சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாடு



சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான நந்தி தேவர்தான்.

தட்சனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் சாப விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும் சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். ஆனால் அந்த சாபம் சிவனை வந்தடைந்து சிவன் தேய ஆரம்பித்தார். இது கண்டு மனம் வருந்திய நந்தி தேவர் அன்னை சக்தியை சிவலிங்க பீடத்தில் அமரச்செய்து முறைப்படி பிரதோச பூசை செய்தார். இதன் பலனாக சிவனும் சாபவிமோசனம் பெற்றார்.

 நந்திதேவர் செய்த பூசையானது கொடிமரத்தையும், பலிபீடத்தையும் இடது புறமாக கடந்து நந்திக்கு முதற் பூசை செய்து பின் பிரதட்சணமாக தட்சிணாமூர்த்தி வரை சென்று பின் அப்பிரதட்சணமாக நந்திக்கு பின்புறமாக சண்டிகேசர்வரை சென்று பின் மீண்டும் பிரதட்சணமாக நந்தி தேவர் வரை வந்து நந்தி தேவரிற்கு வலதுபுறம் நின்று கொம்புகளிற்கிடையில் பார்வையை மட்டும் செலுத்தி "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் சௌம் நமோ பகவதே” என்ற சக்தித் தாயின் வசிய மந்திரத்தை ஜெபித்து பூசை செய்தார்.

இந்த மந்திரத்தினை சிவாலயத்தில் 108 தடவைக்கு குறையாமல், 48 நாட்கள் தொடர்ந்து, செபித்து வந்தால் நாம் நமது ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். நமக்கு முன் ஏழு தலைமுறையினர் அதாவது பித்ருக்கள் செய்த பாபத்தினால் ஏற்பட்ட சாபம், பாவம் அனைத்தும் நீங்கும். என்பது நந்தி தேவர் வாக்கு.

நந்தி தேவர் வழிபட்ட பாதையை  கவனித்தோமானால் ஒரு திரிசூலம் அமையும்.

பிரதோச சூட்சுமம்


14 நாட்கள் - வளர்பிறை (தேவர்கள்)
14 நாட்கள் - தேய்பிறை (அசுரர்கள்)

மீதி இருக்கும் 2 நாட்கள் முறையே பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகும்.

நமது தின உணவு சுழற்சியை பாற்கடலை கடைவதற்கு ஒப்பிடலாம். அந்த உணவு சுழற்சியில் (வளர்பிறை மற்றும் தேய்பிறையில்) வரும் 12 நாட்களில் உண்ட உணவிலிருந்து உருவான, வெளியேற்ற முடியாத நச்சுகளை உடல் சேகரித்துக்கொள்ளும். அந்த நச்சுகளை உடலில் இருந்து வெளியேற்ற, 13வது நாளான திரயோதசியில் விரதம் உபசரிப்பத்தற்கு பெயரே பிரதோச விரதம். இந்த விரதகாலத்தில் அனுஷ்டிக்கப்படும் பிரதட்சணத்தின் பெயர் சோமசூத்க பிரதட்சணம் எனப்படும். இது உடலில் உள்ள நஞ்சை வெளியேற்ற உதவும். இதுவே ஆலகால விசத்தை சிவபெருமான் உண்டதாக கூறப்படும் பிரதோச சூட்சுமம்.

அவ்வாறு நஞ்சு வெளியேற்றப்பட்ட உடல், பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று பொலிவு பெறும், இதனால் நீண்டநாள் நோயின்றி உயிர்வாழ முடியும். இதுவே பாற்கடலில் அமிர்தம் கிடைத்ததாக சொல்லப்படும் உவமை. இந்த பிரதோச விரதம் உடலை தூய்மை செய்ய என்பதே உண்மை.

பிரதோசத்தின் மகிமை :

சிவபெருமான் ஆலகால விடத்தை அருந்திய நேரம்தான் பிரதோச வழிபாடாக செயல்படுகிறது.

