ஸ்ரீ மாதா லலிதாம்பிகை
பெற்றெடுத்த பிள்ளை-எங்கள் ஸ்ரீ பாலா பெருமைக்கு
நிகர் எதுவும் இல்லை !!
பட்டத்து இளவரசி எங்கள்
அன்பு பாலா - இந்த
பார் புகழும் அருளரசி எங்கள் அன்னை பாலா !! 1
அன்னையவள் மந்திரமோ
ஸ்ரீ வித்யா வாகும் - அருட்
பிள்ளையவள் மந்திரமோ
ஸ்ரீ வித்யா பாலா !!
ஆற்றலிலே லலிதைக்கு நிகர்
எங்கள் பாலா! - நல்
ஏற்றமதை வழங்குதில் வள்ளல் எங்கள் பாலா !! 2
தந்தையின்றி தரணியிலே
பிறந்த மகள் பாலா - எம்
சிந்தையிலே நிறைந்திட்ட
விந்தை மகள் பாலா !!
ஜபமாலையும் புத்தகமும்
கையில் கொண்ட பாலா-வீண் ஜபதபங்கள் தேவையில்லை எனச் சொன்னவள் பாலா!! 3
அன்னையோடு போரிட்ட பண்டன்
எனும் அரக்கன் - அவன்
பிள்ளைகளை போர் செய்ய
அனுப்பி வைத்த கிருக்கன் !!
பண்டனவன் பிள்ளைகளோ
போரிட வந்தார்கள் - பெரும்
சண்டைபோட நினைத்தவர்கள் சத்தம் போட்டார்கள். !! 4
போருக்குச் சென்றிடவே
பாலாவும் நினைத்தாள்- அங்கு போக வேண்டாம் எனச் சொல்லி தாயவளோ தடுத்தாள் !!
சேயவாளோ போய் வருவேன் என்றே அடம் பிடித்தாள்- அன்பு
தாயவளோ மனம் மாறி கவசம் ஒன்று கொடுத்தாள் !! 5
சின்ன சின்ன ஆயுதங்கள்
அன்னையவள் தந்தாள்-பாலா சின்னதொரு புன்னகையை
பரிசாகத் தந்தாள் !!
கர்ணீரதம் என்கின்ற ரதம்
ஒன்றை படைத்தாள் - அதை
கனிவுடனே தன்னுடைய
மகளுக்கு கொடுத்தாள் !! 6
படைகளுடன் புடைசூழ
பாலாவும் சென்றாள் - எதிர்
படைகளையே சிதறடித்து
சிரிப்புடன் வலம் வந்தாள் !!
பண்டனவன் பிள்ளைகளோ
சண்டை போடவில்லை- அங்கு சண்டை போட நினைத்தவர்கள் உடலில் தலை இல்லை !! 7
கோபத்தோடு உக்ரகமாக
சண்டையிடுதல் வழக்கம்-பெரும் வேகத்தோடு போர்புரிதல் பலருக்கும் இங்கு பழக்கம் !!
வீரமோடு செல்பவர்க்கே
வெற்றி கிடைக்கும் பாராய்-என்று சொன்னவரின் கணிப்புகளை மாற்றி விட்டாள் பாலா !! 8
சிரித்து கொண்டே போர் புரிந்தாள்
எங்கள் சின்ன பாலா - அந்தச்
சிரிப்பினாலே வெற்றியினை
பரித்துக் கொண்டாள் பாலா
நூற்றி எட்டு சக்திகளும் போற்றி புகழ் பாட. -- போரில்
வெற்றிக் கொடி நாட்டி விட்டு
தாயிடமே வந்தாள் !!! 9
No comments:
Post a Comment