#அன்புடன் அகஸ்த்தியதேவி,,.
#ஆத்மாவை தீ சுடுவது இல்லை. நீர் நீறம்பபடுத்துவதில்லை. ஆயுதங்கள் ஊனப்படுதுவது இல்லை. காரணம், ஆத்மாவிற்கு அழிவே இல்லை. ஆத்மா தற்காலிகமாக வாழுகின்ற இந்த உடல் மட்டும் தான் மரணத்தால் அழிந்து போகிறது. வாழுகிற வாழ்க்கையில், நாம் செய்த வினைப்பயனாக கிடைக்கின்ற பாவ புண்ணியங்களை அனுபவிப்பதற்கு ஆத்மா வேறொரு உடலை நாடி போகிறது.
#பற்றுகளை விட்டு விட்டால், ஆசைகளை துறந்துவிட்டால், செயல்களால் ஏற்படும் பலன்களை தியாகம் செய்து விட்டால், கர்ம வினைகள் அற்றுப் போய்விடுகின்றன. இதனால், பிறப்பற்ற நிலை ஏற்படுகிறது. பொய்மையிலிருந்து உண்மைக்கு வருவது போல, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதை போல, இறப்பிலிருந்து இறவாமைக்கு வருவது தான் உண்மையான முக்திநிலை என்று பல உபநிடங்கள் ஓங்கிய குரலில் உறுதியாக பேசுகின்றன.
#ஜீவன் என்பது பல்லாயிரம் பிறவிகளை எடுத்து, இறுதியாக எடுத்திருக்கும் பிறவியே மனிதப்பிறவியாகும். மனிதனாக பிறந்திருப்பது பாவத்தின் சம்பளத்தால் அல்ல. அறிய தவத்தின் பலநாள் ஆகும். காரணம், தெய்வமாக இருந்தால் கூட அது மனிதனாக பிறந்தால் மட்டுமே முக்தி என்ற உயரிய நிலையை அடைய இயலும் .
#கர்மா ஏற்படுத்திய தடைகளில் கட்டுப்பட்டு கிடக்கிற ஆத்மா ஜனனம், மனனம், மரணம் என்ற சக்கரத்திற்குள் அகப்பட்டு கொண்டு, வெளியே வரமுடியாமல் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்த சக்கரத்தை உடைத்து விட்டால் கர்மாவை முற்றிலுமாக அழித்து விட்டால் ஆத்மா, அளவிட முடியாத அறிவு, அளவிட முடியாத சக்தி, அளவிட முடியாத ஆனந்தம் போன்றவற்றை தருகின்ற முக்தி நிலையை கைவல்ய நிலையை அடையலாம்.
#முக்தி நலையை
நிர்வாண நிலை என்று சித்தர்கள் கூறுகிறார். விளக்கில் உள்ள தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பு எங்கே இருந்ததோ அணைக்கப்பட்ட பிறகு எங்கே செல்கிறதோ, அந்த மஹா சூன்யத்தில் நிரந்தரமாக கலந்துவிடுவது தான் நிர்வாணம், முக்தி .
No comments:
Post a Comment