சைவத்தில் தீட்சை முறை மூன்று வகை உள்ளது அவை #சமய_தீட்சை, #விசேஷ தீட்சை, #நிர்வாண தீட்சை மேலும் இதில் ஏழு பிரிவுகள் உள்ளன.
1. #ஸ்பரிச தீட்சை, இது குரு கைகளால் தொடுவதால் நிகழ்வது.
2. #நயன தீட்சை, இது குரு கண்களின் மூலம் நிகழ்வது.
3. #மானச தீட்சை, இது குருவுக்கும், சீடனுக்கும் சூட்சமமாக நடப்பது.
4. #வாசக தீட்சை, இது குருவின் உபதேசத்தின்(சத்சங்கத்தின்) மூலம் நிகழ்வது.
5. #மந்திர தீட்சை, இது குரு சொல்லி கொடுத்த மந்திரத்தால் நிகழக்கூடியது.
6. #யோக தீட்சை, இது குரு சொல்லி தரும் யோக பயிற்சிகள் மூலம் நிகழ்வது.
7. #ஔத்திர தீட்சை, இது யாகங்கள் செய்வதனாலும், சக்திவாய்ந்த கோவில்களுக்கும் மற்றும் சக்தி வாய்ந்த இடங்களுக்கு அதாவது மலை ஏற்றம், ஜீவசமாதிக்கு செல்வதனால் நிகழக்கூடியது.
இதில் எதுவும் உயர்ந்த, தாழ்ந்த தீட்சை என்பது கிடையாது அவரவர் இருக்கும் தன்மையை பொறுத்து தீட்சை வேலை செய்யும். சொல்லப்போனால் அவரவருக்கு என்ன தீட்சை தேவையோ அந்த அந்த இடத்துக்கு அவர்களே செல்வார்கள் இந்த பிறவியில். இது அவரவர் முன் பிறவியில் விட்ட இடத்தை பொறுத்தது.
ஏன், உபதேச தீட்சை என்பது இணையதளம் மூலம் கூட கொடுக்க முடியும். Skype, Youtube, Facebook, Mobile phone மூலம் கூட நடக்கலாம். இது சாத்தியமே. இதுவும் சத்சங்கமே. இந்த முறைகள் இப்பொழுது நடந்து கொண்டும் உள்ளது.
இந்த தீட்சை முறை என்பது
குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்தான். சீடனுக்கு இருக்கும் கேள்விகளுக்கு குரு பதில் கொடுப்பார்.
ஊர் ஊராக சென்றும், ஆசிரமங்களிலும் நிறைய மக்களுக்கு சத்சங்கம் செய்வதும் உபதேச தீட்சையே.
ஊர் ஊராக சென்றும், ஆசிரமங்களில் நிறைய மக்களுக்கு சத்சங்கம் செய்வது போல்தான் இந்த இணையதள சத்சங்கமும், உபதேச தீட்சை முறையும். இதில் நிறைய மக்கள் கிடையாது ஒருவருக்கு ஒருவர் நேர்காணல் போல் இருக்கும். மற்றமுறைகளை விட இது சிறப்பாகவே இருக்கும்.
மற்றமுறைகளில் நீங்கள் நிறைய கேள்வியே கேட்க முடியாது அவர்கள் பேசுவதை மட்டும் கேட்க வேண்டும். அப்புறம் ஏதாவது விபூதியை கொடுத்துவிட்டு, ஒரு தியான முறையை கொடுப்பார்கள் புருவ மத்தியில் தியானம் செய் என்று, புருவ மத்தியில் தியானம் செய் என்பது முன்னரே மகான்கள் சொன்னதே... புதியது ஒன்றும் இருக்காது ஆனால்
ஒரு ஆளுக்கு 1000 முதல் பல லட்சம் முதல் வாங்கிவிடுவார்கள். இதனால் உங்களுக்கு தெளிவு ஏற்ப்படுவது என்பதும் மிகவும் குறைவு.
ஆனால் இணையதளம் முறையில் நிறைய கேள்வி பதில் உரையாடல் இருக்கும் நல்ல தெளிவு கிடைக்கும்.
