நாம் கண்ட கனவுகளும் அதன் பலன்களும் :



அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.

மங்கள பொருளுடன் கன்னிப் பெண் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறார்கள் அல்லது திருமண முயற்சி கைக்கூடும்.

அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு ஏற்படும்.

அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.

அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் சத்ருக்களால் பிரச்சனைகள் உருவாகும் என்பதைக் குறிக்கிறது.

அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.

அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.

அத்தி மரத்தை காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதை குறிக்கும்.

ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் நமக்கு கூடிய விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

ஆலயத்தில் நாம் தனியாக இருந்து கதவு மூடப்பட்டது போல் கனவு காண்பது தொழிலில் தேக்க நிலைகள் ஏற்படும்.

ஆலயத்தின் தலை வாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதை குறிக்கும்.

ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது.

ஆயுதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை கனவில் கண்டால் துன்பம் நீங்கும்.

இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

இரும்பை கனவில் காண்பது நஷ்டத்தை குறிக்கிறது.

இருளைக் காண்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

இறந்தவர்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.

இடாகினி(காளி) தெய்வத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதைக் குறிக்கிறது.

இந்திர தனுசு(வானவில்) கனவில் கண்டால் குடும்பத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

ஈக்கள் தன்னைச் சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும்.

 ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களில் பகைமையை உருவாக்கும்.

கனவில் உடை எரிவதுபோல் கண்டால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பூப் பெய்துவார்கள். பொருள் இழப்பு ஏற்படலாம்.

உடுக்கையை காண்பது போல் கனவு கண்டால் தனக்கு ஏற்படும் ஆபத்திற்கு நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

உத்தியானம் (தோட்டம்) வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது.

உப்பைக் கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.

உரம் இடுவதாக கனவில் கண்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்பதைக் குறிக்கிறது.

உப்பளத்தை கனவில் கண்டால் விருந்துக்குப் போகப் போகிறோம் என்பதைக் குறிக்கிறது.

ஊமையைக் காண்பது போல் கனவு வந்தால் தொழிலில் தேக்க நிலை ஏற்படும்.

ஊன்(இறைச்சி) விற்பதைக் கனவில் கண்டால் எதிர்பாராத தன வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

எண்ணெய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.

எருது மிதிப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறையும்.

எருது சீறுவது போல் கனவு கண்டால் அதிகாரம் குறையும்.

எறும்பு ஊறுவதை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும்.

எள்ளை கனவில் கண்டால் அசுப காரியம் ஏற்படுவதை உணர்த்துகிறது.

ஏணியின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

ஏணியில் கீழே இறங்குவது போல் கனவு கண்டால் தொழிலில் தாழ்வு நிலை ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

ஒட்டகத்தைக் கனவில் கண்டால் பயணங்களில் பல்வேறு இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிக்கிறது.

ஓநாய் விரட்டிக் கொண்டு வருவது போல் கனவு கண்டால் மனதிற்கு பிடித்த உறவினர்களால் பகைமை ஏற்படுவதை குறிக்கிறது.

கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும் என்பதைக் குறிக்கிறது.

கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

கல்யாணம் நடப்பது போல் கனவு கண்டால் வியாதியால் துன்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

கனிகளை கனவில் காண்பது மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

காகம் தலையில் அடிப்பதாக கனவு கண்டால் கெடுதல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

காசி நகரத்தைக் கனவில் கண்டால் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.

காவல்காரர்களை காண்பது போல் கனவு வந்தால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.

கிழங்குகளை கனவில் கண்டால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

கிழவியை காணுவது போல் கனவு வந்தால் தனப் பெருக்கம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

கீரியை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்

பூக்கள் நிறைந்த கலத்தை கனவில் கண்டால் வருமானம் பெருகும் பொருளாதார வளம் ஏற்படும்.

பூச்செண்டு கனவில் வருவது பொருளாதார மேன்மை குறைவதை சுட்டிக் காட்டுகிறது.

பெண் தன்னை நோக்கி வருவது போல் கனவு வந்தால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

பெருச்சாளியை கனவில் கண்டால் இன்னல்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

பேன் தலையில் இருப்பது போல் கனவு கண்டால் ஏமாற்றம் உண்டாகும்.

பை நிறைய தானியங்கள் இருப்பது போல் கனவு கண்டால் சுபம் உண்டாகும்.

 பைத்தியத்தை கனவில் கண்டால் காரிய சித்தி உண்டாகும்.

பொன்(தங்கம்) கனவில் வந்தால் மங்களம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

 மயானத்தை கனவில் கண்டால் காரியத் தடங்கல் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

மரணத்தை கனவில் கண்டால் குழந்தைப் பேறு கிட்டும்.

மரத்தை பதமையான (மென்மையான) நிலையில் இருப்பது போல் கனவு கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பதைக் குறிக்கிறது.

