தலையில் எண்ணெய் தேய்த்து குளிர்ப்பதன் சிறப்பு

நமது உடல் சூட்டினை தணிக்க வேண்டுமென்றால் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். ஆனால் தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.

ஒவ்வொரு நாளிற்கும் ஒவ்வொரு சிறப்பு இருப்பது போன்று தினமும் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. இதைப் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

• *ஞாயிற்றுக்கிழமை* - மனவருத்தத்தை ஏற்படுத்தும்.

• *திங்கட்கிழமை* - உடலுக்கு  புத்துணர்ச்சியை அளிக்கும்.

• *செவ்வாய்க்கிழமை* - உடல் நலக்குறைவை ஏற்படுத்தும்.

• *புதன்கிழமை* - செல்வத்தை அதிகப்படுத்தும்.

• *வியாழக்கிழமை* -  உடல் நலத்தை பாதுகாக்கும்.

• *வெள்ளிக்கிழமை* - அதிக  செலவை ஏற்படுத்தும்

• *சனிக்கிழமை* - விரும்பியவற்றை அடைய வழிவகைக்கும்.

என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நம் தலையை எண்ணெய் தேய்பதற்கு வலது கையினை மட்டும் பயன்படுத்த வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடவை தேய்த்து கொள்ள வேண்டும்.

இடது கையினைப் பயன்படுத்தி ஒருமுறை எண்ணெய் தலையில் தேய்பது என்பது கர்மம் செய்பவர்கள் பின்பற்றும் முறையாகும். எனவே மற்ற நேரங்களில் இதை தவிர்த்து விட வேண்டும்.

பங்குனி அமாவாசை

12 மாதங்கள் கொண்ட தமிழ் வருட கணக்கில் இறுதியாக வரும் மாதம் பங்குனி மாதமாகும். பங்குனி மாதம் என்பது பல ஆன்மீக திருவிழாக்கள் கொண்டாடப்படும் ஒரு மாதமாக இருக்கிறது.

இந்த மாதத்தில் வரும் தினங்கள், திதிகள் அனைத்து சிறப்பானதாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்த வகையில் “பங்குனி மாத அமாவாசை” தினத்தின் சிறப்புகளை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்துக கொள்ளலாம்.

குளிர் காலம் முடிந்து கடும் கோடை காலம் தொடங்குவதற்கான மாதமாக பங்குனி மாதம் இருக்கிறது. புரட்டாசி மாதம் எப்படி தெய்வீகமான மாதமாக கருதப்டுகிறதோ, அதற்கு இணையான உன்னதம் மிகுந்த ஒரு மாதம் பங்குனி மாதம் ஆகும்.

மற்ற எல்லா மாதங்களை போலவே பங்குனி மாதத்திலும் அமாவாசை தினம் வருகிறது. அன்றைய தினம் என்னென்ன செய்தால் நமக்கு மேலான பலன்கள் கிடைக்கும் என்பதை ஓம் நமசிவாய குழு மூலமாக தெரியப்படுத்துகிறோம்.

பங்குனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்க வேண்டும்.

யாசகர்களுக்கு அன்னதானம் செய்யலாம். குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள் இந்த தினத்தில் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட அந்த அம்மனின் அனுக்கிரகத்தால் நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் வருடத்தின் கடைசி மாதமான பங்குனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இப்படி செய்வதால் உங்களுக்கு இந்த ஆண்டு ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கி அடுத்து பிறக்கும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வளமை பொங்கும்.

பங்குனி மாதம் ஒரு ஆன்மீக சிறப்பு மிக்க மாதம் என்பதை அறிவோம். இத்தகைய சிறப்பு மிக்க பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்டவற்றை செய்வதால் பித்ரு சாபம் மற்றும் குல சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்க பெறும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும். உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். செல்வ நிலை உயரும்.

