வெள்ளியங்கிரி மலை


வெள்ளியங்கிரிமலையில் ஈசனை தரிசிக்க வேண்டுமானால் கண்டிப்பாக ஏழு மலையைத் தாண்டி பயணம் செய்ய வேண்டும்.

 ஏழு மலையும் அற்புதம் நிறைந்து.

 நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் ஆகிய உலகைக் காக்கும் பஞ்ச பூதங்களின் அதிர்வுகள் ததும்பும் அருள்மிகு பஞ்சலிங்கேசன் திருக்கோவில் அமைவிடம்.

 இயற்கையெழில் மிக்க பூண்டி மலைச்சாரல். வெள்ளியங்கிரி ஈசனின் உறைவிடம்.

 சித்தர்கள் வாழ்ந்த வெள்ளியங்கிரி மலையின் வாசற்படியாக பூண்டி
திகழ்கிறது.

ஆன்மீகச் சிறப்பு கொண்ட மலையடிவாரமாகவும் பூண்டி விளங்குகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில், மேற்கு மலைத் தொடரில், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பூண்டி அமைந்துள்ளது.

கோவையிலிருந்து 40 கி.மீ தூரத்தில் சிற்றூரான பூண்டி அமைந்துள்ளது.
வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் பூண்டி அடிவாரத்திலிருந்து மலையேறிச் செல்ல வேண்டும்.

ஏழு மலைகள் ஏறிச்சென்று, வெள்ளியங்கிரி ஈசனையும்,  சுயம்புலிங்கத்தைத் தரிசிக்கலாம்.


தை முதல் தேதியிலிருந்து வைகாசி விசாகம் வரை மலை பயணம் செய்யலாம்.

மலைப் பயணம் அதிகாலை வேளையில் தொடங்குவது வழக்கமாக உள்ளது.

வெள்ளியங்கிரி மலை கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் 6 கி.மீ மலைப்பயண தூரத்தில் அமைந்துள்ளது.

சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நிலையில் அமைந்துள்ளது.
மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது.

தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும்.

இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகி
றது.

சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும்.

ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது.

சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும்,
சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது.

மகாயோகி பழனி சுவாமிகள்,
சிவயோகியார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார்,சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும்.

கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளிங்கிரி.

இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும்.

இங்கு பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோயில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது.
சமீபத்தில் நான்கரை அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் திருவுருவ சிலை மற்றும்
63 நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டைசெய்துள்ளனர்.

கோயிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.

கோயிலைச் சுற்றி பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் சத்திரங்கள் உள்ளன.

கோயிலின் வடக்குப் பகுதியில்
ஐந்து விநாயகர் சிலைகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது.

அடுத்து கல்லினால் ஆன இராசி தூண். வேறு எந்த கோயிலிலும் காணப்படாத ஒன்று.

விரிந்த தாமரை மலரின் நடுவில் உள்ள தண்டில் 9 தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கி உள்ளனர்.

மேல் பகுதியில் ஒரு குடையும் அதன்மேல் ஓர் அழகிய அன்னப்பட்சியின் திருவுருவத்தை அமைத்துள்ளனர்.

விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் 12 ராசிகளை சிற்பமாக நேர்த்தியாக செதுக்கி உள்ளனர்.

இவை அனைத்தும் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

சிவபெருமான் குடிகொண்டிருக்கும் கைலாயம் மூன்று.

வடகயிலை என்பது வட துருவத்தில் கடலில் அமைந்துள்ளது.
மத்திய கயிலை என்பது இமயமலையில் உளளது.

தென் கயிலை என்பது தமிழகத்தில் கோவை நகரிலிருந்து சுமார்
30 கி. மீ. தொலைவிலுள்ள வெள்ளிங்கிரி, வெள்ளிமலை, தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரியில் அமைந்துள்ளது.
இதில் வடகயிலைக்கு செல்லவே முடியாது என்பர்.

