1. வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.
2.வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாகும்.
3.நீர் சத்து இழந்து தோல் வறட்சியாவதை தடுக்கிறது .
4. தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்கு போக்கக்கூடியது.
5. குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை போக்கும்.
6. தோல் அலர்ஜிக்கு சிறந்த மருந்து .
7. காயம் ஏற்பட்ட இடத்தில் தடவினால் சீக்கரம் காயம் குணமடையும்
8. தோல் வறட்சியை போக்கும்.
9. வேப்ப எண்ணெயில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளததால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கும்.
10. தொடர்ந்து வேப்ப எண்ணெய் உடலில் தடவி வந்தால் சருமம் மெருகேறும்.
11. கரும்புள்ளிகள் மறையும் .
12. படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்து.
13. தேங்காய் எண்ணெயில் 10:1 என்ற விகிதத்தில் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.
14. தலை பேன் பிரச்சனை நீங்கும்.
15. அடர்த்தியான கூந்தைளை பெறலாம்.
16. முடி பிளவை தடுக்கும்.
தோல் மற்றும் முடி தவிர, வேப்ப எண்ணெய் புண்கள், புற்றுநோய் மற்றும் நாட்பட்ட வைரஸ் தொற்று போன்ற பல உடற்கூறான வியாதிகளுக்கு நம்பகமான தீர்வாகும். வேப்ப எண்ணெயில் சில சுகாதார நலன்கள் உள்ளன.
17. அஜீரண கோளாறு மற்றும் வயிற்று புண்ணுக்கு உகந்தது.
18. வாய் துர்நாற்றத்தை போக்கும்.
19. இதனை புற்று நோய் உள்ளவர்களுக்கு
மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்
20. வேப்ப எண்ணெய் அனைத்து பல் பிரச்சினைகளுக்கும் ஒரு மிகவும் பயனுள்ள வாய்மொழி தீர்வு. ஈறுகள், பல்வலி அல்லது மூச்சுத் திணறல், இரத்தக் கசிவு, வேப்பிலுள்ள ஆண்டிசெப்டிக் பண்புகள் ஈறுகளையும் பற்களையும் ஆரோக்கியமாக வைக்க நிரூபிக்கப்பட்டுள்ளன.
21. கொசு தொல்லையில் இருந்து விடுபட வேப்ப எண்ணையில் விளக்கை ஏற்றினால் கொசு தொல்லை இருக்காது.
22. சில சொட்டு வேப்ப எண்ணெயை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.
இன்னும் எண்ணற்ற நலன்கள் வேப்ப எண்ணெய்யில் உள்ளது.
நல்ல தூய்மையான கலப்படம் இல்லா எண்ணெயை பயன் படுத்துங்கள்.
No comments:
Post a Comment