ஆத்ம தரிசனம்

காடு மலை போகாதே...!
அங்கு கடவுளையும் தேடாதே...!
ஊருக்குள்ள பல கோவில் உண்டு...!
உன் உள்ளத்திலும் ஒரு கோவில் உண்டு...!
இறைத்தரகரின் காலில் போய் விழாதே...!
இறைவனை அங்கும் இங்கும் தேடாதே...!
மணியடிக்கும் பூசாரி மந்திரிக்கும் பூசாரி...!
எல்லாமே மாயையேடி எதுக்கு இந்த வேஷமடி...!
உடலே எந்திரமடி உயிரே மந்திரமடி...!
சுவாசத்திலே நீ உரு போடடி...!
உள்ளிருக்கும் இறை உயிர் ஆகுமடி...!
ஆலய மூலவர் உள்ள இடம் கருவறை யடி...!
நீ பிறந்த இடமும் கருவறை யடி...!
ஆதியும் கருப்பு அந்தமும் கருப்பு மூலமும் கருப்பு சிலையும் கருப்பு அடி...!
வெறுமையான உள்ளத்திலே ஒளியான இறைவன் உண்டு...!
பொறுமையாக தேடினாலே விளையாடலாமே இறைவனோடு...!
உள்ளே ஜோதி இருக்க வெளியில் இறைவனைத் தேடி ஓடி போகாதே...! இறைவன் உனக்குள் நாடி ஒடுங்கி இருக்கிறானே...!
மனம் ஆடி அடங்கும் போது அம்பலவாணனாய், அருட்பெருஞ்ஜோதியனாய் எழுந்து ஆடு வானே...!

எதில் நிம்மதி

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன்,  ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?' என்று ஞானி கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.

கள்வர் பயம் இல்லை.

அதிக வரிகள் விதிப்பதில்லை.

முறையாக நீதி செலுத்தப்படுகிறது.

நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.

ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.

இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய்.

உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.

'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.

'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.

'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய்.

உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.

அதையே செய்.

என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.

நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார்.

சரி என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார்.

அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.

அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'

'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா.....???'

'இல்லை'

'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்.....???

இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்.......???'

விழித்தான் அரசன்.

ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய்.

இப்போது இது எனதில்லை.

நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய்.

அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே.

நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும்.

இந்த உலகம் எனதல்ல.

இந்த உடல் எனதல்ல.

எனக்கு அளிக்கப்பட்டது.

இந்த உயிர் எனதல்ல.

எனக்கு கொடுக்கப்பட்டது ..

என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

யாரையும் பகைத்துக் கொள்வது எளிதாக இருக்கிறது, சகித்து கொள்வது தான் மிகவும் கடினமாக இருக்கிறது.

தென்னிந்திய சக்தி பீடங்கள்


சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் அம்சமான தாட்சாயணியின் உடல் பாகங்கள் சிதறி விழுந்த இடங்களாகக் கருதப்படுகின்றன.

*தென்னிந்தியாவில் மொத்தம் 24 சக்தி பீடங்கள் உள்ளன*

சிவபக்தனான தட்சன் அன்னை உமையம்மை தனது மகளாகப் பிறக்கும்மாறு இறைவனான சிவபெருமானிடம் வேண்ட இறைவனும் அவ்வாறே அருள் புரிந்தார். உமையம்மையும் தாட்சாயணி என்ற நாமத்துடன் தட்சனின் மகளாக பிறந்தார்.

சிவபக்தியில் சிறந்த பெண்ணாக திகழ்ந்த தாட்சாயணியை சிவபிரானுக்கு மணம் முடித்தவுடன் தட்சன் உலகை ஆளும் ஈசனின் மாமன் என்ற ஆணவம் கொண்டு செருக்குற்று இருந்தான்.

ஆணவம் தலைக்கேறிய தட்சன் சிவபரம்பொருளை அழையாது யாகம் ஒன்றினை நடத்தினான். யாகத்திற்கு சிவபிரானை அழைக்காதது ஏன் என்று கேட்க‌ சென்ற தாட்சாயணியையும், சிவபிரானையும் அவமதித்தான்.

இதனால் கோபமுற்ற அன்னை தாட்சாயணி தட்சனால் பெற்ற இவ்வுடல் தனக்கு வேண்டாம் என்று கருதி தன்னை மாய்த்துக் கொண்டாள்.

இதனை அறிந்த சிவபிரான் சினமுற்று தாட்சாயணி உடலைக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். அப்போது தாட்சாயணியின் உடலின் பாகங்கள் சிதறி பூமியில் விழுந்தன.

