18 சித்தர்களுக்கும் நம் வாழ்க்கை முறைகளுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு , ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யோகா பயிற்சிமுறை , சூர்யநமஸ்கரம், உணவு பழக்க வழக்கங்கள் , தெய்வ வழிபாடுகள், குரு வழிபாட்டுமுறை போன்ற இன்னும் பல தொடர்புகள் நாம் அன்றாட வாழ்க்கையில் நடைமுறையில் கொண்டுவர முயற்சிசெய்துகொண்டிருக்கிறோம்,
இப்படிப்பட்ட 18 சித்தர்களில் ஒருவர் தான் பதஞ்சலி சித்தர் ஆவார், இவரை மகரிஷி பதஞ்சலி என்று அழைப்பார்கள் , இவர் விஷ்ணுவின் படுக்கையான (சர்ப்பம்) ஆதிஷேசனின் அம்சமாக திகழ்கிறார். ஒருமுறை சிவன் ருட்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும்பொழுது ஆதிசேஷனால் அந்த அதிர்வுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் திருமாலின் படுக்கையை அசைக்க தொடங்கியது , அப்பொழுது திருமாலிடம் ஆதிசேஷன் இந்த அதிர்வுகளை பற்றியும் சிவனின் ருட்ரதாண்டவத்தை பற்றியும் கேட்டார், அதற்கு திருமால் சிவனின் யோக பயிற்சி முறையே இந்த அபார சக்திக்கு காரணம் என்று கூறினார், மேலும் யோக பயிற்சி நினைத்ததை முடித்து வைக்கும் வல்லமைபடைத்தது என்றும் கூறினார். இதனால் ஆதிசேஷனும் தாம் யோக வல்லமையை கற்க வேண்டும் என்று பிற்காலத்தில் பதஞ்சலியாக பிறந்தார் என்பது சித்தர்கள் குறிப்பு.
இப்படிப்பட்ட பதஞ்சலி சித்தரின் காயத்ரி மந்த்ரிரத்தை நாம் தினமும் பாராயணம் செய்து வழிபட்டால் அனைத்து காரியங்களும் கைகூடும் என்பது சித்தர்களின் வாக்கு , மேலும் இந்த காயத்ரி மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே ஒன்பது கோடி முனிவர்களும் தேவர்களும் அருள்புரிவார்கள்.
பதஞ்சலி சித்தரின் காயத்ரி மந்திரம் :
“ஓம் சிவதத்வாய வித்மஹே
யோகாந்தராய தீமஹி
தந்நோ பதஞ்சலி குரு ப்ரசோதயாத்."
No comments:
Post a Comment