முழுமுதற் கடவுளான விநாயகருக்கே தந்தை தான் சிவபெருமான் சிவபெருமானின் சொந்தம் என்று பார்த்தால் அது பார்வதி தேவியும் அவர்களை சார்ந்த மூன்று மகன்களும் தான் அப்படிப்பட்ட சிவனுக்கு சகோதரி என்று ஒருவர் இருந்துள்ளார் அந்த சகோதரியை கயிலாயத்தை விட்டு பார்வதி தேவி தான் விரட்டி அடித்துள்ளார்
சிவபெருமானின் சகோதரி பெயர் அஷாவாரி என்று சிவபுராணத்தில் குறிப்பிட்டுள்ளது ஈசனுக்கும் பார்வதிக்கும் திருமணம் முடிந்து பார்வதி தேவி தன்னுடைய புகுந்த வீடான கயிலாயத்திற்கு வந்துள்ளார் அங்கு பார்வதி தேவி தன்னுடைய குடும்பத்தினரையும் தன் சகோதரியையும் பிரிந்து மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார் சிவபெருமான் தியானம் முடிந்து எழுந்ததும் பார்வதி தேவி தன்னுடைய ஆசையை சிவபெருமானிடம் கூறியுள்ளார் தனக்கு ஒரு பெண் தோழி வேண்டும் என்றும் தன்னுடைய ஆசை மற்றும் கவலைகளை அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்
கயிலாயத்தில் பார்வதி தேவியை தவிர மற்ற அனைவரும் ஆண்களாகவே இருந்துள்ளனர்.
இதற்கு சம்மதித்த சிவபெருமான் ஒரு நிபந்தனையையும் விதித்தார் அவர்களை வாழ்நாள் தோறும் பார்வதி தான் பார்த்து கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை அதற்கு பார்வதியும் சம்மதித்தார் மரணத்தின் கடவுளான சிவபெருமானுக்கு ஒரு பெண்ணை எப்படி உருவாக்குவது என்று தெரியவில்லை அதனால் தன்னை மனதில் நிறுத்தி தன்னை போலவே ஒரு பெண்ணை படைத்தார் அந்த பெண் சிவபெருமான் போலவே இருந்துள்ளார் பார்வதி இந்த பெண்ணை பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார் அந்த பெண்ணிற்கு தேவையான அனைத்து பணிகளையும் பார்வதி செய்தார் ஒரு நாள் அந்த பெண்ணிற்கு உணவு கொடுத்த போது அந்த பெண்ணிற்கு எவ்வளவு உணவு கொடுத்தும் பசி அடங்கவில்லை மேலும் மேலும் உணவை கேட்டு கொண்டே இருந்தார் கயிலாயம் முழுவதும் உணவு தீர்ந்தது பொறுக்க முடியாத பார்வதி தன்னுடைய நிலையை விளக்க சிவனிடம் வேகமாக சென்ற போது கீழே விழுகிறார் அந்த நேரத்தில் அஷாவாரி தன் கால்
விரல்களால் பார்வதி தேவியை மறைக்கிறார்.
அங்கு வந்த சிவபெருமான் பார்வதி எங்கே என்று கேட்டதும் தனக்கு தெரியாது என்று கூறுகிறார் உண்மையை அறிந்த சிவபெருமான் அஷாவாரியை எச்சரிக்கிறார் அஷாவாரியின் நடவடிக்கையை கண்டு கோபம் கொண்ட பார்வதி அஷாவாரியை கைலாயம் விட்டு செல்லுமாறு கூறிவிட்டார் ஆனால் பார்வதி கொடுத்த வாக்கை சிவபெருமான் நியாபகபடுத்தினார் இதனால் மன்னிப்பு கேட்டார் பார்வதி அதனால் அஷாவாரிக்கு மீண்டும் ஒரு ஜென்மம் கொடுத்து சில நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க வேண்டும் என்று சிவபெருமான் கூறினார் அஷாவாரி நல்ல பழக்கங்களுடன் மீண்டும் வந்தார் பார்வதியும் அந்த பெண்ணை ஏற்று கொண்டார் ஆனால் சிவபெருமான் அதை ஏற்க மறுத்துவிட்டார் காரணம் ஒருவர் மோசமான நிலைமையில் இருக்கும்போது நீ அவர்களை ஆராதிக்கவில்லை என்றால் அவர்கள் நல்ல நிலைமையில் இருக்கும்போது அவர்களை உரிமை கொண்டாட உனக்கு உரிமை இல்லை என்று சிவபெருமான் கூறிவிட்டார் இந்த கதை நமக்கு உணர்த்துவது என்ன என்றால் ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது உதவுவது தான் உண்மையான உதவி அவர்கள் நன்றாக இருக்கும்போது உதவுவதில் எந்த பயனும் இல்லை.
No comments:
Post a Comment