தினமும் வீட்டில் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய ஆரத்தி மந்திரம்


நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளை தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம்.

அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் இறைவனுக்கான ஆரத்தி மந்திரம் அதை ஜபிப்பது நமது வேண்டுதலுக்கு மேலும் பலம் சேர்க்கும்.

அந்த வகையில் தினமும் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய ஆரத்தி மந்திரம்.

*பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்:*

ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே
நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே
ஸமேகமான் காம காமாய மஹ்யம் !
காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது !
குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:

*பொது பொருள்:*

அரசனுக்கெல்லாம் அரசனான இறைவனே, அனைத்திலும் வெற்றியை தரும் சக்தி கொண்டவனே, பக்தர்கள் கேட்பதை கொடுக்கும் வல்லமை உடையவரே, குபேர மகாராஜனே உங்களை போற்றுகிறேன்.

மேலே உள்ள பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரத்தை நாம் கூறுவதன் பயனாக நமது வேண்டுதகள் அனைத்தும் நிறைவேறும் நாம் குபேர சம்பத்துகளுடம் நமது வீட்டில் பல காலம் வாழ இறைவன் அருள்புரிவார். இந்த ஆரத்தி மந்திரத்தை முடிந்தவரை தினமும் ஜபிப்பது நல்லது.

தெய்வங்களுக்கு பூக்களால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்


1. அல்லிப்பூ - செல்வம்  பெருகும்
      
2. பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்
3. வாடமல்லி - மரணபயம் நீங்கும்
4. மல்லிகை - குடும்ப அமைதி
5. செம்பருத்தி - ஆன்ம பலம்
6. காசாம்பூ - நன்மைகள்
7. அரளிப்பூ - கடன்கள் நீங்கும்
8. அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை
9. செம்பருத்தி - ஆன்ம பலம்
10. ஆவாரம் பூ - நினைவாற்றல்  பெருகும்
11. கொடிரோஜா - குடும்ப ஒற்றுமை
12. ரோஜா பூ - நினைத்தது  நடக்கும்
13. மருக்கொழுந்து -  குலதெய்வம் அருள்
14. சம்பங்கி - இடமாற்றம்  கிடைக்கும்
15. செம்பருத்தி பூ - நோயற்ற வாழ்வு
16. நந்தியாவட்டை - குழந்தை குறை நீங்கும்
17. சங்குப்பூ (வெள்ளை) - சிவப்பூஜைக்கு  சிறந்தது
18. சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு  சிறந்தது
19. மனோரஞ்சிதம் - குடும்ப  ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம்
20. தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும் 
21. நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்
22. முல்லை பூ - தொழில் வளர்ச்சி,  புதிய தொழில்கள் உண்டாகும்
23. பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) - முன்னேற்றம் பெருகும்
24. தங்க அரளி (மஞ்சள் பூ) -  குருவின் அருள், பெண்களுக்கு  மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும், கிரக பீடை நீங்கும்
25. பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.
பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள்,  தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.
அரச்சனை செய்த பூக்கள்  கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.
கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில்  முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம். இதனால்  தீமைகள்  உண்டாகும்  நன்மைகள் கிடைக்காது.
*பூசைக்கு சிறப்பான பூக்கள்*
1. திருமாலுக்கு --  பவளமல்லி, மரிக்கொழுந்து துளசி.
2. சிவன்  --  வில்வம், செவ்வரளி
3. முருகன் -- முல்லை, செவ்வந்தி, ரோஜா
4. அம்பாளுக்கு -- வெள்ளை நிறப்பூக்கள்..
ஆகியவை பூசைக்கு சிறப்பானவை.

*ஆகாதபூக்கள்*
1. விநாயகருக்கு -- துளசி   
2. சிவனுக்கு -- தாழம்பூ 
3. அம்பாளுக்கு  -- அருகம்புல்
4. பெருமாளிற்கு -- அருகம்புல்
5. பைரவர்   -- நந்தியாவட்டை
6. சூரியனுக்கு   -- வில்வம் 
ஆகியவை பூஜைக்கு ஆகாதவை...!!!

