வீண் பழி சுமத்துவது "பாவம்"

ஒரு அரசன் ஒரு புலவருக்கு விருந்தளித்து கொண்டிருக்கையில்...

வானில் ஒரு கழுகு, பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.

பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.

அரசன் அந்த உணவை அந்த புலவருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.

அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைபயன்களை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு...!

இந்த கர்மவினை பயனை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.

கழுகிற்கா?
பாம்பிற்கா?
அல்லது
அரசனுக்கா?

கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை.

விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை.

அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது.
அது அவனும் அறியாமல் நடந்த விஷயம்.

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன்,
சற்று நேர சிந்தனைக்குப் பிறகு,
"இதற்கான விடை விரைவில் கிடைக்கும்...! அதுவரை பொறுமையாக இரு" என அறிவுறுத்தினான்.

ஒரு சில நாட்கள் கழித்து,
மற்றொரு புலவன்
அரசனின் உதவியை நாட...!

அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணியிடம் வழி கேட்டார்.

அப்பெண்மணியும் அவருக்கு சரியான பாதையை கூறியதோடு நில்லாமல்...!

"இந்த அரசன் புலவர்களை கொல்பவன்...!
அவரிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள்..." என்றும் கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும் தான், அடுத்த நொடி சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது.

*புலவரை கொன்ற கர்மாவின் வினை பயன் முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும்* என்று.

*காரணம்*

மற்றவர்கள் மீது *வீண் பழி* சுமத்தும் போது...!
அதன் *பாவம்* பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்.

*உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை பயனை அவர் அனுபவித்தே தீர வேண்டும்.*

*எனவே, ஒரு விஷயத்தை திரித்து, பொய் சொல்லி, மற்றவர்கள் மீது பழி சுமத்தும் ஒவ்வொருவரும்...!*

*அதற்கான வினைபயனை விரைவில் அனுபவித்தே தீர வேண்டும்.*

ஆகவே,
*உண்மைகளை மட்டுமே சொல்லுவோம்...!*

*நன்மைகளை மட்டுமே பெறுவோம்...!*

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...