( ஒரு மாம்பழத்திற்காக அம்மையப்பனிடம் கோவித்துக்கொண்டு தன் மயில் வாகனத்தில் பழநிமலை செல்லும் வழியில் இந்த மலையில் சற்று நேரம் தங்கிச்சென்றாராம் 'எனை ஆளும் ஆண்டவன்' எம்பெருமான் முருகன். குமரன் தங்கிச் சென்ற மலை என்பதால் "குமரகிரி" என்று அழைப்படலாயிற்று. இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டாயுதபாணியாக அருட்காட்சியளிக்கிறார்.
மாம்பழம்தான் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ( சேலத்து மாம்பழம் சிறப்புற்று இருக்க காரணம் தெரிந்து கொண்டீர்களா..) சுமார் 1500-படிக்கட்டுகள் கொண்ட இம்மலைக் குன்றுக்கு, வாகனங்களில் செல்ல மலைப்பாதையும் உள்ளது. ஆயுள் விருத்தியாக, தடைபட்ட திருமணம்,குழந்தை பேறு மற்றும் செய்யும் தொழில் சிறப்புக்கும் படி பூஜையும், திரிசதை அர்ச்சனையும் இங்கு செய்வது விசேஷம்.)
No comments:
Post a Comment