கோகர்ணம்

💫 ராவணனின் தாயார் ககேசி ஒரு சிறந்த சிவபக்தை தினசரி சிவபெருமானுக்கு பூஜை செய்பவள்.

💫 தன் தாயார் சிவபூஜை செய்வதற்காகவும் அதே சமயம் தன்னுடைய சக்தி மேலும் பெருகவும்  ராவணன் கைலாயத்தில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வர முடிவு செய்தான்.

💫 சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவருடைய கடும் தவத்திற்கு மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவனுக்கு ஜோதி லிங்கத்தை பரிசாக அளித்தார்.

💫 ஆனால் அதை எங்கும் கீழே வைக்காமல் இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார் சிவபெருமான்.

💫 ராவணனும் ஜோதி லிங்கத்தை எடுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தான். யோகி லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் உண்ணவோ களைப்பாறவோ யோசிக்காமல் பறந்து கொண்டிருந்தான்.

💫 ராவணன் ஜோதி லிங்கத்தை இழுத்துச் செல்வதைக் கண்ட தேவரிஷிகளும், முனிவர்களும் அஞ்சினர்.

💫 அதி அற்புதமான ஜோதிலிங்கம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டால் இராவணனின் சக்தி மேலும் அதிகமாகும். அதன் விளைவு உலகிற்கே பெரும் அழிவைத் தரும் என்று கருதினார்கள்.

💫 தேவ ரிஷிகளும் முனிவர்களும் ஒன்றாக சேர்ந்து பிரம்மாவிடம் அதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

💫 ஆனால் பிரம்மதேவனும் நீங்கள் அனைவரும் சென்று ஆனைமுகத்தனை ஆவன செய்ய கேட்டுக்கொண்டார்.

💫 அவர்கள் அனைவரும் முதன் முழு கடவுள் கணபதியிடம் சென்று முறையிட்டனர்.

💫 தேவ ரிஷிகளின் வேண்டுதலை ஏற்று விநாயக பெருமான் கண் அசைத்தார்.

💫 வானில் பறந்து கொண்டிருந்த ராவணனுக்கு தாகம் ஏற்பட ஆரம்பித்தது.

💫 சரி நீர் மட்டும் பருகி கொள்ளலாம் என்று அவ்வப்போது ஒரு கையால் ஜோதி லிங்கத்தை பிடித்தபடி மறுகையால் ஆங்காங்கே ஓடும் நதியில் இருந்து நீர் பருகினான்.

💫  நீர் பருகிய உடன் வயிறு நிரம்ப ஆரம்பித்தது சிறுநீர் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது.

💫 ஆனால் ஜோதி லிங்கத்தை எங்கும் கீழே வைக்கக்கூடாது. மேலும் சிறுநீர் கழித்த பின் உடல் சுத்தி வர வேண்டும் என்ன செய்வது என்று யோசித்தபோது...

💫 ராவணன் எதிரே விநாயகப்பெருமான் ஒரு சிறுவனாக வடிவம் எடுத்து வந்து கொண்டு இருந்தார்.

💫 அந்த சிறுவனை அழைத்த ராவணன் இந்த ஜோதி லிங்கத்தை சிறிது நேரம் கையில் பிடித்து கொண்டு இரு.நான் என் கடன்களை முடித்து கொண்டு வருகிறேன் என்று கேட்க.

💫 அந்த சிறுவனோ , நான் வைத்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கோ அவசரமாக என் இருப்பிடம் செல்ல வேண்டும்.

💫 நான் மூன்று எண்ணுவேன் அதற்குள் வந்து விடுங்கள். என்று சொல்லி ஜோதி லிங்கத்தை கையில் பிடித்து கொண்டான்.

💫 ராவணன் அருகில் இருந்த நதிக்கரைக்கு ஓடிச்சென்று தன் வேலையை முடித்துக்கொண்டு இருந்தான்.

💫 சிறுவனான விநாயகர் ஒன்று, இரண்டு, மூன்று, என்று ராவணனை பார்த்தபடி எண்ணினான்.

💫 என் வேலை முடிந்து விட்டது இனி என்னால் காத்திருக்க முடியாது என்று கூறி அந்த இடத்திலேயே ஜோதி லிங்கத்தை கீழே வைத்து விட்டான்.