மத்திய கயிலை அனைத்து மக்களும் சென்று தரிசனம் செய்வது என்பது சிரமமானது.

இந்த குறையை போக்கும் வகையில்தான் வெள்ளியங்கிரி கோயில் அமைந்துள்ளது.
இங்கு சென்று ஈசனை தரிசித்தால் இமயமலையில் உள்ள கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கிறது.

தமிழ், தெலுங்கு வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, கார்த்திகை ஆகிய நாட்களில் மலைமீது உள்ள சுவாமிகிரியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள்.

ஆனால் மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை ஆண்டு முழுவதும், அனைவரும் சென்று தரிசிக்கலாம்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார்.

தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது.

சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும், இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.

இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் 'வெள்ளியங்கிரி' என்ற பெயர் பெற்றது.

இந்த மலைப்பாதை சவால் நிறைந்த ஒன்று என்பதோடு மட்டுமில்லாமல் மனிதர்களை தாக்கும் விலங்குகள் வாழும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் இருக்கிறது.

இமய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு செல்ல முடியாதவர்கள் தென் கயிலாயம் எனப்படும் இந்த வெள்ளியங்கிரி மலைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

ரத்தினகிரி, தக்ஷின கைலாசம், பூலோக கயிலாயம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த மலையில் தான் தனது உமையாள் பார்வதி தேவியின் கோரிக்கைக்கு இணங்க பிரணவ தாண்டவத்தை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது.

இந்த வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை வர பிப்ரவரி முதல் ஜூன் மே மாதம் வரையிலான காலகட்டம் உகந்ததாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக சித்திரா பௌர்ணமி பண்டிகையின் போது ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருகின்றனர்.

12 - 45 வயதுடைய பெண்கள் இந்த மலையின் மீது ஏறுவதில்லை.

கோயம்பத்தூர் நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு காந்திபுரத்தில் இருந்து தினசரி நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மஹாசிவராத்தி போன்ற பண்டிகைகளின் போது சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இங்கே மலை ஏறுவதற்கு முன்பாக அடிவாரத்தில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

சுற்று
வட்டாரப்பகுதியில் தங்கும் விடுதிகள் எங்கும் இல்லை என்பதால் இந்த அடிவார கோயிலிலேயே பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.

வெள்ளியங்கிரி மலைமேல் அதிகாலை நிகழும் சூரிய உதயம் நாம் தவற விடக்கூடாத விஷயங்களில் ஒன்றாகும்.

படந்திருக்கும் பனி மெல்ல விலக இளஞ்சிவப்பு நிறத்தில் சூரியன் தன் கரம் பரப்புவது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

குறிப்பிட்ட சில மாதங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் தோன்றும் காட்டாறுகள், வேட்டையாடும் விலங்குகள் போன்றவற்றினால் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவது உயிருக்கே ஆபத்தான விஷயமாக முடியும்.(தடை விதிக்கப் பட்டுள்ளது)

இந்த மலையில் இன்றும் ஏராளமான சித்தர்கள் கண்களுக்கு புலப்படாமல் அரூபமாக தியானத்தில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகிறது.

இதனால் மலையேறும் போது கூடுமானவரை சத்தம் போடுவதை தவிர்க்கப்பாருங்கள்.

 கோவை காந்திபுரத்தில் இருந்து பேருந்தில் ஏறி பூண்டி செல்லும் பிரிவில் இறங்கினால் அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் பூண்டியை அடையலாம்.

ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி மந்திரம்



18 சித்தர்களுக்கும் நம் வாழ்க்கை  முறைகளுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு , ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யோகா பயிற்சிமுறை , சூர்யநமஸ்கரம், உணவு பழக்க வழக்கங்கள் , தெய்வ வழிபாடுகள், குரு வழிபாட்டுமுறை போன்ற இன்னும் பல தொடர்புகள் நாம் அன்றாட வாழ்க்கையில் நடைமுறையில் கொண்டுவர முயற்சிசெய்துகொண்டிருக்கிறோம்,

இப்படிப்பட்ட 18 சித்தர்களில் ஒருவர் தான் பதஞ்சலி சித்தர் ஆவார், இவரை மகரிஷி பதஞ்சலி என்று அழைப்பார்கள் , இவர் விஷ்ணுவின் படுக்கையான (சர்ப்பம்) ஆதிஷேசனின் அம்சமாக திகழ்கிறார். ஒருமுறை சிவன் ருட்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும்பொழுது ஆதிசேஷனால் அந்த அதிர்வுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் திருமாலின் படுக்கையை அசைக்க தொடங்கியது , அப்பொழுது திருமாலிடம் ஆதிசேஷன் இந்த அதிர்வுகளை பற்றியும் சிவனின் ருட்ரதாண்டவத்தை பற்றியும் கேட்டார், அதற்கு திருமால் சிவனின் யோக பயிற்சி முறையே இந்த அபார சக்திக்கு காரணம் என்று கூறினார், மேலும் யோக பயிற்சி நினைத்ததை முடித்து வைக்கும் வல்லமைபடைத்தது என்றும் கூறினார். இதனால் ஆதிசேஷனும் தாம் யோக வல்லமையை கற்க வேண்டும் என்று பிற்காலத்தில் பதஞ்சலியாக பிறந்தார் என்பது சித்தர்கள் குறிப்பு.

இப்படிப்பட்ட பதஞ்சலி சித்தரின் காயத்ரி மந்த்ரிரத்தை நாம் தினமும் பாராயணம் செய்து வழிபட்டால் அனைத்து காரியங்களும் கைகூடும் என்பது சித்தர்களின் வாக்கு , மேலும் இந்த காயத்ரி மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே ஒன்பது கோடி முனிவர்களும் தேவர்களும் அருள்புரிவார்கள்.

பதஞ்சலி சித்தரின் காயத்ரி மந்திரம் :

 “ஓம் சிவதத்வாய வித்மஹே
யோகாந்தராய தீமஹி
தந்நோ பதஞ்சலி குரு ப்ரசோதயாத்."

நாச்சியார் கோவில் கல் கருடன் அமைந்த விதம்.



தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன்

செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன்.
தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன்.
அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா" என்றார் தேவசேனாபதி.
சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பியையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.
இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறாய்?" என்றும் வினவினார்.
மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு" என்று.
‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.
மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன்.
மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.
இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்திவைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.
மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.
மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்."
மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம்வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.
சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.
மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.
பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.
செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.
தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் நிற்கிறது.
மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!.....

குருவின் சிறப்பு...!


இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த பகுதியிலும் ‘குரு’ என்கிற விஷயம் பற்றி பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு. இல்லையோ என்ற எண்ணமும் உண்டு. 

இந்த குரு ஆச்சார்யன் அல்ல, பாடம் சொல்லி கொடுக்கிறவரோ, வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ,
பழக்க வழக்கங்கள் சொல்லி கொடுக்கிறவரோ அல்ல. மதபோதகரும் அல்ல. ஒரு மதத்தின் சட்ட திட்டங்களை, ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.

ஒரு குருவிற்கு தந்தைக்குண்டான ரத்த பாசம் கிடையாது. ‘அவன் என் பிள்ளை. அவன் தவறே செய்யக்கூடாது, தவறு செய்தால் அவனைக் கண்டிப்பதற்குத்தான் நான் இருக்கிறேன்’ என்ற முரட்டுத்தனம் ஒரு குரு காட்டுவதில்லை.

பிரம்பால் விளாசுவதோ, பேச்சுகளை வகை தொகையின்றி வாரி இறைப்பதோ, உணவு உண்ணும்போது ‘தண்டச்சோறு’ என்று திட்டுவதோ அவருடைய வேலை அல்ல.

