12_ராசிக்காரர்கள் செய்ய_வேண்டிய_தானங்கள்

ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.

விருச்சகம்:

விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்...!

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...