ரமணர், ஜே.கே, சித்தவித்தை சிவானந்தர் புத்தகங்கள் எல்லாம் இந்த கேள்வி பதில் முறையில் தான் இருக்கும். ஏன் உபநிடதங்கள் எல்லாமே குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடந்த உரையாடல்தான்.
தீட்சை என்பது உங்களை உங்களது பிடிப்பில் இருந்து விடுவிப்பதே. அதாவது உங்களை உங்களது பிடிப்பில் இருந்து Unclutch செய்வதே.
அதாவது நான் என்ற தன்மையை இழக்க செய்வதே தீட்சை ஆகும்.
இப்போ இருக்கும் போலி சாமியார்கள் இந்த முறையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏன் என்றால் அவர்களின் ஆசிரம வாழ்க்கை, மற்ற சொகுசு வாழ்க்கை, புகழ், அதிகாரம், கோடி கோடியாக நன்கொடைகள் பெறுவது, விழாக்கள் என்ற பெயரில் கூத்துக்கள் அடிப்பது எல்லாம் அடிவாங்கிவிடும்.
அடுத்தது, சிலருக்கு குருவின் உபதேசத்தை கேட்டோ அல்லது புத்தகத்தை படிப்பதாலோ புரிதல் நிகழ்ந்துவிடும். நல்ல குரு மகான்களின் புத்தகம் என்பது அது அவரின் சத்சங்கம் அன்றி வேறில்லை.
இது அறிவு பூர்வமாக புரிந்து கொள்வதே இதை வைத்தே இவர்கள் நான் என்ற தன்மையை இழந்து சிறப்பாக, பிரவாகமாக வாழ்க்கையை வாழ்வார்கள். முக்தியை நோக்கியும் பயணித்து கொண்டு இருப்பார்கள். இது இவர்கள் போன பிறவியில் விட்டதை பொறுத்து நிகழ்வது.
இவர்கள் போன பிறவியிலேயே
தவ பயிற்சிகள் செய்தவராக இருப்பார்கள்.
#பத்துமடை_சிவானந்தர் (ரிஷிகேசில் சமாதி அடைந்தவர்) சொல்லுவார் #ஒருவரின்_ஞான_புரிதலுக்கு_புத்தகமே #போதுமானது என்று. அதனாலேயே அவர் வெறும் புத்தகங்களை மட்டுமே எழுதிவிட்டு சென்றுவிட்டார். வேறு எந்த முறைகளையும் அவர் வழங்கவில்லை.
மேற்கூறிய இந்த "உபதேச தீட்சை" முறைகள் மிகவும் பக்குவப்பட்ட ஆத்மாவுக்கே சாத்தியம்.
சிலருக்கு என்ன பேசினாலும் புரியாது இவர்களுக்கு குரு மகான்கள் பயிற்சியை கொடுத்து விடுவார்கள். பயிற்சியின் மூலம் பீனியல் மற்றும் மூளை செல்கள் விழிப்புப்பெரும். இதன் பின்பு இவர்களுக்கு புரிதல் நிகழும். இதன் பின்பு இவர்கள் நான் என்ற தன்மையை இழந்து சிறப்பாக, பிரவாகமாக வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.
அல்லது மேலே உள்ள வேறு எதாவது தீட்சை முறைகளை கொடுத்து விடுவார்கள். எப்படியோ எல்லோரையும் அடுத்த கட்டத்துக்கு அதாவது முக்தியை நோக்கி அழைத்து செல்வதே நோக்கம்.
தீட்சை நிகழ்வை ரமண மகரிஷி வேறுமாதிரி சொல்வார்,
சிலர் அடுப்பு கரி போல் இருப்பார்கள் இது பற்றிக்கொள்ள கொஞ்சம் தாமதம் ஆகும்.
சிலர் நிலக்கரி போல் இருப்பார்கள் இது கொஞ்சம் எளிதில் பற்றிக்கொள்ளும்.
சிலர் வெடிமருந்து போல் இருப்பார்கள் இது உடனே பற்றிக்கொள்ளும்.... என்பார்.
இதையே சித்தர்கள் பரிபாசையில்
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" என்று சொல்லியுள்ளார்கள்.
