகை அணை
13. நீச்சல்குளம், தல்லாக்குளம்
14. வைகை பெரியார் கால்வாய் (குளிக்க)
15. காளிகாப்பன் கிணறு
16. சாத்தையாறு அணை
17. வையை ஆறு 
18. குண்டாறு
19. கமண்டலாறு - வறட்டாறு
20. கிருதுமால் ஆறு
21. உப்பாறு
22. பாலாறு
23. திருமணிமுத்தாறு
24. மஞ்சமலையாறு
25. சிலம்பாறு
26. கொண்டைமாரி (மூலகுறிச்சி) ஓடை
27. தடாகை நாச்சியம்மன் ஓடை
28. பொய்கரைப்பட்டி தெப்பக்குளம்
29. பெரிய அருவி நீர்த்தேக்கம், கேசம்பட்டி

மலையேற்றம் செல்ல தோதான மலைகள்: 
அழகர்மலை, சிறுமலை, நாகமலை, வகுத்தமலை, மஞ்சமலை, பெருமாள் மலை,  கிளுவமலை, புத்தூர்மலை, வெள்ளிமலை, வெள்ளமலை, கருமலை, மாமலை, குதிரைமலை, தெற்குமலை, வாசிமலை, எழுமலை, பசுமலை, உச்ச பறம்பு மலை, பெருமலை, சிரங்கி மலை, எரிச்சிமலை, கபாலி மலை, கூடல் மலை உள்ளிட்ட மரங்கள் அடர்ந்த மலைகளும், யானைமலை, ஓவாமலை, ஒத்தமலை, பரங்குன்றம், கீழக்குயில்குடி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம், தேவன்குறிச்சி, கொங்கர் புளியங்குளம், முத்துப்பட்டி, சித்தர்மலை, கருங்காலகுடி, வரிச்சூர் குன்னத்தூர், நடுமுதலைக்குளம், குப்பல்நத்தம், கீழவளவு, மேலவளவு, சக்கரைபீர் மலை, பஞ்சபாண்டவர் மலை, புலிப்பட்டி, தேவன்குறிச்சி உள்ளிட்ட குன்றுகளும், கரடுபட்டி கரடு, வடபழஞ்சி கரடு, பெருமாள்மலை கரடு உள்ளிட்ட கரடுகளும் சூழதான் இன்றைய மதுரை மாவட்டம் அமைந்துள்ளது. வனத்துறைக்கு உட்பட்ட மலையேற்றத்திற்கு அனுமதிப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பூங்காக்கள்:
1. ராஜாஜி பூங்கா
2. மதுரை சூழல் பூங்கா, கே.கே.நகர்
3. திருப்பரங்குன்றம் பூங்கா
4. வண்டியூர் கண்மாய் பூங்கா

பழங்குடி மக்கள் இருப்பிடம்:
1. பளியர் மக்கள் - தொட்டப்பநாயக்கனூர், எழுமலை
2. மலைவேடர் பழங்குடி மக்கள் - மன்னாடிமங்கலம், வாடிபட்டி
3. காட்டுநாயக்கர் பழங்குடி மக்கள் - பரவை

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஊர்கள்:
1. சிவர்கோட்டை - நேசநேரி
2. சாப்டூர்
3. மாமலை
4. இடையபட்டி

பறவை காணுதலுக்கு உகந்த நீர்நிலைகள் :
1. சாமநத்தம்
2. கிளாக்குளம்
3. அவனியாபுரம்
4. வடகரை, தென்கரை சோழவந்தான்
5. மாடக்குளம் - நிலையூர் 
6. வரிச்சூர் குன்னத்தூர்
7. மாத்தூர், அரும்பனூர், முதலியேந்தல்
8. சிவரக்கோட்டை மலையூரணி
9. அரிட்டாபட்டி
10. வண்டியூர் கண்மாய்
11. உறப்பனூர் கண்மாய்
12. வாலாந்தூர் கண்மாய்

இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி எடுத்துக்கொண்டு இந்த விடுமுறை நாட்களை குழந்தைகளோடு செலவழிக்க எளிய சுற்றுலாவுக்கு மதுரைவாசிகளே புறப்படுவோமா? போகிற வழியில் பதநீர், கூழ் குடித்து கொண்டு, கட்டிய சோத்த  அல்லது வாங்கின சோத்து பொட்டினத்த மரத்தடியில் உட்கார்ந்து ருசிப்பது என ஊர் சுற்றலை இன்னும் அழகாக்கி கொள்ளுங்கள். சொந்த ஊரை தெரிந்து வைத்திருப்பது சொர்க்கத்தின் முகவரியை கையில் வைத்திருப்பதற்கு சமம். எளிய மக்களுக்கான எளிய சுற்றுலா உள்ளூரை வட்டமடிப்பதில் இருந்து துவங்குகிறது. வாங்க போவோம்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...