மலர்களை கனவில் கண்டால் சொத்து அபிவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

மழையை கனவில் கண்டால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

 மாமிசம் கொண்டு செல்வது போல் கனவு வந்தால் கீர்த்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

மாதுளை பழத்தை உண்பது போல் கனவு கண்டால் கெட்ட நிகழ்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

மிருதங்க ஒலியை கேட்பது போல் கனவு கண்டால் விரைவில் திருமணம் கைகூடும்.

மின்னலை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

 மீன்களை கனவில் காணுதல் நன்மை பயக்கும்.

மூடவரைக் கனவில் கண்டால் தன விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

முதலையை கனவில் கண்டால் அறிவாற்றல் பெருகும் என்பதைக் குறிக்கிறது.

முத்தை கனவில் கண்டால் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

முயலை கனவில் கண்டால் பொருள் வரவு ஏற்பட்டு இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

மேட்டில் இருப்பது போல் கனவு கண்டால் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

மோதிரம் கனவில் வந்தால் சுப பலன்கள் உண்டாகும்.

யாகத்தை கனவில் கண்டால் பிரச்சனைகளால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

யானையை கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரத்தத்தை கனவில் கண்டால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

வண்டியை கனவில் கண்டால் இன்பம் மற்றும் துன்பம் சரிபாதி அளவில் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவில் கண்டால் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

வலிமைமிக்கவர்களை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

வாத்தை கனவில் கண்டால் கடன் உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

விதவையை கனவில் கண்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.

விவசாயியை கனவில் கண்டால் செய்யும் காரியம் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.

வில்வ இலையை கனவில் கண்டால் புத்திக்கூர்மை பெருகும்.

விளக்கு எரிவதைப் போல் கனவு கண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

விளை நிலத்தை பசுமையுடன் கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

வீணை ஓசையை கேட்பது போல் கனவு வந்தால் சுப செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.

வைத்தியம் செய்பவரை கனவில் கண்டால் தனலாபம் கிட்டும்.

அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், குமரகிரி, சேலம்.



( ஒரு மாம்பழத்திற்காக அம்மையப்பனிடம் கோவித்துக்கொண்டு தன் மயில் வாகனத்தில் பழநிமலை செல்லும் வழியில் இந்த மலையில் சற்று நேரம் தங்கிச்சென்றாராம்  'எனை ஆளும் ஆண்டவன்' எம்பெருமான் முருகன். குமரன் தங்கிச் சென்ற மலை என்பதால் "குமரகிரி" என்று அழைப்படலாயிற்று. இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டாயுதபாணியாக அருட்காட்சியளிக்கிறார். 
மாம்பழம்தான் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ( சேலத்து மாம்பழம் சிறப்புற்று இருக்க காரணம் தெரிந்து கொண்டீர்களா..) சுமார் 1500-படிக்கட்டுகள் கொண்ட இம்மலைக் குன்றுக்கு, வாகனங்களில் செல்ல  மலைப்பாதையும் உள்ளது. ஆயுள் விருத்தியாக, தடைபட்ட திருமணம்,குழந்தை பேறு மற்றும் செய்யும் தொழில் சிறப்புக்கும்  படி பூஜையும், திரிசதை அர்ச்சனையும் இங்கு செய்வது விசேஷம்.)


விளக்கின் நவகிரஹ தத்துவம்


விளக்கு என்பது நாம் அன்றாடம் வாழ்வில் பூஜிக்க கூடிய பூஜைப் பொருள்களில் ஒன்று.

• ஒரு விளக்கு என்பது சூரிய பகவானைக் குறிக்கும்.

• விளக்கில் தீபம் எரிவதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் அல்லது நெய் போன்ற திரவம்  சந்திர பகவானைக் குறிக்கும்.

• விளக்கில் போடப்படுகின்ற திரி புதன் பகவானைக் குறிக்கும்.

• விளக்கில் எரியும் சுடர் செவ்வாய் பகவானைக் குறிக்கும்.

• விளக்கில் எரியும் சுடரின் நிழல் ராகு பகவானைக் குறிக்கும்.

• விளக்கில் எரியும் சுடரில் உள்ள மஞ்சள் நிறம் குரு பகவானைக் குறிக்கும்.

• சுடரின் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி சனி பகவானைக் குறிக்கும்.

• சுடரின் வெளிச்சம் கேது பகவானைக் குறிக்கும்.

• விளக்கில் எரிந்துக் கொண்டிருக்கக் கூடிய திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது  சுக்கிர பகவானைக் (ஆசை) குறிக்கும்.

ஆசைகள் நம்மை அழிக்கிறது ;
மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது.

இதுவே  தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்




திருநீறு அணிவதன் தத்துவம்


சிவபெருமானை தியானித்து விபூதியை இட்டுக் கொள்ளல் வேண்டும். மூன்று வகைப்பாவங்களைப் போக்கும் விபூதியின் மூன்று கோடுகள் மகத்தானவை.

சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும்  சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

முதல் கோடு:

அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை,  மஹாதேவன் ஆகியவற்களை உள்அடங்கியது.

இரண்டாவது கோடு

உகாரம், தட்சிணஅக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை, இச்சாசக்தி,  அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.

மூன்றாவது கோடு:

மகாரம், ஆலஹனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர  தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.

சிவபெருமானை எண்ணி விபூதியை அணிவதே மாஹேஸ்வர விரதம் எனப்படும். இந்த விரதம் எல்லா பாவங்களையும்  நீராக்கும்; மோட்சம் தரும்; பயம் போக்கும்.

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும்  தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு  வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

விபூதி அணியும்முறை:

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு  விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும்.

சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாடு



சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான நந்தி தேவர்தான்.

தட்சனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் சாப விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும் சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். ஆனால் அந்த சாபம் சிவனை வந்தடைந்து சிவன் தேய ஆரம்பித்தார். இது கண்டு மனம் வருந்திய நந்தி தேவர் அன்னை சக்தியை சிவலிங்க பீடத்தில் அமரச்செய்து முறைப்படி பிரதோச பூசை செய்தார். இதன் பலனாக சிவனும் சாபவிமோசனம் பெற்றார்.

 நந்திதேவர் செய்த பூசையானது கொடிமரத்தையும், பலிபீடத்தையும் இடது புறமாக கடந்து நந்திக்கு முதற் பூசை செய்து பின் பிரதட்சணமாக தட்சிணாமூர்த்தி வரை சென்று பின் அப்பிரதட்சணமாக நந்திக்கு பின்புறமாக சண்டிகேசர்வரை சென்று பின் மீண்டும் பிரதட்சணமாக நந்தி தேவர் வரை வந்து நந்தி தேவரிற்கு வலதுபுறம் நின்று கொம்புகளிற்கிடையில் பார்வையை மட்டும் செலுத்தி "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் சௌம் நமோ பகவதே” என்ற சக்தித் தாயின் வசிய மந்திரத்தை ஜெபித்து பூசை செய்தார்.

இந்த மந்திரத்தினை சிவாலயத்தில் 108 தடவைக்கு குறையாமல், 48 நாட்கள் தொடர்ந்து, செபித்து வந்தால் நாம் நமது ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். நமக்கு முன் ஏழு தலைமுறையினர் அதாவது பித்ருக்கள் செய்த பாபத்தினால் ஏற்பட்ட சாபம், பாவம் அனைத்தும் நீங்கும். என்பது நந்தி தேவர் வாக்கு.

நந்தி தேவர் வழிபட்ட பாதையை  கவனித்தோமானால் ஒரு திரிசூலம் அமையும்.

பிரதோச சூட்சுமம்


14 நாட்கள் - வளர்பிறை (தேவர்கள்)
14 நாட்கள் - தேய்பிறை (அசுரர்கள்)

மீதி இருக்கும் 2 நாட்கள் முறையே பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகும்.

நமது தின உணவு சுழற்சியை பாற்கடலை கடைவதற்கு ஒப்பிடலாம். அந்த உணவு சுழற்சியில் (வளர்பிறை மற்றும் தேய்பிறையில்) வரும் 12 நாட்களில் உண்ட உணவிலிருந்து உருவான, வெளியேற்ற முடியாத நச்சுகளை உடல் சேகரித்துக்கொள்ளும். அந்த நச்சுகளை உடலில் இருந்து வெளியேற்ற, 13வது நாளான திரயோதசியில் விரதம் உபசரிப்பத்தற்கு பெயரே பிரதோச விரதம். இந்த விரதகாலத்தில் அனுஷ்டிக்கப்படும் பிரதட்சணத்தின் பெயர் சோமசூத்க பிரதட்சணம் எனப்படும். இது உடலில் உள்ள நஞ்சை வெளியேற்ற உதவும். இதுவே ஆலகால விசத்தை சிவபெருமான் உண்டதாக கூறப்படும் பிரதோச சூட்சுமம்.

அவ்வாறு நஞ்சு வெளியேற்றப்பட்ட உடல், பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று பொலிவு பெறும், இதனால் நீண்டநாள் நோயின்றி உயிர்வாழ முடியும். இதுவே பாற்கடலில் அமிர்தம் கிடைத்ததாக சொல்லப்படும் உவமை. இந்த பிரதோச விரதம் உடலை தூய்மை செய்ய என்பதே உண்மை.

பிரதோசத்தின் மகிமை :

சிவபெருமான் ஆலகால விடத்தை அருந்திய நேரம்தான் பிரதோச வழிபாடாக செயல்படுகிறது.

