பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும். சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளம் பழம்...!

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை  சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத்  தருகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது, இருமலை  நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. குடற்புண்களை குணமாக்குகிறது.

மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களின் விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் தினமும் சிறிது மாதுளையை உட்கொண்டு வருவதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுவதால் பல  ஆய்வுகள் கூறுகின்றன.

சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைகூடும்.

மாதுளம்பழச் சாறு ஒருடம்ளர் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். நெஞ்செரிச்சல், மந்தம், அடிக்கடி மயக்கம்  போன்றவை நீங்கும்.

மாதுளையை தினமும் ஆண்கள் சிறிது உட்கொண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். மேலும் ஆய்வுகளிலும் மாதுளை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எப்படித் தருகிறோம் என்பதே முக்கியம்:

குருவாயூரில் ஒரு கிராமம்! அங்கு ஒரு கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள்.

எப்பொழுதும் வேலை முடித்ததும் கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

கிருஷ்ணர் மீது பக்திப் பாடல்கள் பாடி அவனை பூஜிப்பார்கள். ஒருநாள் இரவு கணவன் வெளியே சென்றிருந்த சமயம் அது.

கிருஷ்ணர் குழந்தை வடிவில் அந்த வீட்டிற்குள் நுழைந்தார். மனைவிக்கு அதிர்ச்சி கலந்து ஆச்சரியம்! கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

உடனே பால கிருஷ்ணனுக்கு ஒரு ஆசனமளித்து அமர வைத்தாள் அவள்! தட்டில் சில பழங்களைக் கொண்டு வந்தாள்! பக்தி மிகுதியால் வாழைப்பழத்தை

உரித்து, பழத்தைத் தட்டில் வைத்து விட்டு பழத்தின் தோலைக் கண்ணனுக்கு அளித்தாள்! கண்ணன் அவளது பக்தியில் மனம் கரைந்து இருந்தான். அவனும் தோலை வாங்கி வாய்க்குள் போட்டுச் சுவைத்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் சென்றதும் கணவன் வீட்டிற்குள் நுழைந்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது!

மனைவியைக் கடிந்து கொண்டான். அவளும் சுய நினைவுக்கு வந்தாள்! இருவரும் குழந்தை கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.

தங்கள் வீட்டில் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். உணவு தயாரானது. கண்ணனுக்குப் பரிமாறினார்கள்.

கண்ணனும் சாப்பிட்டான்! கணவன் கண்ணனிடம், "கண்ணா சாப்பாடு சுவையாக இருக்கிறதா?'' என்று கேட்டான்.

அதற்குக் கண்ணன், "உன் மனைவி நான் வந்தவுடன் தந்தாளே வாழைப்பழத்தோல்!....அதைவிட இந்த விருந்தில் சுவை குறைவாகத்தான் இருந்தது!'

இறைவனுக்கு என்ன தருகிறோம் என்பதை விட எப்படித் தருகிறோம் என்பதே முக்கியம்!

#முக்கியம் #கிருஷ்ணன் #குருவாயூர

நெய், வெண்ணெய் எதுல கொழுப்பு அதிகம்? எது உடம்புக்கு நல்லது?

ஆரோக்கியத்திற்குச் சிறந்தது நெய்யா, வெண்ணெயா என்ற விவாதம் பட்டிமண்டபம் போன்று தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. 'பால்' என்ற ஒரே மூலப்பொருளிலிருந்தே நெய், வெண்ணெய் இரண்டும் பெறப்படுகின்றன. இரண்டுக்கும் பல விஷயங்கள் பொதுவாய் உள்ளன.

பாலில் இருந்து நெய், வெண்ணெய் இரண்டும் பெறப்படுகின்றன. வெண்ணெயில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவுகள் கூடுவதற்குக் காரணமாகிறது. ஏற்கனவே இதய நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக் என்னும் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு, இதய இரத்தநாளம் சம்மந்தப்பட்ட நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

வெண்ணெய்

'வெண்ணெய் வெட்டி சிப்பாய்' 'கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடித்தல்' போன்ற பல சொற்றொடர்கள் தமிழில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இதைக் கொண்டு தமிழ்ச்சமுதாய வாழ்வில் வெண்ணெய் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பாலிலிருந்து கிடைக்கும் தயிரை கடைந்து கொழுப்பை பிரித்தெடுத்து வெண்ணெய் பெறப்படுகிறது. பட்டர்ஃபேட் என்னும் இயற்கையான கொழுப்பு வெண்ணெயில் அதிகம் காணப்படுகிறது.

