1.அட்ட வீரட்டானத் தலங்கள் எவை? அங்கே? சிவபெருமான் செய்த லீலைகள் என்ன?
பதில் :
திருக்கண்டீயுர்
பிரமன் சிரம் (தலை) கொய்தது
திருக்கோவலூர்
அந்தகாசுரனை சம்ஹரித்தது
திருஅதிகை
திரிபுரத்தை எரித்தது
திருப்பறியலூர்
தக்கன் சிரம் கொய்தது
திருவிற்குடி
சலந்தாசுரனை சம்ஹரித்தது
வழுவூர்
யானையைத் தோலுரித்தது
திருக்குறுக்கை
காமனை எரித்தது
திருக்கடவூர்
யமனை உதைத்து விரட்டியது
2.சப்தவிடங்கத் தலங்கள் எவை? அங்குள்ள விடங்கரின் பெயர் என்ன? அங்கு இறைவன் என்ன நடனம் ஆடினார்?
பதில் :
திருவாரூர்- வீதி விடங்கர்
அசபா நடனம்
திருநள்ளாறு- நகர விடங்கர்
உன்மத்த நடனம்
திருநாகைக்காரோணம்- சுந்தரவிடங்கர் வீசி நடனம்
திருக்காறாயில்- ஆதி விடங்கர்
குக்குட நடனம்
திருக்கோளிலி- அவனிவிடங்கர்
பிருங்க நடனம்
திருவாய்மூர்- நீல விடங்கர்
கமல நடனம்
திருமறைக்காடு- புவனி விடங்கர்
ஹம்சபாத நடனம்
3.பஞ்ச பூதத் தலங்கள் எவை?
பதில் :
1. காஞ்சீபுரம் – பிருதிவி (பூமி)
2.திருவானைக்கா – அப்பு (நீர்)
3.திருவண்ணாமலை- தேயு (தீ)
4.திருக்காலத்தி -வாயு (காற்று)
5. சிதம்பரம் – ஆகாசம் (வெற்றிடம்)
4.தாண்டவ சிறப்புத் தலங்கள் எவை?
பதில் :
1.அசபா தாண்டவம் - திருவாரூர்,
2.ஆனந்த தாண்டவம் - தில்லைச் சித்திர கூடம், பேரூர்.
4.ஞான சுந்தர தாண்டவம் - மதுரை,
5.ஊர்த்துவ தாண்டவம் - ஆலங்காடு, திருப்புக் கொளியூர்
6.பிரம தாண்டவம் - திருமுருகன்பூண்டி
5.கீழ்கண்ட ஆலயங்களைச் சொல்லவும்: சபாபதி ஆலயம், தியாகேசர் ஆலயம், ஐங்கரனாலயம், குமரனாலயம், சண்டேசுரனாலயம், விடையினாலயம், வடுகனாலயம்.
பதில் :
1.சபாபதி ஆலயம்- சிதம்பரம்;
2.தியாகேசர் ஆலயம்- திருவாரூர்;
3.ஐங்கரனாலயம்-திருவலஞ்சுழி;
4.குமரனாலயம்-திருவேரகம்;
5.சண்டேசுரனாலயம்-சேய்ஞ்ஞலூர்;
6.விடையினாலயம்-திருவாவடுதுறை;
7.வடுகனாலயம்-சீர்காழி.
6.சப்த ஸ்தான க்ஷேத்ரங்கள் எவை?
பதில் :
திருவையாறு, திருப்பழனம், திருச் சோற்றுத்துறை , திருவேதிகுடி, திருக்கண்டியூர்,திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்.
7.பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் யார்?
பதில் :
1,2,3 திருமுறை- திருஞான சம்பந்தர்
4,5,6 திருமுறை- திருநாவுக்கரசர்
7- சுந்தரர்
8- மாணிக்கவாசகர்
9- திருமாளிகைத்தேவர், சேந்தனார், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தநம்பி,, சேதிராயர்
10-திருமூலர்
11- காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாடர், கபிலர், பரணர், இளம் பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி.
12- சேக்கிழார்
8.நால்வர் யார்?
பதில் :
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர்
9.கீழ்க்கண்ட 10 ஊர்களின் மறுபெயர் என்ன?
திருவாலவாய், கொடுங்குன்றம், திருக்கானப்பேர், கோயில், புள்ளிருக்குவேலூர், குடமூக்கு, நாகைக்காரோணம், திருமறைக்காடு, கச்சி, திருமுதுகுன்றம்
பதில் :
திருவாலவாய்- மதுரை
கொடுங்குன்றம்- பிரான்மலை
திருக்கானப்பேர்- காளையார்கோயில்
கோயில்- சிதம்பரம்
புள்ளிருக்குவேலூர்- வைதீஸ்வரன் கோயில்
குடமூக்கு- கும்பகோணம்
நாகைக்காரோணம்– நாகப்பட்டிணம்
திருமறைக்காடு–வேதாரண்யம்
கச்சி– காஞ்சீபுரம்
திருமுதுகுன்றம்- விருத்தாசலம்
10. பாடல் பெற்ற ஸ்தலங்கள் எத்தனை.
பதில் :
274
11. பெரிய புராணத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளது?
பதில் :
பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment