மீனாட்சிஅம்மனின் ரோஸ் பீட்டர் காலணிகள் .


திரு ரோஸ் பீட்டர் என்பவர் மதுரைக்கு 1812 முதல் 1828 வரை கலெக்டராக இருந்தார்.   மக்கள் மீனாட்சியை வழிபடுவது கண்டு அவருக்கு ஆச்சரியம்.   ஆனால் அவருக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.

இருந்தாலும் அவருக்கு அம்பிகை மீனாக்ஷி மீது அளவு கடந்த மரியாதை.   இவ்வளவு மக்கள் வழிபடும் அந்த மீனாக்ஷி பற்றி சிந்தனை அதிகம்.   ஒரு சமயம் பெரும் மழை இடி எடுத்துக்கொண்டிருக்கும் போது இரவு வேளையில் அந்த கலெக்டர் தன் "கலெக்டர் மாளிகை" (தற்போதும் உள்ளது) விட்டு தனியே தூக்கத்தில் வெளியே சென்றார்.

காவலர்களுக்கு கலக்கம்.   ஆனால் எதிர்பாராத படி அவர் இருந்த அறை மீது பெரும் இடி விழுந்து சேதமாகிவிட்டது.   அப்போதுதான் கலெக்டருக்கு சுய நினைவு வந்தது.    ஏதோ தூக்கத்தில் இருந்து எழுந்தவர் போல் விழித்துக் கொண்டிருந்த அவரிடம்  அவர் உதவியாளர்கள் கேட்டபோது,

ஒரு இளம் பெண் -- நான் கனவில் பார்த்துக் கொண்டிருந்த அந்த மீனாட்சிபோல், நகைகள் போட்டுக்கொண்டு, என்னை முன்னே  அழைத்துச்செல்ல நானும் #அந்த #தெய்வஉருவத்தின்
#பின்_சென்றேன் என்றார்.     அது தான் #மனசால்_வணங்கிய #அம்பிகை_மீனாட்சிதான் என்று உணர்ந்தார்.

#தன்னை_காப்பாத்திய அந்த அம்பிகைக்கு ஏதாவது ஒரு காணிக்கை செய்ய விரும்பி, கோவில் நிர்வாகத்தினரிடம், #அம்பிகைக்கு_இல்லாத ஒரு ஆபரணம் #சொல்லுங்கள் அதை #நான்_காணிக்கையாக #தர_விரும்புகிறேன் என்றார்.   அவர்களும், #அம்பிகைக்கு ஒரு #காலணி_தாருங்கள் என்றனர்.

#கலெக்டர்_தங்கத்தால் இரண்டு காலனி செய்து, அதில் 412 பவளங்களும்,  72 மரகதக் கற்கள் - 80 வைரக்கற்கள் பொருத்தி - அதில் ""பீட்டர்"" என்று பதித்து காணிக்கையாக கொடுத்தார்.  இந்த காலனி இன்றும் ""#சித்திரைத்திருவிழா""  #காலத்தில் #அணிவிக்கிறார்கள்.

அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? இரண்டுக்கும்_வித்தியாசம் என்ன?

பகவான் ராமகிருஷ்ணரிடம் பாடம் படிப்பதில் நிறையப் பயன்கள் உண்டு. அவர் எந்த ஒரு விஷயத்தையும் மிக மிக எளிமையாக விளக்குவார்.

            புரியாததைப் புரிய வைப்பார். அன்றாட வாழ்க்கையில் உள்ள எளிய உதாரணங்களைக் கூறி தெளிவடையச் செய்வார். அவற்றுள் ஒன்றுதான் இது:

                   பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர்.

                   அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது.

"    #அறிவு என்றால் என்ன?#ஞானம் என்பது எது? " என்று குருவிடம் கேட்டனர்.

                அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாள்கள்பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்க வில்லை. இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை.

               பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு  #ஞானம்_என்பது_எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்'' என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார்.

              அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார்.

               முதல் மாணவனைப் பார்த்து, "நான்போய் வந்த அறையினுள் #மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா''# என்றார்.

              அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களில் பால் இருந்தது.

              #தங்கத்தம்ளரில் இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான்.,

              அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான்.

           ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட   #வெள்ளி தம்ளரில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு#   ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான்.

              மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க, வெள்ளி தம்ளர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.

               எனக்கு வெண்கல தம்ளர் பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு இளப்பமானவனா? எந்தவிதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்?' என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின.

                  ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் சுரத்தே இல்லை!

               பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து, "பாலைக் குடித்தீர்களா" என்றார். #முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன், "தங்கத் தம்ளரில் பால் குடித்தேன்.

              நான் மிகவும் கொடுத்து வைத்தவன், குருவே!'' என்றான். இரண்டாவது மாணவன்,    "எனக்கு தங்கத் தம்ளரில் பால் கிடைக்க வில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் #வெள்ளி# தம்ளரிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது, குருஜி'' என்றான்.

             மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. அதனூடேயே அவன், #மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருஜி. எனக்கு வெண்கலத் தம்ளரில்தான் பால் கிடைத்தது'' என்றான்.

             பகவான் ராமகிருஷ்ணர் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டபின் பேச ஆரம்பித்தார். "மாணவர்களே! தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களிலும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும்பால்தான் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை.

             பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும், சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு.

               பால் ஊற்றி வைத்திருக்கும் தம்ளர்களின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம், சுவை, ருசி ஆகிய அனைத்தும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை.

            ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள்! பாத்திரத்தைப் பார்த்து சந்தோஷப்படுவது அறிவு. அதில் உள்ள பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம். ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள்.

                பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண்சட்டியில் ஊற்றிக்கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள்''

            "நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் மூவருமே ஒரேமாதிரியான மனோநிலையை எட்டியிருப்பீர்கள்!''

           பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும், ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது...

வீண் பழி சுமத்துவது "பாவம்"

ஒரு அரசன் ஒரு புலவருக்கு விருந்தளித்து கொண்டிருக்கையில்...

வானில் ஒரு கழுகு, பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.

பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.

அரசன் அந்த உணவை அந்த புலவருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.

அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைபயன்களை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு...!

இந்த கர்மவினை பயனை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.

கழுகிற்கா?
பாம்பிற்கா?
அல்லது
அரசனுக்கா?

கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை.

விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை.

அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது.
அது அவனும் அறியாமல் நடந்த விஷயம்.

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன்,
சற்று நேர சிந்தனைக்குப் பிறகு,
"இதற்கான விடை விரைவில் கிடைக்கும்...! அதுவரை பொறுமையாக இரு" என அறிவுறுத்தினான்.

ஒரு சில நாட்கள் கழித்து,
மற்றொரு புலவன்
அரசனின் உதவியை நாட...!

அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணியிடம் வழி கேட்டார்.

அப்பெண்மணியும் அவருக்கு சரியான பாதையை கூறியதோடு நில்லாமல்...!

"இந்த அரசன் புலவர்களை கொல்பவன்...!
அவரிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள்..." என்றும் கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும் தான், அடுத்த நொடி சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது.

*புலவரை கொன்ற கர்மாவின் வினை பயன் முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும்* என்று.

*காரணம்*

மற்றவர்கள் மீது *வீண் பழி* சுமத்தும் போது...!
அதன் *பாவம்* பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்.

*உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை பயனை அவர் அனுபவித்தே தீர வேண்டும்.*

*எனவே, ஒரு விஷயத்தை திரித்து, பொய் சொல்லி, மற்றவர்கள் மீது பழி சுமத்தும் ஒவ்வொருவரும்...!*

*அதற்கான வினைபயனை விரைவில் அனுபவித்தே தீர வேண்டும்.*

ஆகவே,
*உண்மைகளை மட்டுமே சொல்லுவோம்...!*

*நன்மைகளை மட்டுமே பெறுவோம்...!*

நெருப்பில் முடி பொசுங்க கூடாது என்று கூறுவதின் ரகசியம்:

இன்றளவும் கிராமப்புரங்களில் நெருப்பில் முடி பொசுங்க கூடாது எனக்கூறுவார்கள்.
அதுவும் வீட்டினுள் நெருப்பில் தெரிந்தோ, தெரியாமலோ வெட்டப்பட்ட உதிர்ந்த முடிகள் எரியக்கூடாது, மகா தரித்திரம் அப்போதே பிடிக்கும் எனபார்கள்.

இதன் ரகசியம்தான் என்ன?
கைமுடியானாலும். தலைமுடியானாலும். பறவைகள். மிருகங்கள் முடியானாலும்,வெட்ட வெட்ட வளரக்கூடியது . அதில் ரத்தம் உண்டு, பார்ப்பதற்கு தெரியாது.
ஆனால் அது தீயில் பொசுங்கும் போது தெரியும், அதன் வாடையே அதற்கு சாட்சி .

ஒரு உயிரை எரிக்கும் போதும். முடியை எரிக்கும்போதும் ஒரே வாசனை (வாடை) வரும். இந்த துர்நாற்றம் லட்சுமி வாசம் செய்வதற்கு ஏற்றதல்ல .
அதனால்தான் அக்காலத்திலேயே பிணத்தை எரிப்பதானாலும் ஊரின் மேற்கே (காற்று திசையில்) கொண்டு சென்று எரித்தார்கள்.
இந்த வாடையை முகர்ந்தவர் யாரானாலும் 16-நாள் தொடர்ந்து தலைக்கு குளித்து வர வேண்டும், இல்லையேல் தரித்திரம் தான் பிடிக்கும்.
முடியானாலும் இதே நிலைதான், அதுமட்டுமல்ல கருவாடு. இறைச்சி எந்த வீட்டில் தீய்ந்து போகிறதோ அந்த வீடும் வெகுவிரைவில் கீழ்நிலைக்கு வரும்.
தீப்புண் பட்ட குடும்பமும் தரித்திரத்திற்கு ஆட்பட்டு பின்புதான் மீளும்.
அதே போல் கொசுவானாலும் வீட்டில் இறக்கலாம், ஆனால் தீய்ந்து போகக்கூடாது.

இப்போது நவீனமாக கொசுவை கொள்ள எலக்ட்ரானிக் பேட் வந்துள்ளது .
இதை பலரும் பயன்படுத்துகிறார்கள், இந்த பேட்டில் கொசு தீய்ந்து போகிறது, குடும்ப சுகமோ செல்வமோ குறைந்து கொண்டே வருகிறதை ஆய்வு மூலம் பலரிடம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
ஓட்டல்களில் ஈ தொல்லை தீர ஒரு நீலவண்ண மின்சார குழல் விளக்கு எரியும். அதன் ஈர்ப்பு ஈ. கொசு. சிறு வண்டுகளை கவர்ந்து ,அந்த விளக்கை சுற்றி சுற்றி வரும். அதற்காகவே அந்த குழல் (டியூப் லைட்) விளக்கின் பக்க வாட்டில்  மின்சார ஹீட்டர் பொருத்தி இருப்பார்கள். அதில் அகப்பட்டு அனைத்தும் பொசுங்கும். அதை பொருத்தி  இருந்த பல ஓட்டல் உரிமையாளர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள்.

அதாவது செல்வமற்று. சுகமற்று. கடன்பட்டு. தொழில் கைமாறி ஓடும் அளவிற்கு தரித்திரம் ஆட்கொண்டதை ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
நரிக்குறவர்களை கடந்த காலங்களில் கவனித்திருந்தீர்களேயானால் எந்த இறைச்சியாகட்டும் தீயில் பொசுக்கி சாப்பிடுவார்கள். அதனால் அவர்கள் நாடோடி வாழ்க்கையுடன் யாசகம் பெற்றே உயிரையும். உடலையும் வளர்க்க வேண்டியதாயிருந்தது .
அந்த அளவிற்கு தரித்திரம் அவர்களை ஆட்கொண்டது.