ஒரு பிரதோசம் பார்ப்பது பதினைந்து நாட்கள் கோவிலுக்குச் சென்று வந்த பலனைக் கொடுக்கும். பதினோரு பிரதோசம் பார்ப்பது ஒரு கும்பாபிசேகம் பார்த்த பலனைக் கொடுக்கும். நூற்று இருபது பிரதோசம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

சிவாலயங்களில் சிறப்பான வழிபாடு
மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும்.

பிரதோச விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு சகல
செல்வங்களும் வந்து சேரும் என்பது திண்ணம். துன்பங்கள் [ விக்கினங்கள் ]
அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எம்பெருமான் விக்னேசுவரன் என்றும் அழைக்கப் பெறுகிறார். இம்மையிலும்,
மறுமையிலும், அறிந்தும், அறியாமலும் செய்யும் பாபமாகிய தோசங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாட்டிற்கு பிரதோசகால வழிபாடு அதாவது பிரதோசம் எனப் பெயர் வழங்குகிறது.

கிறித்துவ மதங்களில், பாவ மன்னிப்பு என்று ஒரு முறை உண்டு. அம்முறையில், மத குருமார்களின் காதில் சென்று தான் செய்த பாவத்தைக் கூறி அதற்கு மன்னிப்பும் கேட்கப்படும். மத குருவும் ஆண்டவரிடம் அந்த பக்தரின் சார்பில் பாவ மன்னிப்புக் கோரி தூது செல்வதாக ஐதீகம்.

இது போலத்தான் நம் இந்து மதத்தில், சைவாகமத்தில், இந்த பிரதோசகால வழிபாடு அமைந்துள்ளது எனலாம். ப்ர - தோசம் - மிக்க தோசம், எனப் பொருள்.

அதாவது, போக்குதற்கு இயலாத எத்தகைய தோசமாக இருந்தாலும் அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டதுதான் பிரதோசவழிபாடு.

பிரதோச காலத்தில் சிவபெருமான் நந்தியெம்பெருமான் விருப்பப்படி நர்த்தனக் காட்சி அளிக்கின்றார். நந்தியெம்பெருமானுக்கு அபிசேக ஆராதனை செய்து, விடையின் மேல் உலகையே ஆளுகின்ற சக்தியாகிய பராசக்தியுடன் சிவபெருமான் எழுந்தருளி அடியவருக்கு நித்திய ஆனந்தம் அளிக்கின்றார்.

பிரதோச காலத்தில், விரதமிருந்து வழிபடும் அடியார்களுக்கு கடன், நோய், தரித்திரம், மனக்கவலை, மரணபயம், மன சோர்வு, கோபம், மோகம், பயம் போன்றவைகளால் வரும் தோசங்கள் அனைத்தும் அறவே நிவர்த்தி ஆகும் என உத்தரகாரணாகமம் இயம்புகின்றது.

பசுவின் திருமேனி, பிற உயிரினங்களின் சரீரங்களைக் காட்டிலும் பல்வகையிலும்
மேன்மையுடையதாகும். இல்லத்தையும், மற்ற இடங்களையும், பசுவின் சாணம் மற்றும் கோமயம் கொண்டு சுத்தம் செய்வது வழக்கத்தில்உள்ளது.

 அக்காலந்தொட்டு, வீட்டு வாசலை அதி காலையில் பசுஞ்சாணம் கொண்டு மெழுகுவதால் இலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என பெரியோர் கூறுவர்.

ஆகவே, தருமத்தின் சொரூபமாக விளங்கும் விடையின் மேல் ஏறி வலம் வருகின்றார் இறைவன், இப்பிரதோச காலத்தில். தேவர்கள் வாழும் பொருட்டு நஞ்சை உண்டு, கண்டத்தில் தாங்கி, நஞ்சுண்ட கண்டனாக அருள்பாலித்து, அமிர்தத்தை  அவர்களுக்கு வழங்கிய காலம் இப்பிரதோச காலமாகும்.

இப்பிரதோச நாளில் வழிபடும் அன்பர்கள் வேண்டுவன அனைத்தையும் பெற்று மேன்மையான வாழ்வைப் பெறுவார்கள் 

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...