அவ்வாறு உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் கோவில்கள் எழுப்பப்பட்டு அவை சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இனி தென்னிந்தியாவில் உள்ள சக்தி பீடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

*காமகோடி பீடம்*

*காமாட்சி அம்மன்* இவ்விடம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்மை காமாட்சியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள். இங்கு அம்மை மூன்று தேவியரின் அம்சமாக இருக்கிறாள்.

*மந்த்ரிணீ பீடம்*

*மீனாட்சி அம்மன்* இவ்விடம் தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது. இங்கு அன்னை மீனாட்சி என்ற பெயரில் அருள்புரிகிறாள். இவ்விடத்தில் அன்னை கல்வி மற்றும் கலைகளின் அதிபதியான ராஜமாதங்கியின் வடிவமாக திகழ்கிறாள்.

*சேது பீடம்*

*பர்வதவர்த்தினி* இவ்விடம் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்மை பர்வதவர்த்தினி என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறாள். இவ்வம்மையை வழிபட திருமணத் தடை நீக்கி நல்ல திருமண வாழ்வு அமையும்.

*வீரசக்தி பீடம்*

*உலகநாயகி* இப்பீடம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டிணம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு அன்னை உலகநாயகி என்ற திருப்பெயருடன் மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள்.

*ஞானபீடம்*

*அகிலாண்டேஸ்வரி* இப்பீடம் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி அருகில் திருவானைக்காவல் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு அன்னை அகிலம் போற்றும் அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள். இவ்வன்னை ஸ்ரீசக்கரத்தை காதணியாக அணிந்திருக்கிறாள். இங்குள்ள சிவபெருமானை அர்ச்சகர்கள் உச்சிகாலை வழிபாட்டின்போது அன்னையின் அம்சமாக தங்களைக் கருதி சேலை கட்டி வழிபாடு நடத்துகின்றனர்.

*அருணை பீடம்*

*அபிதாகுஜாம்பிகை* இப்பீடம் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் அழைந்துள்ளது. இங்கு இறைவி அபிதாகுஜாம்பிகை என்ற நாமத்தில் அருளுகிறாள். இவளே சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் ஆவாள். இத்திருத் தலத்தில் கார்த்திகை-தீப வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

*கமலை பீடம்*

*கமலாம்பிகை* இவ்விடம் தமிழ்நாட்டில் திருவாரூரில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அம்மை சந்திரனை தலையில் சூடி கமலாம்பிகை என்ற திருபெயரில் அருளுகிறாள். இங்கு அம்பிகை நான்கு கரங்களுடன் யோகாசனத்தில் அருளுகிறாள். இவ்விடத்தில் அன்னையின் தோழி நீலோத்பலாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள்.

*குமரி பீடம்*

*குமரி அம்மன்* இவ்விடம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. அம்பாள் கன்னி பகவதியாக முக்கூடல் சங்கமத்தில் அருளும் தலம் இது. இவ்வன்னை பிரகாசமான மூக்குத்தி அணிந்து சிறப்பு பெறுகிறாள்.

*விஷ்ணுசக்தி பீடம்*

இவ்விடம் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. 72000 கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியான இவ்வம்மை மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். ஆவணி ஞாயிறு அன்று மஞ்சள் பூசிய முகத்துடன் செம்பருத்தி அலங்காரத்தில் காட்சி தரும் இவ்வன்னையைக் காண கண்கள் கோடி வேண்டும்.

*கால பீடம்*

*அபிராமி* இவ்விடம் தமிழ்நாட்டில் திருக்கடையூரில் அமைந்துள்ளது. இங்கு அம்மை அபிராமி என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறாள். அன்னை தன் பக்தனுக்காக தை அமாவாசை அன்று பூரண முழுநிலாவாகக் காட்சி அருளி அதன் காரணமாக அபிராமி அந்தாதி பாடப்பட்ட தலம். இங்கு மாங்கல்ய காணிக்கை சிறப்பு.

*காளிசக்தி பீடம்*

*மகாகாளி* இவ்விடம் தமிழ்நாட்டில் திருவள்ளுர் அருகில் திருஆலங்காட்டில் உள்ளது. இவ்விடத்தில் அன்னை இறைவனுடன் நடனப் போட்டி ஆடிய மகாகாளித் தலம். ரத்த பீஜனை போரிட்டு அழித்த தலம் இது. இங்கு வண்டார்குழலி அம்மை, காரைகால் அம்மை ஆகியோர் சிறப்பு பெறுகின்றனர்.

