இதிகாசம் வாழ்க்கையில் சோதனை என்பது எல்லோருக்கும் உண்டு

அதில் --ஏழை ,பணக்காரன்,ஆத்திகன் ,நாத்திகன் ,இறையடியார்கள் ,,,ஏன் இறைவனே பிறப்பெடுத்து வந்தாலும் நிச்சயம் அவனுக்கும் பல சோதனைகள் உண்டு

---ராம-ராஜ்ஜியம் --மக்கள் எல்லோரும் ராமன் பொற்கால -ஆட்சியில் ---பேரானந்தமாக வாழ்ந்தனர் --

அந்த நேரம் பார்த்து சோதனையாக ---துர்வாச-மாமுனிவர் தன் சீடர்களுடன் ராமனை காண அயோத்தி வந்தார் .

---இதையறிந்த அயோத்தி -- மக்கள் --மற்றும் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயத்தோடு அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றனர் --

காரணம் துர்வாசர் கோபப்பட்டு சபிப்பதில் வல்லவர் ---மற்ற முனிவர்கள் எல்லாம் கோபப்பட்டு சபித்தால் தங்கள் தவ -சக்தியில் ஒரு பகுதியை இழந்துவிடுவர் பின் மீண்டும் அந்த இழந்த சக்தியை பெற பலவருடங்கள் தவம் மேற்கொள்ளவேண்டும் ---

ஆனால் துர்வாசர- முனிவரோ கோபப்பட்டு சபித்தால் அவர் தவ-சக்தி பலம் பெருகும் அதனால் அவர் வெகு எளிதில் கோபப்பட்டு சபித்து விடுவார் ----

சீடர்களுடன் தன் அவைக்கு வந்த துர்வாசமுனிவரை வரவேற்ற ராமன் -அவர் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்து ஒரு ஆசனத்தில் அமரவைத்து பாத பூஜை செய்து --மகரிஷியே தாங்கள் வேண்டுவது யாதாகினும் கூறுக அடியேன் செய்ய காத்திருக்கிறேன் என்றான் ---

ராமரை ஆசிர்வதித்த துர்வாசர் --ராமா--நான் கேட்க போகும் விருந்து உபசரனையும்---என் சிவ-பூஜைக்கு ஏற்ற மலர்களையும் நீ ஏற்பாடு செய்தால் போதுமானது --

ராமர் --மகரிஷி வேண்டும் வண்ணம் அடியேன் செய்து தருகிறேன் ---

-துர்வாசர் --ராமா சொன்ன சொல் தவறாதவனே கேள் --

என் சிவ-பூஜைக்கு -- இந்த உலகில் உள்ளோர் எவருமே இதுவரை அர்ச்சிக்காத பூ ஒன்றை நீ எனக்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் ----

அடுத்து பூஜை முடிந்த கையோடு--எனக்கும் என்னோடு வந்துள்ள சீடர்கள் யாவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்து தரவேண்டும் ஆனால் அந்த உணவானது --

நீர் மற்றும் நெருப்பு இல்லாமல் சமைத்த உணவாக இருக்கவேண்டும் ---இவை இரண்டையும் ஏற்பாடு செய்க நாங்கள் யாவரும் நீராடி விட்டு வருகிறோம் என்று கூறி கிளம்பிவிட்டார் துர்வாசர் ---

துர்வாசர் கூறியதை கேட்ட மக்களும் அவையினரும் அதிர்ச்சியாகி விட்டனர்

ஐயோ அது எப்படி முடியும் நீரும் -நெருப்பும் இல்லாமல் ஒரு சமையல் அதே போல் உலகில் இதுவரை எவருமே அர்ச்சிக்காத மலர் --கடவுளே எங்கள் ராமருக்கு ஏன் இந்த சோதனை என்று கலங்கினர்---

ஒரு சார மக்கள் நம் ராமர் நிச்சயம் இதை செய்து முடிப்பார் என்று நம்பினர்--ஒரு சார மக்கள் ---தங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கினர் .

ராமருக்கு துர்வாசரால் எந்த சாபமும் வரக்கூடாது என்று ---ஒரு சார மக்கள் ---ஒரு வேளை ராமனால் துர்வாசர் கூறிய இரண்டையும் செய்ய முடியாமல் போய் --ராமரை அவர் சபிக்க நேர்ந்தால் தாங்கள் அந்த சாபத்தை ஏற்க தயாராய் காத்திருந்தனர் ----

ராமர் எந்த வித சலனமும் இல்லாமல் புன்னகையோடு அயோத்தி நதிக்கரையோரம் வந்து தன் வில்லை எடுத்து நாண் ஏற்றி இரண்டு ஓலைகள் அஸ்திரத்தில் கட்டி விண்ணை நோக்கி செலுத்தினார் ----

விண்ணோக்கி சென்ற அவர் எய்த அஸ்திரம் நேராக இந்திரலோகம் சென்று இந்திரன் முன் நின்றது --அஸ்திரத்தை கையிலெடுத்த இந்திரன் அதில் உள்ள இரண்டு ஓலைகள் எடுத்து முதல் ஓலையை படிக்கலானான் --