💫 அதைக்கொண்டு பதறிப் போன ராவணன் ஓடோடி வந்து  ஜோதி லிங்கத்தை தரையில் இருந்து எடுக்க முயன்றான் முடியவில்லை.

💫 கோபம் கொண்ட ராவணன் அந்த சிறுவனின் தலையில் ஒரு குட்டு வைத்தான்.

💫 அந்த சிறுவன் விநாயகப் பெருமானாக காட்சி தந்து ராவணனுக்கு புன்னகையுடன் தரிசனம் தந்து விட்டு சென்றார்.

💫 ராவணனும் தான் ஏமாற்றப்பட்டது சிவ மைந்தனால் என்ற பெருமையுடன் இலங்கை நோக்கி திரும்பினான்.

💫 இத்தகைய சம்பவம் நடந்த இடம் தான் கோகர்ணம் என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு சிறிய பள்ளம் இருப்பதை இப்போதும் காணலாம்.

பூஜையில் மணி அடிப்பது ஏன்

• பூஜையில் மெதுவாக மணி அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

•  கணகணவென்று மணி அடித்தால் தீபம் , ஆரத்தி  காட்டப்படுகிறது என்று அர்த்தம்.

• இரண்டு பக்கமும் விசேஷமாக மணி அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.

• மெதுவாக மணி அடித்துக் கொண்டிருந்தால் பகவான் அமுது உண்கிறார் என்று அர்த்தம்.

மணியின் ஓசையை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

மணி அடிப்பதை மஹான்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுத்து ஆரத்தி காட்ட வேண்டும். பிறகு இடது கையிலிருந்து மணியை வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.

இடது கையால் மணியை எடுக்கவே கூடாது. மணி என்பது சாதாரண விஷயம் அல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது. பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

மனம் ஒரு குரங்கு..


 
ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம்.

எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார்.

அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன. உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று.

அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது.

உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது. அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன.

சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது.

இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் தியான மற்றும் விரத முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.

உலக ஆசையை விட்டு விட வேண்டும் என்று எண்ணினாலோ, முயற்சித்தாலோ, அது நடக்கவே நடக்காது

ஏனெனில் அது எதிர்மறை சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்து விடுகிறது.

மாறாக, பரம்பொருள் அல்லது ஆன்ம  நாட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் அளவு உலக ஆசைகள் ஒவ்வொன்றாக விட்டு ஓடி விடுவதை உணரலாம்.

அதனால் தான் அன்றே சொன்னார்கள்
மனம் ஒரு குரங்கு என்று மிகச் சரியாக.

வாசி என்னும் வாசுகி பாம்பு


அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்கிறார் பெண் சித்தர் அவ்வை. அரிதாய் தோன்றிய மனித உடல் அழியக் காரணம் என்ன எனச்சிந்தித்தால் . உயிர் போய்விட்டது என்கிறோம்.   அந்த உயிர் இத்தனை நாள் எங்கிருந்தது என்ற கேள்வி வருகிறது.  உயிர் எங்கே இருக்கிறது என நவீன விஞ்ஞானம் இதுவரை அறுதியிட்டுக் கூறவில்லை.
தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது அதன் தொப்புழ்க் கொடியில் உயிர் அந்தரந்தமாக இருக்கிறது என்கிறது இந்தப் பாடல். எனவேதான் பிறக்கும் குழந்தை தொப்புழ்க் கொடியுடன் சேர்ந்தே பிறக்கிறது                                     
ஒரு குழந்தை பிறந்து ஒருமணிநேரம் வரைக்கும் தொப்புள் கொடியை அறுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் கொடியினுள் இருக்கும் Stem Cells திரவம் மெல்ல மெல்ல குழந்தையின் வயிற்றுக்குள் முழுவதுமாக இறங்கிவிடும் இது அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதுக்குமான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும் அக்குழந்தைக்கு CANCER என்ற நோயே வராது.
                                                                   குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும் அது அழுதே ஆக வேண்டும். இல்லையேல் மற்றவர் அழத் தொடங்குவர்.

                      அழுகையே பிறக்கும் ஒவ்வருவரும் செய்யும் முதல் காரியம். குழந்தை அழும்போது முதல் முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது. போகும் போது  உயிரும் சுவாசத்துடன் கலந்து வெளியே  செல்கிறது.