ஒரு தாயின் வெகுளித்தனமும் குருவிடம் கிடையாது. என் பிள்ளை என்ன செய்தாலும் என் பிள்ளை தானே, அவனை நான் பொறுத்துக் கொள்ளத் தானே வேண்டும். அவன் திருடனாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்கிற அதீதமான நெகிழ்வும் குருவிடம் கிடையாது.

ஒரு கணவனுக்கு உண்டான உரிமை போல எந்தவிதமான உபயோகப்படுத்தலும் குருவுக்கு இல்லை. மனைவியைப் போல நீங்கள் பேசுவதற்கெல்லாம் தலையாட்டுகிறவரும் அல்ல.

அப்படியானால் குரு சிநேகிதனா, இல்லை. அதற்கும் மேலே.

சிநேகிதனிடம் கூட ஒரு பொறாமை இருக்கும். உங்களோடு ஒரு போட்டி இருக்கும். தனக்கு பின் படியில் தன் தோழன் இருக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நானே கதாநாயகன் என்ற மமதை இருக்கும். அதற்கான முனைப்புகள் இருக்கும்.

குரு அப்படிப்பட்டவரும் அல்ல. ஆமெனில், குரு எப்படிப்பட்டவர்
என்ற ஒரு கேள்வி வருகிறது.

குரு என்பவர் ஒரு நேர்த்தியான மனிதர்.

கருணை என்றால் ஒரு வரம்புதான் இல்லையோ, குருவின் அருளுக்கொரு உவமைதான் சொல்லவோ” என்று ஒரு பாடல் உண்டு.

நேர்த்தியான மனிதர் என்பதற்கு ஒரு வரைமுறையே இல்லை. எல்லா இடத்திலும் செயல் நேர்த்தியும், சொல் நேர்த்தியும், யோசிப்பு நேர்த்தியும், பழகு நேர்த்தியும் கொண்டவர் குரு.

குறையே இல்லாதவர் குரு. உங்களுக்குக் குறையாகத் தென்பட்டதெல்லாம் பிறகு மிகப் பெரிய நிறைவாக வெகு சீக்கிரமே தெரிய ஆரம்பித்து விடும்.

அவரை மறுத்துப் பேசியதோ, கீழ்ப்படிய மறுத்ததோ எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று வெகு சீக்கிரத்தில் நிரூபணம் ஆகும். குருவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த இடம் சொல்லக் காரணம் என்ன.

அப்படி அவரிடம் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு யார் குருவாக முடியும் என்கிற உபகேள்வியையும் போட்டுக் கொண்டால் பதில் கிடைப்பது எளிதாக முடியும்.

விருப்பு வெறுப்பு இல்லாமல் எவர் நடுநிலையில் இருக்கிறாரோ அவரே நேர்த்தியான மனிதராக முடியும்.

எது குறித்தும் எப்போதும், எந்த நிலையிலும் விருப்பு வெறுப்பற்று இருத்தல், யோசிக்கும்போதே, பிரச்சனைகளை அணுகுகின்ற போதே, நடு நிலையில் நிற்றல். மதம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ, தேசம் சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ இல்லாத போது நடுநிலையில் நிற்றல் என்றால் என்ன என்பது புரியும்.

இப்படி மொழி, மதம், தேசம் சாராது எல்லோராலும் இருக்க முடியாது. அதற்கு மிகப் பெரிய நேசிப்பு தேவை. சகல உயிர்களையும் நேசிக்கிறவர் இவைகளையெல்லாம் கடந்து
வந்து நிற்பார்.

எவரும் எதிரியில்லா, எதுவும் எதிரியில்லா ஒரு நிலை வேண்டுமெனில் எதையும் சார்ந்திராத ஒரு தனிமை, ஒரு அமைதி, ஒரு சந்தோஷம் மிக முக்கியம்.