அதில் --தேவேந்திரா நான் அயோத்தி மக்களின் அன்பை பெற்ற ராமன் துர்வாச-மகரிஷி கூறிய இரண்டு வித வேண்டுதலுக்கு செவி சாய்த்து --உன்னிடம் இரண்டு உதவிகள் பெற என் அஸ்திரத்தை ஏவியுள்ளேன் --

முதல் உதவி தேவலோகத்தில் மட்டுமே உள்ள பாரிஜாத மலர்கள் சிலவற்றை அஸ்திரத்தோடு இணைத்து அனுப்பவும்

---அடுத்து எதை கேட்டாலும் கொடுத்தருளும் கற்பக -விருட்சக-மரத்தையும் என் அஸ்திரத்தோடு சேர்த்து அனுப்புவாயாக என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றிருந்தது

---அந்த ஓலையில் எழுதியிருந்த வாசகத்தை தன் அவையோரிடம் காட்டிய இந்திரன்

தேவர்களே ஒரு-போதும் தேவலோகத்துக்கு கிடைத்த பொக்கிஷங்கள் பூலோகத்துக்கு எடுத்து செல்ல அனுமதியளிக்க கூடாது என்று கூற அவையோரும் அதை ஆமோதித்தனர் ---

அப்போது அங்கே அந்த அவையில் அமர்ந்திருந்த நாரதமஹரிஷி தேவேந்திரா அஸ்திரத்தில் உள்ள இரண்டாவது ஓலையில் என்ன எழுதியுருக்கிறது என்று படித்துவிட்டு பின் ஒரு முடிவுக்கு வா என்று யோசனை கூற --

-இந்திரன் இரண்டாவது ஓலையை பிரித்து படித்தான்--

அதில்---தேவேந்திரா என் அன்பிற்கு இணங்கி நீ என் அஸ்திரத்தோடு பாரிஜாத -மலர்களையும் --கற்பக -விருட்சக -மரத்தையும் அனுப்பவில்லை என்றால் ---எனது அஸ்திரமானது உன்னை வென்ற ராவணனை வதம் செய்த அஸ்திரம்...

மேற்சொன்ன இரண்டையும் நீ அஸ்திரத்தோடு இணைத்து அனுப்பவில்லை என்றால் இந்திரலோகத்தில் உள்ள நீ முதற்கொண்டு யாவரையும் வதம் செய்து பின் நான் கேட்ட இரண்டையும் கொண்டு வரும் வல்லமை அதற்கு உண்டு ----இரண்டில் எது சிறந்தது என்று யோசித்து செயல்படு என்று எழுதியிருந்தது ----

-நாரதர்----தேவேந்திரா--ராமனின் பெருமையே ---ஒரு சொல்--ஒரு வில் --ஒரு இல் --தான் அதனால் ராமருக்கு அவர் கேட்ட இரண்டு பொக்கிஷத்தையும் அவர் கேட்டவண்ணமே அஸ்திரத்தோடு அனுப்பிவிடு என்று கூற --

தேவேந்திரனும் அவ்வாறே செய்தான் ----

-நீராடிவிட்டு வந்த துர்வாச -முனிவர் சிவ-பூஜைக்கு மலர் கேட்க பாரிஜாத மலர் கொடுக்கப்பட்டது ----

அடுத்து நீர் -நெருப்பு இல்லாமல் உணவு தயாரா என்று கேட்க ----கற்பகவிருட்சக மரம் கொண்டு வரப்பட்டு துர்வாசர் உணவாக கேட்டதெல்லாம் பரிமாற பட்டது ---

ராமனின் விருந்தோம்பலில் வயிறார உணவருந்திய துர்வாசர் ராமனை தனி ஒரு அறைக்கு அழைத்து சென்று ---

ராமரை வணங்கி பரந்தாமா என்னை மன்னித்துவிடு தெய்வங்கள் மனிதர்களை சோதிக்கலாம் ஆனால் மனிதர்கள் தெய்வத்தை சோதிக்க தகுதியுண்டோ ---என்று கண்கலங்க

ராமர் --மகரிஷி பூலோகம் என்று வந்துவிட்டாலே சோதனை என்று வந்துவிடும் யாவருக்கும் அதில் மனிதன் ---தெய்வம் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது ---

சோதனையை கண்டு துவளாமல் மனிதன் சோதனையை சாதனையாக்கி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் ---என் அயோத்தி மக்கள் யாவரும் உங்கள் சாபத்துக்கு பயந்து அஞ்சினர் .

ஆனால் உங்களால் பாரிஜாத மலர்கள் இந்த அயோத்திக்கு வரவழைக்க பட்டன

---இதனால் அயோத்தி முழுவதும் சுபிட்சம் ஏற்பட்டுவிட்டது ---மகரிஷி என்னை ஆசீர்வதியுங்கள் என்று ராமர் அவர் பாதம் பணிய --

துர்வாசர் ராமரை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார் ---
ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே

---நண்பர்களே உங்களுக்கு வரும் சோதனைகளை --ராம நாமம் கூறிக்கொண்டே சோதனைகளை சாதனையாக மாற்றி காட்டுங்கள்

நிச்சயம் ஜெயம் உண்டாகும் ---அதுவே நமக்கு ராம-ஜெயமாகும் !

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...