கர்ம வினை
கர்ம வினை என்பது முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் கணக்குப்படி இப்பிறவியில் நாம் அனுபவிக்கும் நன்மை தீமைகளை குறிக்கும்.
கர்மவினை மனிதனுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் பொருந்தும்.
இது இயற்கையின் விதி..!
பிறப்பு இறப்பை தரும் கர்மவினையால் உருவாகும் விதியை வென்றால்
பரம்பொருள் ஈசனின் பாதங்களில் கலந்திடும் பெரும்பேறு கிடைத்திடும் ..!
இந்த விதியை வெல்ல மதியால் மட்டுமே முடியும்.
மதி என்ற சந்திரனை பிறை நிலவாக சூடியுள்ள சிவன்பெருமான் தான் அந்த மதி.
ஒருவர் சிவ வழிபாட்டை முழுமையாக செய்கிறாரோ அவரின் கர்ம வினை நீங்கி விடும்..
சிவத்தோடு ஒன்றிடும் பெரும்பேறு கிட்டிடும் .!
இதைத்தான் மாணிக்கவாசக பெருமான் ,
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் !
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இங்கு வீடு உற்றேன் !
என்று சிவபுராணமாக அருளியுள்ளார்
No comments:
Post a Comment