*தரணி பீடம்*

இவ்விடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்மை குழல்வாய்மொழி, பராசக்தி என்ற திருநாமங்களுடன் அருளுகிறாள். இவ்விடத்தில் உள்ள அருவிகள் காரணமாக இது புண்ணிய தீர்த்த தலமாகக் கருதப்படுகிறது. இங்கு பவுர்ணமி இரவு நவசக்தி பூஜை நடைபெறுகிறது.

*சாயா பீடம்*

*லலிதா* இவ்விடம் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து முசிறி செல்லும் வழியில் ஈங்கோய்மலை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அம்மை மரகதாம்பிகை, லலிதா என்ற திருநாமத்துடன் அருளுகிறாள். இறைவனான சிவபிரான் உமையம்மைக்கு தனது இடது பாகத்தை தருவதாக உறுதியளித்த தலம் இது.

*வீமலை பீடம்*

இவ்விடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அன்னை உலகாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள். இசை வல்லுநர்கள் இவ்வன்னையை வழிபட அவர்களின் இசைத்திறன் மேம்படும். இவ்வன்னையே அகத்தியருக்கு திருமணக்காட்சி அருள காரணமானவள். இவ்விடம் நவகைலாய தலங்களுள் ஒன்று.

*காந்திசக்தி பீடம்*

இப்பீடம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. இங்கு இறைவி காந்திமதி என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வம்மை மாலையில் ஞானசரஸ்வதியாகக் காட்சியளிக்கிறாள். இவ்விடத்தில் அம்மையே இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதாகக் கருதப்படுகிறது.

*பிரணவ பீடம்*

இவ்விடம் தமிழ்நாட்டில் சீர்காழி அருகில் திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அன்னை பிரம்மவித்யாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். இவ்வன்னையை வழிபட குழந்தைப்பேறு, திருமணப்பாக்கியம், கல்வி மேன்மை, நாவன்மை ஆகியவற்றைப் பெறலாம். நரம்பு நோயையும் இவ்வன்னை தீர்ப்பாள். நவக்கிரகங்களில் புதனுக்குரிய தலமாக இவ்விடம் விளங்குகிறது.

*தரும பீடம்*

இவ்விடம் தமிழ்நாட்டில் திருவையாற்றில் உள்ளது. இங்கு அன்னை தர்மசம்வர்த்தினி என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னையே உலகிற்கு படியளக்கும் நாயகி ஆவாள். இவ்விடத்தில் அஷ்டமி திதியில் இரவு வேளையில் இவ்வன்னைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

*இஷீசக்தி பீடம்*

இவ்விடம் தமிழ்நாட்டில் சென்னை திருவொற்றியூரில் உள்ளது. இங்கு அன்னை வடிவாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னை ஞானசக்தியின் வடிவம் ஆவாள். இங்கு தினமும் சுயம்வர புஷ்பாஞ்சல் நடைபெறுகிறது.

*அர்த்தநாரி பீடம்*

*மூகாம்பிகை* இவ்விடம் கர்நாடக மாநிலத்தில் கொல்லூரில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அன்னை மூகாம்பிகை என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னைக்கு அபிசேகம் கிடையாது. இவள் சரஸ்வதியின் அம்சமாவாள். ஆதிசங்கரர் இவ்வன்னையின் மீது கலாரோஹணம் பாடினார்.

*கர்ண பீடம்*

இவ்விடம் கர்நாடக மாநிலத்தில் கோகர்ணத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் அம்மை தாமிர கவுரி என்ற நாமத்தில் சிவனை திருமணம் செய்த தலம். இவள் நதி வடிவ அம்பிகை ஆவாள். இங்கு சிறப்புமிக்க கோடிதீர்த்தம் உள்ளது.

*சைல பீடம்*

இவ்விடம் ஆந்திர மாநில ஸ்ரீசைலத்தில் உள்ளது.இங்க அன்னை பிரம்மராம்பாள் என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னையே பவானி வடிவில் மராட்டிய மன்னன் சிவாஜிக்கு வாள் அளித்தவள் ஆவாள். இவ்விடம் பூலோகக் கைலாயம் என்றழைக்கப்படுகிறது. சிவானந்த லஹரி பிறந்த தலம் இது.