அதாவது வெண்ணெயில் ஏறத்தாழ 80 விழுக்காடு பட்டர்ஃபேட் என்ற இயற்கை கொழுப்பு உள்ளது. எஞ்சிய விழுக்காடு நீர், பால் புரதம், சில சமயத்தில் சோடியம் ஆகியவற்றால் நிரப்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 10 கிராம் வெண்ணெயில் 5 கிராம் பூரிதகொழுப்பு, 2 கிராம் மோனோ பூரிதமில்லா கொழுப்பு ஆகியவையும் சிறிதளவு பலபடித்தான பூரிதமில்லா கொழுப்பும் காணப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, டி மற்றும் ஈ ஆகியவையும் ஓரளவுக்குக் காணப்படுகின்றன.

வெண்ணெயின் பயன்கள்

பிரெட் என்னும் ரொட்டி மற்றும் அதன் டோஸ்ட் மீது பூசுவதற்கு, மசித்த உருளைக்கிழங்கு மற்றும் சமைத்த காய்கறிகளுடன் மற்றும் பல சமையல், பேக்கரி பண்டங்கள், பல்வேறு உணவுகள் தயாரிக்க வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

வெண்ணெய் நண்பனா? பகைவனா?

வெண்ணெயில் அதிக அளவு பூரித கொழுப்பு இருப்பதால், செரம் லிப்பிடு என்ற கொழுப்பு மற்றும் முழு கொலஸ்ட்ரால் அளவுகள் கூடுவதற்குக் காரணமாகிறது. ஏற்கனவே இதய நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக் என்னும் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு, இதய இரத்தநாளம் சம்மந்தப்பட்ட நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படுவதற்கு வெண்ணெய் வழிவகுத்து விடும்.

தினசரி எடுத்துக்கொள்ளும் கலோரியில் 7 விழுக்காட்டுக்கும் அதிகமாக பூரித கொழுப்பின் அளவு இருக்கலாகாது என்று உடல் நலம் மற்றும் உணவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆகவே, கூடுமானவரைக்கும் குறைந்த அளவே வெண்ணெய் சாப்பிடுவது நல்லது.

நெய்

வெண்ணெயை உருக்கி, அதிலுள்ள நீரை முற்றிலுமாக நீக்கி, காய்ச்சுவதன் மூலம் அசுத்தங்கள், மாசு ஆகியவற்றையும் வெளியேற்றிய பின்னர் கிடைப்பதே நெய். லாக்டோஸ் உள்ளிட்ட பால் சார்ந்த புரதங்கள் வெண்ணெயிலிருந்து நீக்கப்படுகின்றன. இந்தியாவில் நெய் மிகவும் முக்கியமானது. பல்வேறு சமையல்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

வெண்ணெயில் 80 விழுக்காடு கொழுப்பு காணப்படுகிறது;நெய்யிலோ 99.5 விழுக்காடு கொழுப்பு உள்ளது. ஆனால், வெண்ணெயைக் காட்டிலும் நெய்யின் புகைநிலை அதிகமாகும். 500 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில்தான் நெய் சூடாகி, புகை வெளிவர ஆரம்பிக்கும். உணவுக்கு வெண்ணெயை காட்டிலும் அதிக சுவை கொடுக்கும் ஆற்றல் நெய்க்கு உண்டு.

நெய்யின் பயன்கள்

சமையலுக்கு பயன்படுகிறது. வதக்குவதற்கு, கிளறி பொரிப்பதற்கு மற்றும் முற்றிலும் பொரிப்பதற்கு என்று பல வகைகளில் நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருந்துகளிலும் நெய் இடம்பெறுகிறது.

சில ஆய்வுகள், நெய் கொலஸ்ட்ரால் அளவை மட்டுப்படுத்தி, இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருவதாக கூறுவதாக கருதப்படுகிறது. நெய்யில் பூரித கொழுப்பு அதிக அளவில் இருப்பதால் இதய ஆரோக்கியம் குறித்த இந்தக் கருத்தை உறுதி செய்வதற்கு மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

எது உடலுக்கு நல்லது?