இதில் இது சிறந்தது, இது தாழ்ந்தது என்பது இல்லை. எல்லோரும் அந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு வந்தவர்களே. இருப்பது கால வேறுபாடு மட்டுமே.
சிலர் புரிதல் வேறு, அனுபூதி வேறு என்பார்கள். புரிதல் எப்படி சாத்தியம் என்பார்கள். அனுபூதி எப்படி சாத்தியமோ அதுபோல் புரிதலும் சாத்தியமே. சரியான புரிதல் நிகழ்ந்தவர்கள் எளிதில் ஆன்ம அனுபூதி பெற்று விடுவார்கள்.
மிகெய்ல் நைமி என்பவர் "தி புக் ஆப் மிர்தாத்" என்ற புத்தகத்தை எழுதியவர். இவர் வெறும் எழுத்தாளரே இவர் அனுபூதி பெற்றவர் அல்ல ஆனால் இறையின் வெளிப்பாட்டை அருமையாக விளக்கி இருப்பார். இதுவே இங்கு வாழ்க்கையை ஆனந்தமாக வாழ போதுமானது. இவரை போல் நிறைய பேர் வாழ்ந்தவர்களும் உண்டு, வாழ்ந்து கொண்டு இருக்கார்கள்.
ஓஷோவும் இவரை மிகவும் பாராட்டி உள்ளார். செல்லமாகவும் இவரை திட்டுவார், ராஸ்கல் இவன் இந்த புத்தகத்தை எழுதவில்லை என்றால் நான் இதை எழுதிருப்பேன் என்று.
தியானம், வழிபாடுகள் எல்லாம் வேண்டாம் என்ற ஜே.கே வையும் ஓஷோ பாராட்டி உள்ளார், ஜே.கே சொல்வது சரிதான் ஆனால் அது எல்லோருக்கும் பொதுவானது அல்ல அதுவும் ஒரு வழி என்பார்.
ரமணரிடம் ஜே.கே சொல்வது சரியா என்று கேட்டதற்கு சரியே, அவர் போன பிறவியில் தவம் செய்தவராக இருப்பார் என்பார். அதுவே எல்லோருக்கும் பொதுவானது அல்ல என்பார்.
யோகி ராம் சுரத்குமார் (விசிறி சாமியார்), சென்னையில் ஒரு நாள் ஜே.கே வின் சத்சங்கத்திற்கு சென்று தியானம், வழிபாடு எல்லாம் ஏன் வேண்டாம் என்கிறீர்கள் என்று கேட்கலாம் என்று சென்றுள்ளார். அந்த கேள்வியை இவர் கேட்கும் முன்பு வேறு ஒருவர் கேட்டுள்ளார். இதற்க்கு ஜே.கே தியானம், வழிபாடு, சக்கரம், நாடி, மூச்சு இதை பற்றி கேட்பவர் எல்லாம் இந்த கூட்டத்தை விட்டு வெளியே சென்று விடுங்கள் இதற்கும் ஞானத்திற்கும் சம்பந்தமில்லை என்றுள்ளார். இதை கேட்ட பின்பு யோகி ராம் சுரத்குமார் அமைதியாக அமர்ந்துவிட்டார். இதன் பின்பு யோகி ராம் சுரத்குமார் சொன்னது இங்கு இறைவன் எப்போ எப்படிப்பட்ட ஞானிகள் வேண்டுமோ அவர்களை அனுப்புவார் என்று சொல்லியுள்ளார். அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இது உள்ளது.
ஜே.கே, சொல்வது எல்லாம் சரியே ஆனால் இந்த அறிவு பூர்வமான புரிதலில் சிலருக்கு உறுதிப்பாடு கிடைப்பது சற்று கடினம். இவர்கள் #புத்தரின் 10 நாள் #விபாசனா சென்றார்கள் என்றால் அனுபபூர்வமாக உறுதிப்பட்டுவிடும். ஜே.கே, சொல்வதை புத்தர் அனுபவ பூர்வமாக உணர்த்திகாட்டி விடுகிறார்.