*ஞான பீடம்*

இவ்விடம் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ளது. அன்னை இவ்விடத்தில் ஞானப்பூங்கோதை என்ற பெயரில் அருளுகிறாள். இவ்வன்னை கல்வி மற்றும் அறிவை வழங்கும் தெய்வமாக வழிபடப்படுகிறாள். கண்ணப்பர் வழிபட்ட தலம் இது. இங்கு சரஸ்வதி தீர்த்தம் அமைந்துள்ளது.

*மாணிக்க பீடம்*

இவ்விடம் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காளிதாசர் சியாமளா தண்டகத்தில் குறிப்பிடும் மாணிக்கவீணா என்ற ஸ்லோகத்தின் அதிபதியான‌ மாணிக்காம்பாள் அருளும் தலம் இது.

*மகாசக்தி பீடம்*

இவ்விடம் கேரள மாநிலத்தில் கொடுங்களுரில் அமைந்துள்ளது. இது சிலப்பதிகார காலத்தில் கட்டப்பட்ட பகவதி கோவில். இவ்விடத்தில் அன்னையின் திருவுருவம் பலாமரத்தினால் ஆனது. இங்கு கண்ணகியே பகவதியாக அருளுகிறாள். இவ்வன்னையை வழிபட குழந்தை பாக்கியம் ஏற்படும்.

திதி தேவதைகளின் தியான ஸ்லோகங்கள்


பிரதமை திதியின் அதி தேவதையான அக்னி தேவனின் தியான ஸ்லோகம்:

ஏஹி ஸாக்ஷாதிஹாக்னே த்வம் தேவானாம் ஹவ்யவாஹகா /
ஸாந்திகர்மணி பூஜார்திமேதாம் மூர்த்திம் ஸமாவிஸா //

துவித்தியை திதியின் அதி தேவதையான த்வஷ்டாவின்  தியான ஸ்லோகம்:

த்வஷ்டார்ஜகத்  த்ரயீ  தாதா: பூ நீஹி தயயாமஹீம் /
ப்ரதிமாயாம்முஷ்யாம் த்வம் ஸந்நிதத்ஸ்வ சதுர்முகா//

திருதியை திதியின் அதி தேவதையான பார்வதி தேவியின்  தியான ஸ்லோகம்:

ப்ரதிமாயாம்  ஹிரண்மய்யாமேஹி பர்வதகன்யகே /
நமஸ்யாமி பதாப்ஜம் தே பூமர்தி ப்ரத்திபதயே //

சதுர்த்தி  திதியின் அதி தேவதையான கஜனானனுடைய (கனேசன்) தியான ஸ்லோகம்:

விக்னாந்த காலா பாலார்க பார்வதீமல ஸம்பவா /
கஜானனார்சாம் க்ருஹ்ணீஷ்வ ப்ரதிமாமேத்ரு ஸாதரம் //

பஞ்சமி திதியின் அதி தேவதையான  ஸர்ப தேவனின் தியான ஸ்லோகம்:

ஸர்பாதிப மயாஹூத: ப்ரதிமாயாம் நிஷீதபோ /
பூஜயாமி பதாப்ஜம் தே ஸர்வஸம்பதவாப்தயே //

ஷஷ்டி திதியின் அதி தேவதையான ஆறுமுக தேவனின் தியான ஸ்லோகம்:

ஷடானனா  நமஸ்யாம் தே கரவாணி பதாப்ஜயோ: /
ப்ரதிமாயாம் ஹிரண்மய்யாமேஹி வல்லிமன: ப்ரியா //

சப்தமி திதியின் அதி தேவதையான சூரிய தேவனின் தியான ஸ்லோகம்:

ஸஹஸ்ர பானோ சண்டாம்ஸோ ப்ரதிமாமேஹி ஸாதரம் /
த்ரயீதனோ நமஸ்யாம் தே பூயோ பூயஹ கரோம்யஹம் //

அஷ்டமி திதியின் அதி தேவதையான ஸத்யோஜாத தேவனின் தியான ஸ்லோகம்:

ஸத்யோஜாத நமஸ்தேஸ்து கௌரீ நாதி நமோஸ்துதே /
ப்ரஸாதம் குருமே ஸம்போ ப்ரதிமாமேஹி ஸாதரம் //

நவமி  திதியின் அதி தேவதையான துர்கா தேவியின் தியான ஸ்லோகம்:

துர்கே த்ரிநயனே சந்திரகலாங்கித ஸிரோருஹே /
இஹாக்த்ய ப்ரஸாதம் மே ரசயாஸு ஸுரேஸ்வரி //

தசமி  திதியின் அதி தேவதையான ஆதிசேஷனின் தியான ஸ்லோகம்:

பூபாரபூக்னக்ரீவாயா விஷ்ணுபாதாம்  கமௌளயே /
நமோ நமோஸ்து நாகாய ப்ரதிமாமேஹி ஸாதரம் //

ஏகாதசி திதியின் அதி தேவதையான தர்ம தேவனின் தியான ஸ்லோகம்:

ஸ்ரீதிவேத்யஸ்வரூபாய யாகாதி க்ரது  மூர்த்தயே /
பூரி ஸ்ரேயஸ்ஸாதனாய தர்மாய மஹதே நமஹா //

துவாதசி  திதியின் அதி தேவதையான ஹரிதேவனின் தியான ஸ்லோகம்:

ஹரே ஜகத் த்ரயாதீஸ லக்ஷ்மீ வல்லபா மாதவா /
ப்ரதிமாமேத்யா ஸஹஸா ப்ரஸாதம் குருமே விபோ //

திரயோதசி  திதியின் அதி தேவதையான மன்மதனின் தியான ஸ்லோகம்:

ரதிவல்லபா புஷ்பாஸ்த்ரா நாராயண தனுத்பவா /
ஏஹிமாம் ப்ரதிமாம் தூர்ணம் ப்ரஸீத மயி மன்மதி //

சதுர்தசி  திதியின் அதி தேவதையான கலிபுருஷனின் தியான ஸ்லோகம்:

ஸர்வாதர்மப்ரவக்தாரம் ஸர்வ பாப ப்ரவர்தகம் /
வந்து  நாசதுரம் வந்தே பூதயே கலிபூபதிம் //

பௌர்ணமி   திதியின் அதி தேவதையான சந்திர தேவனின் தியான ஸ்லோகம்:

ஸர்வகீர்வாண ஸேவ்யாய லக்ஷ்மீ காமுக சக்ஷுஷே /
க்ஷீராப்தி ப்ரிய புத்ராய நம சந்த்ரமஸேஸ்துதே //

அமாவாசை திதியின் அதி தேவதையான பித்ரு தேவதையின் தியான ஸ்லோகம்:

பித்ருலோக நிவாஸிப்யஹ பித்ருப்யோஸ்து நமோ நமஹ /
ப்ரதிமாம்  ப்ராப்ய ஸௌவர்ணீம் ப்ரஸீதம் து ஸதாமயி //

அமாவாசை அன்று எதையெல்லாம் செய்யக்கூடாது?

அமாவாசையன்று வாசலில் கோலம் போடக்கூடாது ஏன்?

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு திதி விசேஷமானது. அதாவது,

🔹 சதுர்த்தி - விநாயகருக்கு

🔹 சஷ்டி - முருகனுக்கு

🔹 ஏகாதசி - மகாவிஷ்ணுவிற்கு

🔹 அஷ்டமி - பைரவருக்கு

🔹 சதுர்த்தசி - சிவனுக்கு

🔹 பௌர்ணமி - அம்மனுக்கு

இதைப் போலவே, மறைந்த முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) என்று ஒரு திதி, அதுதான் அமாவாசை.

அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். அதனால் பித்ருக்களின் பசியும், தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். இவ்வாறு நம் முன்னோர்களை நம் இருப்பிடத்திற்கு வரவழைத்து, அவர்களின் பசி, தாகம் தீர எள்ளு கலந்த ஜலத்தால் தர்ப்பணம், சிரார்த்தம் செய்யும் போது, அவர்கள் நம் இருப்பிடம் வந்து நாம் தரும் எள்ளு கலந்த ஜலத்தை ஏற்றுக்கொண்டு பசி, தாகத்தை தணித்துக்கொள்கிறார்கள்.

தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதாவது அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும். அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும் என்பதால் இவை பித்ருக்களுக்குப் பிடிக்காது.

ஆகவே அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்துசெல்லும் வரை, அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும், தெய்வங்களுக்குப் பூஜை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர், வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம்.

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...