அந்த சந்தோஷமான அமைதி தான் ஒருவரை குருவாக்குகிறது. சகலமும் அறிந்த சாந்தம் ஒருவரைத் தெளிவாக்குகிறது. தெளிவானவர் தான் குருவாக உருவாக முடியும். ஏனெனில் அவர் எதையும் சாராதவர். எந்த பக்கமும் இல்லாதவர். எப்போதும் நடுநிலையில் நிற்பவர். எந்த பாசப்பிடிப்பிலும் சிக்கித் தவிக்காதவர்.

குரு எப்படி பேசுவார்?

அவர் இளம் வயதில் மரணமடைந்து விட்டாரா என்ன செய்வது, நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற சிறப்பு தான் உலகத்தின் இயல்பு . அடுத்தபடியாக ஆக வேண்டியதை கவனிப்போமே”

அடடே.. அவளுக்குக் குழந்தை பிறந்து விட்டதா . மிகவும் சந்தோஷம், பிறந்த குழந்தையின் மூலம் மகத்தான பணிகள் நிறைவேறட்டும், அன்பு பெருகட்டும், ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் அன்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். அன்பு அதிகரிக்க வேண்டும், அன்புதான் சந்தோஷத்தின் வெளிப்பாடு. நம்முடைய இயல்பு இடையறாத சந்தோஷத்தை நாடுவதுதான். சந்தோஷத்தைத் தேடித்தான் இத்தனை போட்டி, பொறாமைகள். ஆட்டம் பாட்டம் எல்லாம்” என்று விளக்கிச் சொல்வார்.

இந்த உலகத்தினுடைய பிரம்மாண்டத்தை, இந்த பிரபஞ்சத்தினுடைய பிரம்மாண்டத்தை, எல்லாக் கோள்களும் சரியாக அசைவதை, ஒழுங்காக நடப்பதை, சூரியன் சரியாக தினமும் காலையில் உதிப்பதை, அஸ்தமிப்பதை, நன்கு சுட்டெரிப்பதை, மழை வருவதை, காற்று வீசுவதை எல்லாம் பார்க்கும் போது, ஏதோ ஒன்று இயக்குகிறது என்று தோன்றவில்லையா. அதற்கு என்ன பெயர் வைப்பது, எல்லாவற்றையும் கடந்த ஒரு சக்தி என்பதை புரிந்து கொண்டு ,அதற்கு ‘கடவுள்’ என்று பெயர் வைத்தார்கள்.

எது அது. என்ன உருவம் அது. என்ன தன்மை அது, என்ன வலிவு அது. அது எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகள்.

நீ உண்மையாக இருப்பின் உனக்குள் எழும். அந்தக் கேள்விகளுக்கு பதில் நான் சொல்லி, நீ புரிந்து கொள்ள முடியாது, நீயாக அறிந்து கொள்ள வேண்டும். இதோ இந்தக் குடுவையிலிருந்து நான் தேன் குடித்து விட்டேன். தேன் மிகத் தித்திப்பாக இருக்கிறது, எவ்வளவு தித்திப்பாக இருக்கிறது என்று என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொன்னாலும் உனக்கு அது புரியாது.

நீ தேன் குடிக்கும் வரை உனக்கு அது தெரியாது. எனவே, என்னைத் தேன் எப்படியிருக்கிறது என்று கேட்பதை விட்டு விட்டு நீ குடி.”

ஒரு உத்தமமான குருவின் சத்தியமான வார்த்தைகள் இவைகள்.

தேன் குடித்தல் என்பது கடவுளைத் தேடுதல் என்று வைத்துக் கொள்வோம். அறிதல் என்று வைத்துக் கொள்வோம். வெறும் கடவுள் தேடுதல் மட்டும் சொல்பவரா குரு, இல்லை.