அதே நேரத்தில் இன்றைக்கு அவர்களை பார்த்தீர்களேயானால் இறைச்சியை சுட்டு பொசுக்கி தின்னும் பழக்கத்தை நாட்டு சூழ்நிலையால் விட்டு விட்டார்கள்.
இப்போதைக்கு அவர்கள் நன்றாகவே வளர்ச்சி கண்டிருக்கிறார்கள்.
அன்றைக்கு செய்த அதே தொழில்தான் இன்றைக்கும் செய்கிறார்கள்.
அன்றைக்கு அவர்களுடைய பழக்கம் இறைச்சியை சுட்டு பொசுக்கி தீய்த்து சாப்பிட்டார்கள், தரித்திரம் பிடித்திருந்தது.

அதை மாற்றிக் கொண்டு கிடைத்த இறைச்சியை சமைத்து சாப்பிடுகிறார்கள், பெரும் தரித்திரத்தில் இருந்து மீண்டு சாதாரண தரித்திர நிலையில் உள்ளார்கள்.
இதுதான் வித்தியாசம். ஆக முடி. நகம். இறகு , உரோமம். சதைகள் தீயில் கருகினால் அது வீடாக இருந்தால் மகா தரித்திரம் பிடிக்கும். காடாக இருந்தாலும் இவைகள் பொசுங்குவதை அடிக்கடி முகரும்படி ஆட்படாதீர்கள் ,கவனமாக இருங்கள்.

சாதாரண சைவ சமையல் செய்யும்போது கூட கடாய் தீயக்கூடாது என்பார்கள். கடாயில் அடியில் தீய்ந்து போனதில் சாப்பாடு சாப்பிடக்கூடாது, தரித்திரம் பிடிக்கும் என்பார்கள்.
இவைகளெல்லாம் மறுக்க முடியாத உண்மையே. நெருப்பில் முடி பொசுங்குதல் , கடாய் தீய்ந்து போகுதல் போன்ற சூழலில் ஏழைகள் இயல்பாகவே ஆட்படுகிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் கடைசி வரை ஏழையாய் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.

யாகம் வளர்க்கும் போதும் கூட யாக தீயில் முடியோ,பூச்சிகளோ விழுந்து தீய்ந்து போனால் நிச்சயம் முழு பலன் கிடைப்பதில்லை. இது தெரியாமல் நிகழக்கூடிய நிகழ்வானாலும் அதன் துர்நாற்றம் (வாடை) லட்சுமி கடாட்சத்தை விலக்கி விடும். நம் கையில் உள்ள ரோமம் தீ பட்டு லேசாக பொசுங்கினாலும் உடனே அவ்விடத்தில் மஞ்சள்தூள் குழப்பி பூசி விடவேண்டும். அப்போதுதான் தரித்திரம் பிடிக்காது.
எந்த ஒரு தரித்திர தீட்டிற்கும் மஞ்சள் நீர் சிறந்த பரிகாரமாகும்.

அசைவம் சாப்பிடுபவர்கள் அக்காலத்திலேயே இதை நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் கோழியை,பன்றியை இறைச்சியுண்பதற்காக கொன்று அதன் ரோமத்தை முதலில் தீயில் பொசுக்குவார்கள். பொசுக்கிய பின்னர் அந்த தரித்திரம் பாதிக்காதிருக்க மஞ்சள் தூள் அதன் உடல் முழுக்க பூசுவார்கள்.
பிற்காலத்தில் வந்தவர்கள் தீய்ச்சல் வாடை போவதற்காகவும்,உணவின் ருசிக்காகவும்மஞ்சள் பூசுவதாக கருதினார்கள்.உண்மையில் அவ்வாறுஇல்லை.

தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணையிலோ அதன் உறையிலோ மேற்புறத்தில் எண்ணெய் படிவம்  படிந்துஇருக்கும். மற்ற எண்ணெய்க்கும் முடியில் ஊறிய எண்ணெய்க்கும் முகர்ந்து பார்த்தால் வாடையில் வித்தியாசம் தெரியும்.
( சிக்கு வாசனை என்பார்கள்)
அந்த தலையணையை நெருப்பில் எரிக்கக்கூடாது, பயன்படுத்திய பின் பழுதானால் தூக்கி போட்டு விடலாம்,
ஆனால் நெருப்பில் போடக்கூடாது,
மகா தரித்திரம் பிடிக்கும்.

நம் முடி எண்ணெய் பட்ட எந்த துணியும் எரியவிடக்கூடாது .
போகி பண்டிகை அன்று சிலர் பழைய துணி தலையணை இவைகளை எரிப்பதுண்டு .
அதில் இதுபோல எண்ணெய் துணி எரிந்தால் மகா தரித்திரம் அவரை வந்து அடையும்.

சிறப்பு_வாய்ந்த_திருவாரூர்

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று.

திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள்.

தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),

100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.

இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர்.

திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.

கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.

இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.

அபிஷேகத்திற்கு
பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும்.

அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும்.

மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.

திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.

தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

கமலாலயம்..
.........................

லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, திருவாரூர் தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள்.

எனவே இங்குள்ள தீர்த்தம் “கமலாலயம்‘ எனப்படுகிறது.

பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம்.

குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது.

நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

இங்குள்ள நாகநாதரை வழிபாட்டால் நாகதோஷத்தால் தடைப்படும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும்.

ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.

இதை “நித்திய பிரதோஷம்” என்பார்கள்.

இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம்.

எனவே, இந்தக் கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.

தல வரலாறு :
...........................
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது.
அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான்.
அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார்.
தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.

தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.

முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.

வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான்.

அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது.

மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன.

இவை “சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன.

“சப்தம்‘ என்றால் ஏழு.

திருவாரூரில் “வீதி விடங்கர்’,

திருநள்ளாறில் “நகர விடங்கர்’,

நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்’,

திருக்குவளையில் “அவனி விடங்கர்’,

திருவாய்மூரில் “நீலவிடங்கர்’,

வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்’,

திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்’ என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன.

இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும்.

சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை “தியாகராஜர்’ என்பர்.

பிரதான மூர்த்திகள் :
.......................... .................
திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர்.
அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள்.

இறைவன் சூரிய குலம்;

அம்பிகை சந்திர குலம்.

வன்மீகரின் வலப்பக்கத்தில் -
தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜர்.

ஓம் நமசிவாய .

மாவிலை தோரணம்



* விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீர வழிபிறக்கும்.

* லக்ஷ்மி கடாக்ஷம்

* எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்

* நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்.

* தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்.

* மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது.

* பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது.

குரூரம்மாவின் கிருஷ்ண பக்தி


வில்வமங்கலம் ஸ்வாமிகள்  பூஜை செய்யும்போது கண்ணனை நேரிலே காண்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஒரு சமயம், ஒரு பிராம்மணனுக்கு வயிற்று வலி வந்தது. எல்லா மருத்துவர்களிடம் காண்பித்தும் வயிற்று வலி தீரவேயில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. வில்வமங்கலம் ஸ்வாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அவன், தனது வலி தீர வழி சொல்லும்படி அவரைக் கேட்டான். ஸ்வாமிகள்  கண்ணனைக் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் பூஜையின் போது கண்ணனிடம் அது பற்றிக் கேட்டார். பகவானும் அது கர்ம வினையினால் என்று சொன்னார். வினை தீர வழி என்ன என்று அவன் கேட்க, ஸ்வாமிகளும், முற்பிறப்பில் செய்த தீமையால் வரும் இந்த வினை தீர வழியில்லை என்று சொன்னார். அவனும் தான் வினைப்பயனை நொந்துகொண்டு, வயிற்றைப் பிடித்துக் கொண்டு சென்றான்.