இதில் உயர்வு தாழ்வு என்பது இல்லவே இல்லை. இது எல்லாம் அவரவர் வாசனைகளை பொறுத்தது. அவ்வளவுதான். மொத்தத்தில் எல்லோரும் இறைநிலையை நோக்கியே பயணித்து கொண்டு உள்ளோம்.
ஆன்மிகம் என்பதே அனைவரையும் முக்தியை நோக்கி அழைத்து செல்வதே இதற்க்கு பல வழிமுறைகள் உள்ளன. இந்த முறைகள் எல்லாம் அவரவர் மன அமைப்பை பொறுத்து அமைகிறது.
மனதை கடப்பதற்கு இரண்டு வழிகள். கடப்பது என்றால் எண்ணமற்ற நிலை அல்ல. எண்ணங்களின் மீது பற்றில்லாமல் பிரவாகமாக இயங்குவதே.
எண்ணத்தின் செயல் அதன் பிடியில் இல்லாமல் நம் பிடியில் இருப்பது.
அது அடிமை; நாம் எஜமான்.
ஒன்று அதை அடக்கி, அடக்கி விழிப்புணர்வு பெறுவது. இது #யோகமார்க்கம்.
இரண்டாவது மனதை புரிந்து கொண்டு அதை அலட்சியபடுத்தி விழிப்புணர்வு பெறுவது.
இது #ஞானமார்க்கம்.
சமாதி நிலையில் இருப்பது என்பது ஞானம் அல்ல, பிரவாகமாக இயங்குவதே ஞானம்.
"ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்"
- திருமூலர்.
ஆரம்ப நிலை சாதகருக்கு ஒரு ஸ்தூல குரு தேவைப்படலாம்.
சிலர் "தத்தாத்ரேயர்" போல இந்த #பிரபஞ்சமே_குருதான் என்பார்கள்.
சிலருக்கு ஸ்தூல குரு தேவைப்படாது. இவர்களுக்கு அவர்கள் #மனமே_குரு அவ்வளவுதான். இதைத்தான் சித்த வித்தை சிவானந்தர் சொல்லுவார். மனமே குரு என்று.
புத்தர், ரமணர், ஓஷோ, ஜே.கே, இயேசு, நபிகள் போன்ற எல்லோருக்கும் அவர்களது மனமே குரு.
குரு தொட்டு காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது என்பார்கள். இறைவனாகிய குரு ஸ்தூலமாக வந்து தொட்டும் காட்டுவார். சூட்சமாமாக மனதின் மூலமும் தொட்டு காட்டுவார்.
ஆனால் இன்று போலிகள் ஸ்தூலத்தால் மட்டுமே தொட்டு காட்ட முடியும் என்று மக்களை குழப்பி பணம் பறித்து கொண்டுள்ளனர்.
இவை எல்லாமே அவரவர் போன பிறவியில் விட்ட இடத்தை பொறுத்ததே. இதில் எதுவும் குறையே கிடையாது.
ஞானம் எல்லா இடத்திலும் எளிமையாக உள்ளது. அறியாமையால் மறைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இவை #அனைத்தும் ஒரு #திருவிளையாடலே!!!
இந்த பிரபஞ்சத்தில் எது வேண்டுமானாலும் உங்க ஸ்விட்சை ஆன் செய்துவிடும்.
புரிதல் எங்கு எப்படி நிகழும் என்று யாருக்கும் தெரியாது அதை எதிர்பார்த்தாலும் அது நடக்காது. எப்படியோ அது நிகழ்ந்துவிடுகிறது. இதன் பின்பு நான் என்ற தன்மையை இழந்து பிரவாகமாக இயங்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
இது சில கணத்தில் நிகழ்வதே.
இதன் பின்பு உங்கள் மனம் வேறு ஒரு பரிணாமத்தில் இயங்கும். அன்பும், கருணையும் இயல்பாக மாறிவிடும்.
இறை(குரு) கொடுப்பதும் கருணையால்; கொடுக்காமல் இருப்பதும் கருணையால்.
காத்திரு, நடக்க இருப்பது சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான காரணத்துடன் நடக்கும்.
- புத்தர்.
The higher power knows what to do and how to do it. Trust it.
- ரமணமகரிஷி.
No comments:
Post a Comment