நடுநிலையில் நிற்பவரின் மனம் எப்பொழுதும் கருணையில் ஊறி நிற்கும். நாம் அருகே நிற்க, அது நம் தலையைத் தொட, நம்மை அணைத்துக் கொள்ள, அதனுடைய கருணை நம்முடைய கருணையை ஊற வைக்கும். அவரோடு வெறுமே சுற்றி இருப்பதால், பார்ப்பதால், உட்கார்ந்து பேசுவதால் நம்மையும் மீறி, நமக்குள் ஒரு மலர்ச்சி ஏற்படும். இதுதான் சொல்லாமல் சொல்லுதல்.

உன்னை மாற்றி விடுகிறேன், உனக்கு தீட்சை கொடுக்கிறேன், உனக்கு புதுப்பெயர் சூட்டுகிறேன்” என்றெல்லாம் பம்மாத்து செய்யாமல், எல்லாவற்றையும் கணக்குப் போட்டு காசு வாங்காமல், தன்னுள் இருப்பதை உன்னுள் கொட்டிவிட்டு தனியே அமர்ந்திருக்கின்ற மிகப்பெரிய உன்னதம் குரு.

குருவை அனுபவித்தவன், குருவாவதற்கு எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அவன் வளர்ச்சியில் எந்தத் தடங்கலும் வராது. இது இந்துமதம் உணர்த்திடும் குருவின் தனிச்சிறப்பு.

சித்தர் அகத்தியர் கூறும் வர்ம கலை..


சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று.

வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள்.

வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும்.

சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விடயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும்.

பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

சித்த அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம்.

எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும்.

ஆசான் அகத்தியர் உடம்பிலுள்ள வர்மங்களை பற்றிக் கூறி இருக்கிறார்.

* தலைப்பகுதி வர்மங்கள் = 37

* நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13

* உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15

* முதுகுப் பகுதி வர்மங்கள் = 18

* கைப்பகுதி வர்மங்கள் = 17

* கால் பகுதி வர்மங்கள் = 32

இன்றைய சூழலில் வர்மக்கலை எப்படி வாழ்வில் பயன்படும்?

* மிகமிகக் குறைந்த செலவில் எலும்பு முறிவு மருத்துவம் செய்ய வர்ம மருத்துவம் துணை செய்கிறது.

முறையாக ஆய்வு செய்யப்பட்டால் ஏழை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் மிகச்சிறந்த மருத்துவமாகஇது திகழும்.

* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும்.

நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.

* வர்ம மருத்துவத்தில் நரம்பு நோய்களுக்கான மருத்துவம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனுபவரீதியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தெளிவான விளகங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன.

இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.

* விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும்.

பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.

நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.

இதையே விநாயகர் அகவலில்

“ஆறாதாரத்து அங்கிசை நிலையும்

பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து

இடைபிங்கலையின் எழுத்தறிவித்து

கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி

குண்டலியதனில் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்து மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே”

நமது முதுகுத்தண்டு (தூண்) வடத்தின் உள்ளே இடகலை, பிங்கலை, சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.

(இதுவே மூன்று மண்டலத்து முட்டிய தூணின்).

நமது மூச்சு ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் 1மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.

அந்த 21,600 மூச்சுக்களில் துரியம், ஆக்கினை, விசுத்திச் சக்கரங்கள் முறையே 6000 மூச்சுக்கள் வீதம் 18,000 எடுத்துக் கொள்கின்றன.

அடுத்துள்ள அனாகதம், மணிப்பூரகம், சுவாதிட்டானம் இம் மூன்று சக்கரங்களும் 1000 வீதம் 3000 மூச்சுக்களை எடுத்துக் கொள்கின்றன.

மீதம் உள்ள 600 மூச்சுக்களை மூலாதாரம் எடுத்துக் கொள்கின்றது.

இவ்வாறு மூச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இயங்கும் சக்கரங்கள், இவை இயங்கும் அந்தந்தப் பகுதிகளை பார்த்துக் கொள்வதுடன், அந்த இடத்தின் உள் உறுப்புக்களையும் பார்த்துக் கொள்கின்றன.