செல்லும்போது வயிற்று வலி அதிகமாகி விடவே, அங்கு இருந்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். அது குரூரம்மாவின் வீடு. அவன் வயிற்றியப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவள், பசி என்று நினைத்து உணவளித்தாள். அவன் மிகவும் வருந்தி, தனக்கு வயிற்று வலி இருப்பதால் ஒரு பருக்கை கூட சாப்பிட முடியாது என்று கூறினான்.

அதைக் கேட்ட அவள், சிறிதும் தயங்காமல், "மகனே, ராமா, ராமா என்று ஜபிக்க ஆரம்பி, நம்பிக்கையோடு சொல், சரியாகிவிடும்" என்று சொன்னாள். அவனும் நம்பிக்கையோடு சொல்ல ஆரம்பித்தான். அவள் எப்போதும் ராமா, கிருஷ்ணா என்று நாம ஜபம் செய்வதால் அவளைவிட சிறந்த குரு வேறு யார் இருக்கமுடியும்?  சிறிது நேரத்திலேயே வலி சற்றே குறைந்தது போல் இருந்தது. இப்போது அவள், அவனிடம், "சரி, நீ அருகிலுள்ள குளத்திற்குச் சென்று, கிருஷ்ண நாமத்தைச் சொல்லிக் கொண்டே முங்கிக் குளித்துவிட்டு வா, சாப்பிடலாம்" என்று சொன்னாள். அவனும் அவ்வாறே "கிருஷ்ணா, கிருஷ்ணா" என்று சொல்லிக்கொண்டு முங்கி எழுந்தான். என்ன ஆச்சர்யம்!!!! அவனது வயிற்று வலி முற்றிலும் நீங்கிவிட்டது.  அவன் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று மிக்க மகிழ்ச்சியுடன் உணவை உண்டுவிட்டு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டான். அதன் பிறகு அவன் பக்தியுடன் எப்போதும் ராமநாமத்தையும் கிருஷ்ணநாமத்தையும் ஜபித்து வந்தான்.

ஒரு முறை, ஒரு  கதாகாலட்சேபத்தின் போது வில்வமங்கலம் ஸ்வாமிகளைக் கண்ட அவன், இந்த சம்பவத்தைக் கூறி, குரூரம்மாவால், தனது வயிற்று வலி தீர்ந்தது என்று சொன்னான்.

அடுத்த நாள் பூஜையின் போது, ஸ்வாமிகள் கண்ணனிடம், "கண்ணா, நீ இப்படிச் செய்யலாமா? நீ 'கர்மாவினை'என்று சொன்னாயே தவிர, நாமஜபத்தால் வலி சரியாகும் என்று சொல்லவேயில்லையே?" என்று கேட்டார்.

கண்ணன் சிரித்துக் கொண்டே, "ஆமாம் கர்மவினை என்று சொன்னேன், நாமஜபம் செய்தால் .தீரும் என்று சொல்லவில்லை. வில்வமங்கலத்திற்கு நாமஜபம் அனைத்துப் பாபங்களையும் போக்கும் என்று தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் குரூரம்மாவிற்கு இருக்கும் நம்பிக்கையில், துளி கூட உனக்கு இல்லையே!" என்று கூறினார்.

பகவானான கண்ணனே இவ்வாறு சொல்வதைக் கேட்ட வில்வமங்கலம், குரூரம்மாவின் பக்திக்குத் தலை வணங்கினார்.
--------
ஸ்ரீ கிருஷ்ணாய துப்யம் நம:
ஸ்ரீ குருவாயூரப்பா ஶரணம்.
ஓம் நமோ நாராயணாய.
--------

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்?



அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.

`அஷ்டபந்தனம் என்றால் என்ன?’’

''கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள்.

அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.

'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'

இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.

இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...