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே .
– அகத்தியர் ஞானம் 23

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை”
மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம்.
இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர்.

 மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள்.

வயது முதிர்ந்த கிழவரும் மனத்தின் சக்தியைப் பயன்படுத்தி, வாயுவை நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர். மேனியும் சிவந்திடும் என ஆணை இடுகிறார் சிவவாக்கியர். இவ்வாறு
மூச்சிலே இருக்குது சூட்சமம்!

ஈராறு கால் கொண்டெழுந்த புரவியைப்
போராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீராயிரமும் நிலமாயிரத்தாண்டும்
போராது காயம் பிரான் நந்தி ஆணையே!

பதினாறு மாத்திரை ஓடி வீணாகக் கழிந்துகொண்டிருக்கும் மூச்சை முறையாக விதிப்படி அடக்கியாளும் ஆற்றல் பெற்ற யோகியர், ஆயிரம் ஆண்டுகள் நீரில் முழுகி இருந்தாலும், மண்ணில் ஆயிரம் ஆண்டுகள் புதையுண்டுக் கிடந்தாலும் உடல் அழியாது என்கிறார்.

ஆக மூச்சை நெறிப்படுத்தினால் உடம்பிற்கு அழிவில்லை என்கிறார்கள். ஆனால் அதை ஏன் முறையாக ஆராய்ந்து மூச்சை நெறிப்படுத்தும் முறைகளை மக்களுக்கு அறியப்படுத்தவில்லை? தவறு என்றால் இந்தக் கூற்று தவறு என நிருபிக்கட்டுமே! பிறகு இதை ஏன் நாம் பேசிக்கொன்டிருக்கப்போகிறோம் ?

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே

இரு நாசிகள் வழியே ஏறியும் இறங்கியும் இயங்கும் காற்றினைக் கணக்காக ஆளும் திறமை கொண்டோர், எமனை அருகில் வராமல் விலக்கி வைக்கலாம் என்கிறார்கள், நம் சித்தர்கள். இதை ஏன் நாம் முக்கியமாக எடுத்து ஆராயவில்லை?

இடது மூக்கு வழியாக 16 மாத்திரை உள்ளே இழுப்பது பூரகமாகும். 64 மாத்திரை அளவு உள்ளே அடக்குதல் கும்பகமாகும். பின்னர் வலது மூக்கின் வழியாக 32 மாத்திரை வெளியிடுதல் ரேசகமாகும்.   (1 நிமிடத்திற்கு
6 முறை சுவாசிக்க வேண்டுமாம்..60 நிமிட நேரத்திற்கு 6  விதம்  360 முறை.. 1நாளைக்கு 24 மணி நேரத்திற்கு 360 விதம் 8,640 முறை சுவாசிக்வேண்டும்)

இதுவே காற்றைப் பிடிக்கும் கணக்கு. ஆனால் இதை முறைப்படுத்தல், அத்தனை சுலபமல்ல. தக்க ஒரு குருவின் வழிகாட்டல் இல்லாமல் இதுவும் கைக்கூடாது. எனவே இதைத் தானே செய்ய முயலவேண்டாம் .

வெற்றிக்கு வழிவகுக்கும் சுவாசம் விதியை  மாற்றும் அறிவை அடைந்தவர்கள் சித்தர்கள்  நாளும் நடைபெறும் நடப்புகளை தங்கள் சுவாசம் மூலமாகவே தங்கள் விருப்பப்படி நிறைவேற்றிக்கொள்ள எளிய முறைகளைக் கண்டு கூறியிருக்கிறார்கள் நம் சித்தர்கள். இதற்குச் ‘சரம் பார்த்தல்’ என்று பெயர்.