இவையே நம் உயிர் இயங்கத் தேவையான சக்தியினை மூச்சின் மூலம் பெற்று உடலெங்கும் 72000 நாடி நரம்புகளின் வாயிலாக பாய்ந்து உடலை இயக்குகின்றன.

இதில் நம் உடலின் 96 தத்துவங்கள் உள்ளன.

அவற்றிற்கு ஒரு வர்மம் வீதம் 96 தொடுவர்மங்கள் உள்ளன.

12வர்மங்கள் படுவர்மங்கள் உள்ளன.

படுவர்மம் என்றால் உயிர் பட்டுப்(செத்துப்) போகச் செய்யும் வர்மங்கள் என்று பொருள்.

இவை தமிழ்ச்சித்த மருத்துவத்தின் “அக்கு பஞ்சர்” போன்ற சிகிச்சைப் புள்ளிகள் ஆகும்.

ஆசான் அகத்தீசர் குறிப்பிடும் உடலின் முக்கிய வர்மப்புள்ளிகளின் விரிவாக்கம்.

தலைப்பகுதி வர்மங்கள் (37)

1.திலர்த வர்மம்

2.கண்ணாடி கால வர்மம்

3.மூர்த்தி கால வர்மம்

4.அந்தம் வர்மம்

5.தும்மிக் கால வர்மம்

6.பின் சுவாதி வர்மம்

7.கும்பிடு கால வர்மம்

8.நட்சத்திர வர்மம்

9.பால வர்மம்

10.மேல் கரடி வர்மம்

11.முன் சுவாதி வர்மம்

12.நெம வர்மம்

13.மந்திர கால வர்மம்

14.பின் வட்டிக் கால வர்மம்

15.காம்பூதி கால வர்மம்

16.உள்நாக்கு கால வர்மம்

17.ஓட்டு வர்மம்

18.சென்னி வர்மம்

19.பொய்கைக் கால வர்மம்

20.அலவாடி வர்மம்

21.மூக்கடைக்கி கால வர்மம்

22.கும்பேரிக் கால வர்மம்

23.நாசிக் கால வர்மம்

24.வெட்டு வர்மம்

25.அண்ணாங்கு கால வர்மம்

26.உறக்க கால வர்மம்

27.கொக்கி வர்மம்

28.சங்குதிரி கால வர்மம்

29.செவிக்குத்தி கால வர்மம்

30.கொம்பு வர்மம்

31.சுமைக்கால வர்மம்

32.தலைப்பாகை வர்மம்

33.பூட்டெல்லு வர்மம்

34.மூர்த்தி அடக்க வர்மம்

35.பிடரி கால வர்மம்

36.பொச்சை வர்மம்

37.சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13)

1.தள்ளல் நடுக்குழி வர்மம்

2.திவளைக் கால வர்மம்

3.கைபுச மூன்றாவது வரி வர்மம்

4.சுழி ஆடி வர்மம்

5.அடப்பக்கால வர்மம்

6.முண்டெல்லு வர்மம்

7.பெரிய அத்தி சுருக்கி வர்மம்

8.சிறிய அத்தி சுருக்கி வர்மம்

9.ஆனந்த வாசு கால வர்மம்

10.கதிர் வர்மம்

11.கதிர் காம வர்மம்

12.கூம்பு வர்மம்

13.அனுமார் வர்மம்

உடலின் முன் பகுதி வர்மங்கள் (15)

1.உதிர்க் கால வர்மம்

2.பள்ளை வர்மம்

3.மூத்திர கால வர்மம்

4.குத்து வர்மம்

5.நேர் வர்மம்

6.உறுமி கால வர்மம்

7.ஆமென்ற வர்மம்

8.தண்டு வர்மம்

9.இலிங்க வர்மம்

10.ஆண்ட கால வர்மம்

11.தாலிக வர்மம்

12.கல்லடைக் கால வர்மம்

13.காக்கடை கால வர்மம்

14.புச வர்மம்

15.விதனுமான் வர்மம்

முதுகுப் பகுதி வர்மங்கள் (18)

