விதியை வெல்லும் சூட்சமம்

மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான_கர்ம_வினைகளை_பெற்று அனுபவிக்கிறான்.

அவை

1)சஞ்சித கர்மம்

2)பிராப்த கர்மம்

3)ஆகாமிய கர்மம்

இதில் *சஞ்சித_கர்மம்* என்பது நம் கரு உருவாகும் போதே உடன் உருவாவது, அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் வித்தாக இந்த பிறவியில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்ம வினையாகும்.

*பிராப்த_கர்மா* என்பது நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில் நம் ஜீவனத்துக்காக நாம் செய்யும் தொழிலின் வாயிலாகா நாம் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும் கர்ம வினை, இந்த கர்மாவால் வரும் பலனையும் நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும்,

மூன்றாவதாக *ஆகாமிய_கர்மா* என்பது இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது, இவ்விதமாக மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.

இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட_இயலாது, அனைவரும் கர்மவினையில் சிக்கி உழன்றாக வேண்டியதுதான், நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் நான் மேலே குறிப்பிட்ட கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும்.

இந்த கர்ம வினைகளை களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்கு சென்றும், பலவிதமான பரிகாரங்களை மேற்கொண்டும் கைப்பணம் செலவானதுதான் மிச்சம், நம் கர்ம வினைப் பலன்கள் மட்டும் மாறிய பாடில்லை, நம் வேதனை தீர்ந்த_பாடில்லை. அப்படியென்றால் நம் கர்ம வினைகளை தீர்க்க வழியே இல்லையா ?

*ஏன் இல்லை.* கர்ம வினைகளை நீக்க பரிகாரங்கள் உள்ளது, ஆனால் அதனை நமக்கு சரியாக விளக்கி சொல்ல ஆட்கள்தான் இல்லை. இங்கே ... நமது புராணங்களும், சாஸ்திரங்களும் பறைசாற்றுகின்ற கர்ம வினைகளை நீக்கும் உபாயங்களை விவரிக்கிறேன்.

*பிரம்மா* - எல்லா படைப்பு இயக்கங்களையும் செய்பவர். அவரின் படைப்புக்கு தேவையான ஞானத்தினை தருகிற சரஸ்வதி அவரின் மனைவி.

*விஷ்ணு* - காக்கும் கடவுள், எல்லா உயிர்களையும் இரட்சித்து காப்பவர். இவர் உலகினை காக்க செல்வம் வேண்டுமல்லவா? அதை அவருக்கு நல்க செல்வத்திற்கு அதிபதியான மஹா லக்ஷ்மி அவரின் மனைவி.

*சிவம்* - அழிக்கும் கடவுள். மனிதனின் அஞ்ஞான இருளை, கர்மவினைகளை, தீமைகளை அளித்து நன்மை தருபவர். இவருக்கு தீமைகளை அழிக்கின்ற சக்தியினை தருவதற்கு சக்தி தேவியே இவருக்கு துணைவியாக.

அப்படியென்றால் நம் கர்ம வினைகள் நீங்க நாம் யாரை பற்ற வேண்டும்?

*நம் கர்ம வினைகளை யாரால் தீர்க்க முடியும்?*

தேவாதி_தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் தேடிச்சென்று சரண் புகுந்தது யாரிடம்?

அறியா பருவ குழந்தைகூட சொல்லிவிடும் அத்தகைய ஆற்றல் கொண்டவர் சிவபெருமான் ஒருவரே என்று.

நாமும் நம் கர்ம வினைகள் நீங்க அவரையே பற்ற வேண்டும். சரி அவரை பற்றிவிட்டோம். நம் கர்ம வினைகள் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்.

மனித உடல் இறைவனால் பஞ்சபூதத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம் என்பவைபஞ்ச பூதங்களாகும். சிவனே பஞ்சபூத பெருமையை சிறப்பிக்கும் விதமாக பஞ்சபூத தலங்களில் நாயகனாக நின்று அருள்பாலிக்கிறார்.

அவையாவன

*1. காஞ்சிபுரம் - நிலம் - ஏகம்பநாதர்*

*2. திருவனைகாவல் - நீர் - ஜலகண்டீஸ்வரர்*

*3. திருவண்ணாமலை - நெருப்பு - அண்ணாமலைநாதர்*

*4. காளஹஸ்தி - வாயு - காளத்திநாதர்*

*5. சிதம்பரம் - ஆகாயம் - நடராஜர்*

அகவே பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கும் மனிதன், தாம் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களால் ( *ஐந்து புலன்களால் - மெய், வாய், கண், காது, மூக்கு* ) ஆகியவற்றின் மூலியமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு நேரும் பொது பாவங்கள் - கர்மவினைகள் உண்டாகிறது.

எவ்வகையில் பாவம் செய்தோமோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். பஞ்ச பூதங்களால் - பஞ்ச இந்திரியங்களால் தோன்றிய பாவத்தை - பஞ்ச லிங்கங்கள் அல்லவா தீர்க்க முடியும்.

இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவையாவன

1.யாதனம் - கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.

2.சிரவணம் - இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.

3. கீர்த்தனம் - இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.

4. பூஜார்தனம் - அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.

5. ஸ்துதி - இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

இந்த ஐந்த விதமான சேவைகளை நாம் செய்து வர நம் கர்ம வினைகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும்

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...