‘ஞானசர நூல்’ எனச் சரம் பார்த்தல் பற்றியும் நமது வாழ்வில் நாம் விரும்பும் வெற்றியை விரும்பிய விதமே பெறும் ஆற்றலைப்  பெறும் வழிகளையும் நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

கேட்கில் இடம்: தூது ஆடை, அணி பொன்பூணல்
கிளர்மனம், அடிமைகொளல், கீழ்நீர் கிண்டல்
வாழ்க்கை மனை எடுத்தல், குடிபுகுதல், விற்றல்
மன்னவரைக் காணல், உண்மை வறுவல், சாந்தி
வேட்கை, தெய்வப் பதிட்டை, சுரம் வெறுப்புத் தீர்த்தல், விந்தைப் பெறுதல், தனம் புதைத்தல் மிகவும் ஈதல், நாடகமல மலர் முகத்தாய் நரகம் தீர்த்தல் நன்றேயாம் இவ்வை எல்லாம் நயந்து பாரே!

சந்திர கலை அதாவது இடது நாசியில் மூச்சு ஓடும் போது செய்யத்தக்க காரியங்களின் பட்டியல் இது. செய்தால் இவற்றில் வெற்றி நிச்சயம் என ஞான சர நூல் 8 கூறுகிறது.

பார்க்கில் வலம்: உபதேசம், வித்தை, சேனை,
படையோட்டல், பயிர்செட்டுக் களவு, சூது,
பேர்க்கவொணா வழக்குக் கரிபரி, தேரூர்தல்
பிறங்கும் எழுந்திடுதல், சங்கீதம், பாடல்
வார்த்தை, பகைப் பக்கம் கோள், பசாசு தீர்த்தல்,
மந்திரஞ் சாதித்தல், மருந்துண்ணல், உறங்கல்,
கோத்த புன்னாடல், கொல்விடங்கள் தீர்த்தல்
கொடும்பிணி, தம்மென்பன யோகங் குறிக்கும் தானே
– ஞான சர நூல்   9

இவை சூரிய கலை எனப்படும் வலது நாசியில் சுவாசம் ஓடும் போது செய்யத்தக்கவையாகும். இந்தச் சர ஞானமும் சரிவர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முறைபடுத்தப்படுமானால் தமிழர் சமுதாயம் உலகின் வளமான சமுதாயமாக ஆகிவிடும். ....!

“இருவினை தீர்க்கும்
எமனையும் வெல்லும்
திருவடியைப் பாட வந்தோம்”

என்று வீரமணிதாசனின் ஐயப்பன் பாடல் குறிப்பதும் இதைத்தான்.

இராகு, கேது குறிப்பதுவும் இதைத்தான்.

நமது உடலில் நிறைய எண்ணற்ற இருவினைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
மாந்த உடலில் நிகழும் 180 டிகிரிக்கு நேர்எதிரான எந்தவொரு இயக்கமும் இராகு, கேது எனலாம். சோதிடத்தில் இராகு உச்சமானால் கேது நீச்சமாகும். கேது உச்சமானால் இராகு நீச்சமாகும். இது விதி. அதே போல உலகில் பகல் உச்சமானால் இருள் நீச்சமாகும். இருள் உச்சமானால் பகல் நீச்சமாகும். அவ்வளவுதான் சமாச்சாரம்.                     நாசி உள்வாங்கும்(ராகு) ,வெளித்தள்ளும்(கேது) இரண்டு வேலையையும் செய்கிறது. நாசியில் ஒடும் சுவாசம்தான் வாசி என்னும் வாசுகி பாம்பு. புருவ மத்தி மேரு மலை. ராகு அசுரர், கேது தேவர். அமிர்தம் எப்படி வருகிறது என புரிந்துகொள்ளவும்...!

               

ஹனுமன் சாலிசா..!


 


அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர். அனுமன் சாலீசா என்ற பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது! ராமநாமம் சொல்லி வென்ற மாருதியின் திருநாமம் சொல்லி வெல்லுங்கள்.

1. ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே!
மூவுலகை யெழுப்பும் வானரர் கோனே!

2. ராமதூதனே! ஆற்றலின் நிறையே!
அஞ்சனை மைந்தனே! வாயுவின் புதல்வனே!

3. மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே!
தீமதி நீக்கிடும் நன்மதி நண்பனே!

4. பொன் மேனியனே! பட்டாடை புனைவோனே!
ஒளிர்குண்டலமுடன் அலைமுடி கொண்டோனே!

5. இடி, கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே!
மூஞ்சைப் பூணூல் தோளணிவோனே!

6. சிவனின் அம்சமே ! கேசரி மகனே!
உனதொளி வீரத்தை வணங்குது உலகே!

