நமது உடல் சூட்டினை தணிக்க வேண்டுமென்றால் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். ஆனால் தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.
ஒவ்வொரு நாளிற்கும் ஒவ்வொரு சிறப்பு இருப்பது போன்று தினமும் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. இதைப் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
• *ஞாயிற்றுக்கிழமை* - மனவருத்தத்தை ஏற்படுத்தும்.
• *திங்கட்கிழமை* - உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
• *செவ்வாய்க்கிழமை* - உடல் நலக்குறைவை ஏற்படுத்தும்.
• *புதன்கிழமை* - செல்வத்தை அதிகப்படுத்தும்.
• *வியாழக்கிழமை* - உடல் நலத்தை பாதுகாக்கும்.
• *வெள்ளிக்கிழமை* - அதிக செலவை ஏற்படுத்தும்
• *சனிக்கிழமை* - விரும்பியவற்றை அடைய வழிவகைக்கும்.
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நம் தலையை எண்ணெய் தேய்பதற்கு வலது கையினை மட்டும் பயன்படுத்த வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடவை தேய்த்து கொள்ள வேண்டும்.
இடது கையினைப் பயன்படுத்தி ஒருமுறை எண்ணெய் தலையில் தேய்பது என்பது கர்மம் செய்பவர்கள் பின்பற்றும் முறையாகும். எனவே மற்ற நேரங்களில் இதை தவிர்த்து விட வேண்டும்.
No comments:
Post a Comment