ஹரேகிருஷ்ணா
மஹாபாரதத்தில்
ஒரு நாள் ஒரு பழ வியாபார பாட்டி நந்தமகாராஜாவின் அரண்மனை வாசலில் யாருக்கெல்லாம் பழம் வேண்டுமோ வந்து வாங்கிக் என்று பழங்களின் பெயர்களை சொல்லி கூவிக்கூவி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.
இதை அரண்மனைக்குள் இருந்து கேட்ட குழந்தை கிருஷ்ணர் தனது கைகளில் தானியங்களை எடுத்துக்கொண்டு பழம் வாங்க சென்றார்.
தனது தாய் தந்தையர் பண்டமாற்று முறையில் பிறரிடமிருந்து பொருட்களை வாங்குவதை குழந்தை கிருஷ்ணர் கவனித்து இருந்ததால் தானும் ஏதாவது கொடுத்தால் மட்டுமே பழங்கள் வாங்க முடியும் என்று கொஞ்சம் தானியங்களை கைகளில் அள்ளிக் சென்று கொடுத்து பழம் வாங்க வந்தார்.
ஆனால் அவர் மிகவும் சிறு குழந்தையாக இருந்ததால் அவர் நடந்து வரும்போது தானியங்கள் எல்லாம் கீழே சிந்திவிட்டது குழந்தையல்லவா!
சிறிய கை அல்லவா! அவர் கைகளில் அவ்வளவு தானியம் பிடிக்கவில்லை கீழே சிந்தி கொண்டே வந்தது .
இறுதியில் பழ வியாபாரியிடம் வந்தபோது கண்ணனின் கைகளில் தானியங்கள் எதுவுமில்லை ஒன்று இரண்டு தானியங்கள் மட்டுமே உள்ளங்கையில் ஒட்டி இருந்தது அதைக் கொடுத்து அவர் பழம் கேட்டார். சிறிய குழந்தையான கிருஷ்ணரின் வெகுளித்தனத்தை மிகவும் ரசித்து
குழந்தை கிருஷ்ணரின் முக அழகை கண்டதும் அந்த பழ வியாபாரி #தன்னை_மறந்து கூடையிலிருந்த பழங்களில் சில பழங்களை எடுத்து குழந்தை கிருஷ்ணரின் கைகளில் அடுக்க ஆரம்பித்து விட்டாள்.
அவள் கிருஷ்ணருக்கு ஒவ்வொரு பழங்களாக எடுத்துக் கொடுக்க கொடுக்க அவள் பழக்கூடை
தங்கம்
வைரம்
வைடூரியம்
என ஐஸ்வர்யங்களால் நிரம்பி வழிந்தது.
அதாவது
பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஒருவர் கடவுளுக்கு ஒன்றை கொடுத்ததால் அவர் நஷ்டம்_அடைவதில்லை பதிலுக்கு திரும்ப அவர் கொடுத்ததை விட கோடிக்கணக்கான மடங்கு கிடைக்கிறது.
பகவானுக்கு தொண்டு செய்பவர்கள் பகவானுக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் இந்த உலகத்தில் நஷ்டம் அடைவதே இல்லை
ஹரே கிருஷ்ணா நெல்லை
No comments:
Post a Comment