ஒரு பிரதோசம் பார்ப்பது பதினைந்து நாட்கள் கோவிலுக்குச் சென்று வந்த பலனைக் கொடுக்கும். பதினோரு பிரதோசம் பார்ப்பது ஒரு கும்பாபிசேகம் பார்த்த பலனைக் கொடுக்கும். நூற்று இருபது பிரதோசம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

சிவாலயங்களில் சிறப்பான வழிபாடு
மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும்.

பிரதோச விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு சகல
செல்வங்களும் வந்து சேரும் என்பது திண்ணம். துன்பங்கள் [ விக்கினங்கள் ]
அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எம்பெருமான் விக்னேசுவரன் என்றும் அழைக்கப் பெறுகிறார். இம்மையிலும்,
மறுமையிலும், அறிந்தும், அறியாமலும் செய்யும் பாபமாகிய தோசங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாட்டிற்கு பிரதோசகால வழிபாடு அதாவது பிரதோசம் எனப் பெயர் வழங்குகிறது.

கிறித்துவ மதங்களில், பாவ மன்னிப்பு என்று ஒரு முறை உண்டு. அம்முறையில், மத குருமார்களின் காதில் சென்று தான் செய்த பாவத்தைக் கூறி அதற்கு மன்னிப்பும் கேட்கப்படும். மத குருவும் ஆண்டவரிடம் அந்த பக்தரின் சார்பில் பாவ மன்னிப்புக் கோரி தூது செல்வதாக ஐதீகம்.

இது போலத்தான் நம் இந்து மதத்தில், சைவாகமத்தில், இந்த பிரதோசகால வழிபாடு அமைந்துள்ளது எனலாம். ப்ர - தோசம் - மிக்க தோசம், எனப் பொருள்.

அதாவது, போக்குதற்கு இயலாத எத்தகைய தோசமாக இருந்தாலும் அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டதுதான் பிரதோசவழிபாடு.

பிரதோச காலத்தில் சிவபெருமான் நந்தியெம்பெருமான் விருப்பப்படி நர்த்தனக் காட்சி அளிக்கின்றார். நந்தியெம்பெருமானுக்கு அபிசேக ஆராதனை செய்து, விடையின் மேல் உலகையே ஆளுகின்ற சக்தியாகிய பராசக்தியுடன் சிவபெருமான் எழுந்தருளி அடியவருக்கு நித்திய ஆனந்தம் அளிக்கின்றார்.

பிரதோச காலத்தில், விரதமிருந்து வழிபடும் அடியார்களுக்கு கடன், நோய், தரித்திரம், மனக்கவலை, மரணபயம், மன சோர்வு, கோபம், மோகம், பயம் போன்றவைகளால் வரும் தோசங்கள் அனைத்தும் அறவே நிவர்த்தி ஆகும் என உத்தரகாரணாகமம் இயம்புகின்றது.

பசுவின் திருமேனி, பிற உயிரினங்களின் சரீரங்களைக் காட்டிலும் பல்வகையிலும்
மேன்மையுடையதாகும். இல்லத்தையும், மற்ற இடங்களையும், பசுவின் சாணம் மற்றும் கோமயம் கொண்டு சுத்தம் செய்வது வழக்கத்தில்உள்ளது.

 அக்காலந்தொட்டு, வீட்டு வாசலை அதி காலையில் பசுஞ்சாணம் கொண்டு மெழுகுவதால் இலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என பெரியோர் கூறுவர்.

ஆகவே, தருமத்தின் சொரூபமாக விளங்கும் விடையின் மேல் ஏறி வலம் வருகின்றார் இறைவன், இப்பிரதோச காலத்தில். தேவர்கள் வாழும் பொருட்டு நஞ்சை உண்டு, கண்டத்தில் தாங்கி, நஞ்சுண்ட கண்டனாக அருள்பாலித்து, அமிர்தத்தை  அவர்களுக்கு வழங்கிய காலம் இப்பிரதோச காலமாகும்.

இப்பிரதோச நாளில் வழிபடும் அன்பர்கள் வேண்டுவன அனைத்தையும் பெற்று மேன்மையான வாழ்வைப் பெறுவார்கள் 

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்.

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா  ஸீரி கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரி ஓம் சர்வம் ஸீரி கிருஷ்ணார்ப்பணம்....

இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து மாவு..


இதை தயாரிக்கும் முறை:

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

தேவையான பொருட்கள்:

ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
நாட்டு கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ
தினை அரை கிலோ
கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ
நிலக்கடலை அரை கிலோ
மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ
ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள் 100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம்
சாரப்பருப்பு 50 கிராம்
பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம்
ஜாதிக்காய் 2
மாசிக்காய் 2

செய்முறை :

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.

தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

பயன்கள்

1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.

2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.

3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

குறிப்பு:

5 மாதம் கெடாது.

1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது.

2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.

குறிப்பு : காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...

பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்....

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...