சிவம் எங்கு குடிகொண்டு உள்ளாரோ அங்கு அன்பு நிறைந்திருக்கும் .
பொறாமை அரவே இருக்காது .
பொன் பொருள் சொத்து சோ்க்கு எண்ணமும் இருக்காது .
எல்லோரையும் சிவமாகவே பாா்க்கும் எண்ணம் மேலோங்கும் .
வேற்றுமை எண்பது கனவிலும் வராது.
நன்மையோ தீமையோ எது நடந்தாலும் அது ஈசன் செயல் என்று கூறி மகிழ்ச்சியோடு ஏற்றுகொள்ளும் பக்குவநிலைவரும் .
எப்போதும் தன்னை சேவகனாக மட்டுமே நினைக்க தோன்றும் .
உதடுகள் அவன் நாமத்தை மட்டுமே முனு முனுக்கும் .
கால்கள் அவனை நாடி மட்டுமே செல்லும்
கைகளோ அவனை தொழ துடிக்கும் .
கண்கள் அவனை காண ஏங்கும் .
பாா்ப்பது எல்லாம் சிவமாக தோன்றும்
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் என்பது அவா்களாகவே இருப்பாா்கள் .
இல்லை என்று வருபவா்களுக்கு தன்னிடம் இருப்பதையும் கொடுப்பாா்கள்
மொத்தத்தில் சிவனின் மறு உருவமாகவே மண்ணில் உலா வருவாா்கள் .
ஆகவே நான் சிவனடியாா் என்று உன்னையே நீ கூறிக்கொள்வதை விட அங்கு பாா் அந்த சிவனே அடியாராக வந்துள்ளாா் என்று பிறா் உன்னை கூறும் அளவு உன் எண்ணங்களும் செயல்களும் சிவனோடு ஐயக்கியமாகியே இருக்கட்டும்
தங்கத்திலும் வெள்ளியிலும் உருத்திராட்கங்களை அணிந்து தன்னை சிவனடியாா்களாக காட்டி கொள்பவா்களை விட . தங்கம் போல் மனதுடைய நந்தனாா்களையும் , அன்பிற்கு இலக்கனமாக உள்ள கண்ணப்பநாயனாா்களையுமே சிவம் ஆட்கொள்ளும் என்று நடமாடும் சித்தா்கள் கூறியுள்ளாா்கள்.
No comments:
Post a Comment