1.மேல் சுருக்கி வர்மம்

2.கைக்குழி காந்தாரி வர்மம்

3.மேல்க்கைப் பூட்டு வர்மம்

4.கைச் சிப்பு எலும்பு வர்மம்

5.பூணூல் கால வர்மம்

6.வெல்லுறுமி தல்லறுமி வர்மம்

7.கச்சை வர்மம்

8.கூச்ச பிரம்ம வர்மம்

9.சங்கு திரி கால வர்மம்

10.வலம்புரி இடம்புரி வர்மம்

11.மேல் சுருக்கு வர்மம்

12.மேலாக கால வர்மம்

13.கீழாக கால வர்மம்

14.தட்டேல்லு வர்மம்

15.மேலஅண்ட வர்மம்

16.நாயிருப்பு வர்மம்

17.கீழ் அண்ட வர்மம்

18.குத்திக் கால வர்மம்

கைப்பகுதி வர்மங்கள் (17)

1.வலம்புரி இடம்புரி வர்மம்

2.தல்லை அடக்க வர்மம்

3.துதிக்கை வர்மம்

4.தட்சணக் கால வர்மம்

5.சுழுக்கு வர்மம்

6.மூட்டு வர்மம்

7.மொளியின் வர்மம்

8.கைக்குசத்திட வர்மம்

9.உள்ளங்கை வெள்ளை வர்மம்

10.தொங்கு சதை வர்மம்

11.மணி பந்த வர்மம்

12.திண்டோதரி வர்மம்

13.நடுக்கவளி வர்மம்

14.சுண்டு விரல் கவளி வர்மம்

15.மேல் மணிக்கட்டு வர்மம்

16.விட மணி பந்த வர்மம்

17.கவளி வர்மம்

கால் பகுதி வர்மங்கள் (32)

1.முதிர கால வர்மம்

2.பத்தக்களை வர்மம்

3.ஆமைக்கால வர்மம்

4.பக்க வர்மம்

5.குழச்சி முடிச்சி வர்மம்

6.சிறுவிரல் கவளி வர்மம்

7.சிரட்டை வர்மம்

8.கால் மூட்டு வர்மம்

9.காலக் கண்ணு வர்மம்

10.நாய்த் தலை வர்மம்

11.குதிரை முக வர்மம்

12.கும்பேறி வர்மம்

13.கண்ணு வர்மம்

14.கோணச்சன்னி வர்மம்

15.கால வர்மம்

16.தட வர்மம்

17.கண் புகழ் வர்மம்

18.அனகால வர்மம்

19.பூமிக் கால வர்மம்

20.இடுப்பு வர்மம்

21.கிழிமேக வர்மம்

22.இழிப் பிழை வர்மம்

23.அணி வர்மம்

24.கோச்சு வர்மம்

25.முடக்கு வர்மம்

26.குளிர்ச்சை வர்மம்

27.குசத்திட வர்மம்

28.உப்புக் குத்தி வர்மம்

29.பாதச் சக்கர வர்மம்

30.கீழ் சுழி வர்மம்

31.பதக்கல வர்மம்

32.முண்டக வர்மம்..

நமது உடலில் உள்ள 7 சக்கரங்கள்


1.மூலாதாரம்

முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.
சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள்,சிறுநீர்ப்பை,முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

2.ஸ்வாதிஷ்டானம்

இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை தாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

3.மணிபூரகம்

சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

4.அனாகதம்

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம்,இரக்கம்,சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.
தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

5. விசுத்தி

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன

6.ஆக்ஞா சக்கரம்

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.
பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

7.சகஸ்ரஹாரம்

இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...