7. பேரறி வாளியே! நற்குண வாரியே!
ராமசேவைக்கென மகிழ்வுடன் பணிவோனே!

8. தலைவன் பெருமையைக் கேட்பதுன் பரவசம்!
ராமயிலக்குவ சீதையுன் மனவசம்!

9. நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்!
கோர வுருவினில் இலங்கையை எரித்தாய்!

10. அசுரரை அழித்திடப் பேருருக் கொண்டே
ராம காரியத்தை நலமுடன் முடித்தாய்

11. சஞ்சீவி கொணர்ந்தே இலக்குவனை எழுப்பிட
விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்!

12. ரகுபதி யுன்னைப் பெரிதும் புகழ்ந்தே
பரதனைப் போல்நீ உடனுறை என்றார்!

13. ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன்
பெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்!

14. சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும்
ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும்

15. காலன் குபேரன் திசைக் காவலரும்
கவிஞர் புலவரால் சொல்லிட இயலுமோ?

16. சுக்ரீவனுக்கு அரசை அளித்திட
ராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்!

17. உன் அறிவுரையை வீடணன் கொண்டதால்
அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்!

18. தொலைவினில் ஒளிரும் ஞாயிறைக் கண்டே
சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்!

19. வாயினில் ராமனின் மோதிரம் கவ்வியே
ஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ!

20. உலகினில் முடியாக் காரியம் யாவையும்
நினதருளாலே முடிந்திடும் எளிதாய்!

21. ராமராச்சியத்தின் வாயிற் காவலன்நீ!
நுழைந்திட வியலுமோ நின்னருள் இன்றி!

22. உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்!
காவலாய் நீவர ஏதிங்கு எமக்கு அச்சம்!

23. நின்னால் மட்டுமே நின்திறல் அடங்கும்!
மூவுலகும் அதன் முன்னே நடுங்கும்!

24. பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ!
மஹாவீர னுன் திருநாமம் சொல்வாரை!

25. நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும்!
பலமிகு நின்திரு நாமம் சொல்லிட!

26. தொல்லைகள் தொலைந்திட அனுமன் அருள்வான்!
மனம், வாக்கு, செயலால் தியானிப் பவர்க்கே!

27. தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும்
ராமனின் பணிகளை நீயே செய்தாய்!

28. வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்!
அழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்!

29. நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்!
நின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்!

30. ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே!
தீயவை அழிப்பாய்! ராமனின் கனியே!

31. எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும்
கேட்டவர்க்கு அருள்வரம் சீதையுனக் களித்தார்!

32. ராம பக்தியின் சாரமே நின்னிடம்!
என்றும் அவனது சேவகன் நீயே!

33. நின்னைப் பற்றியே ராமனை அடைவார்!
தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்!

34. வாழ்வின் முடிவினில் ராமனடி சேர்வார்!
ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்!

35. மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும்
அனுமனைத் துதித்தே அனைத்தின்பம் பெறுவார்!

36. துன்பங்கள் தொலையும் துயரங்கள் தீர்ந்திடும்!
வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே!

37. ஆஞ்ச நேயனே! வெற்றி! வெற்றி! வெற்றி!
விஞ்சிடும் குருவே! எமக்கருள் புரிவாய்!

38. நூறுமுறை இதைத் துதிப்பவர் எவரோ
அவர் தளை நீங்கியே ஆனந்தம் அடைவார்!

39. அனுமனின் நாற்பதைப் படிப்பவர் எல்லாம்
சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்!

40. அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவான்
அனைவர் உள்ளிலும் திருமால் உறையவே!

சங்கடம் நீக்கியே மங்களம் அருளும்
காற்றின் மைந்தனின் ரூபம்!
ராம யிலக்குவ சீதை யுடனே
என்றுமென் னுள்ளினில் வாழும்!

ஸ்ரீ ராமசந்திர பகவானுக்கு வெற்றி எனப் பாடு!

ராம இலக்குவ ஜானகீ
மாருதிக்கு வெற்றீயெனப் பாடு!
ராம இலக்குவ ஜானகீ

ஸ்ரீ ராம ஜெயம்

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...