பூரிதம் மற்றும் மோனோபூரிதமற்ற கொழுப்புகள் வெண்ணெய், நெய் இரண்டிலுமே அதிக அளவு உள்ளன. இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆகவே, இரண்டையும் அளவாக சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாதவர்கள் வெண்ணெயை சேர்த்துக்கொண்டால் அஜீரணம் ஏற்படலாம். ஆனால், நெய் சாப்பிட்டால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படாது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். என்னதான் சுவை மிகுந்ததாக இருந்தாலும் நெய்யை மட்டுமல்ல, வெண்ணெயையும் மட்டாய் சாப்பிடுவதே நல்லது.

தூதுவளையின் மருத்துவ பயன்கள்

*தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.*

*தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,* *பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.*
*வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின்,* *தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.*

*தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை,*
*மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும்.* *உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.*
*ஜீரண சக்தியைத் தூண்டும்.*

*தூதுவளையை நன்கு அரைத்து* *அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல்,* *நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.*

*மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு,* *பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து.* *தூதுவளைக் காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பக முறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும்.*

*தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும்.* *தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும்.*

*பாம்பின் விஷத்தை முறிக்கும்.*
*தூதுவளைக் கீரை, வேர், காய்,* *இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும்.*

*தூதுவளை* *இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல்,* *இரைப்பு நோய் அணுகாது.*
*மேற்கண்ட கற்பக முறைப்படி தூதுவளையை உண்டு வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

வேப்பஎண்ணெயின்_அற்புத_மருத்துவபயன்கள்

1. வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.

2.வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாகும்.

3.நீர் சத்து இழந்து தோல் வறட்சியாவதை தடுக்கிறது .

4. தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்கு போக்கக்கூடியது.

5. குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை போக்கும்.

6. தோல் அலர்ஜிக்கு சிறந்த மருந்து .

7. காயம் ஏற்பட்ட இடத்தில் தடவினால் சீக்கரம் காயம் குணமடையும்

8. தோல் வறட்சியை போக்கும்.

9. வேப்ப எண்ணெயில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளததால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கும்.

10. தொடர்ந்து வேப்ப எண்ணெய் உடலில் தடவி வந்தால் சருமம் மெருகேறும்.

11. கரும்புள்ளிகள் மறையும் .

12. படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்து.

13. தேங்காய் எண்ணெயில் 10:1 என்ற விகிதத்தில் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

14. தலை பேன் பிரச்சனை நீங்கும்.

15. அடர்த்தியான கூந்தைளை பெறலாம்.

16. முடி பிளவை தடுக்கும்.
தோல் மற்றும் முடி தவிர, வேப்ப எண்ணெய் புண்கள், புற்றுநோய் மற்றும் நாட்பட்ட வைரஸ் தொற்று போன்ற பல உடற்கூறான வியாதிகளுக்கு நம்பகமான தீர்வாகும். வேப்ப எண்ணெயில் சில சுகாதார நலன்கள் உள்ளன.

17. அஜீரண கோளாறு மற்றும் வயிற்று புண்ணுக்கு உகந்தது.

18. வாய் துர்நாற்றத்தை போக்கும்.

19. இதனை புற்று நோய் உள்ளவர்களுக்கு
மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்

20. வேப்ப எண்ணெய் அனைத்து பல் பிரச்சினைகளுக்கும் ஒரு மிகவும் பயனுள்ள வாய்மொழி தீர்வு. ஈறுகள், பல்வலி அல்லது மூச்சுத் திணறல், இரத்தக் கசிவு, வேப்பிலுள்ள ஆண்டிசெப்டிக் பண்புகள் ஈறுகளையும் பற்களையும் ஆரோக்கியமாக வைக்க நிரூபிக்கப்பட்டுள்ளன.

21. கொசு தொல்லையில் இருந்து விடுபட வேப்ப எண்ணையில் விளக்கை ஏற்றினால் கொசு தொல்லை இருக்காது.

22. சில சொட்டு வேப்ப எண்ணெயை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.

இன்னும் எண்ணற்ற நலன்கள் வேப்ப எண்ணெய்யில் உள்ளது.
நல்ல தூய்மையான கலப்படம் இல்லா எண்ணெயை பயன் படுத்துங்கள்.

உமீழ் நீர்:உயிர் நீர்

*சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!

```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```

```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```

```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!```

```வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!```

```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```

```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```

   ```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```

```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```

```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```

```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```

```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```

```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```

```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```

```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```

```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```

```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```

```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```
```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```

```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```

```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```

நொறுங்கத் தின்னா நூறு வயசு..

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...