சகல செல்வங்கள் நிலைக்க

1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.

2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.

5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக

9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும

10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்

.

11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?

20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள

21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும

22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள

23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும

24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்

.27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும

28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது

.31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும

32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாதுநகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது

.33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது

34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.

35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும

37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.,

38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப் பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு, 100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான

39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும். ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள

40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான

41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.

42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும

43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும

44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாகஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும

45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

ஜென்ம நட்சத்திரத்திற்கான நட்சத்திர காயத்ரி மந்திரம்

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் மாற்றம் காணலாம்.

அஸ்வினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

"சுவாச நிலையின் சூட்சமத்தைப் பற்றி" திருமூலர் வெளிப்படுத்திய பாடல்

வாசிவா வென்று வாசியில் ஊடாடி
வாசியை அங்கங்கே வைத்து நீசாதித்தால்
வாசியும் ஈசனும் மருவியே ஒன்றாகும்
வாசியை போல்சித்தி மற்றொன்றும் இல்லையே
                  -- திருமூலர்.

1. வாசிவா வென்று வாசியில் ஊடாடி
கண்ணின் (புறக்கண்) நினைவைப் புருவமத்தியில் வைத்து, அகக்கண்ணான உயிரோடு ஒன்றி நினைவாற்றலை விண்ணிலே செலுத்தி விண்ணிலிருந்து வரும் பேராற்றலை
உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும்.
அதாவது, விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைக் கவர்ந்து இழுத்து நாம் சுவாசிக்க வேண்டும்.
அங்கிருந்து வரும் உணர்வலைகள் உயிரிலே மோதும் பொழுது பேரொளியாக அது மாறுகின்றது.
நம் சுவாசமானது இப்படி பூமி சமைத்ததை ஈர்க்காதபடி.., "நேரடியாக.., விண்ணிலிருந்து வருவதைச் சுவாசமாக்க வேண்டும்".

2. வாசியை அங்கங்கே வைத்து நீசாதித்தால்
அப்படி விண்ணிலிருந்து வரும் அருள்  ஆற்றல்மிக்க சித்தர்களின் சக்திகளை உயிர் வழியாகச் சுவாசித்து.., நம் உடலில் இருக்கும் அனைத்து அங்கங்களிலும் "கண்ணின் நினைவைக் கொண்டு" அந்த ஆற்றலை இணையச் செய்யவேண்டும்.

நம் உடலிலுள்ள அங்கங்கள்:
1. சிறு குடல், பெருகுடல்
2. கணையங்கள்
3. கல்லீரல், மண்ணீரல்
4. நுரையீரல்
5. சிறுநீரகங்கள்
6. இதயம்
7. சிறு மூளை, பெருமூளை
8. கண்களில் உள்ள கருமணிகள்
9. நரம்பு மண்டலம்
10. எலும்பு மண்டலம்
11. விலா எலும்புகள்
12. குருத்தெலும்பு
13. எலும்புக்குள் உறைந்துள்ள ஊன்
14. தசை மண்டலம்
15. தோ மண்டலம்

மேலும்.., நம் உடல் அங்கங்கள் அனைத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் "அணுக்களிலும்", உயிர் வழியாகச் சுவாசித்த அந்த சித்தர்களின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டும்.

3. வாசியும் ஈசனும் மருவியே ஒன்றாகும்
நம் உயிர் "ஓ.." என்று ஜீவனாகி "ம்..." என்று உடலாக மாற்றுகின்றது.
அதாவது, ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம்.
உயிர் வழி சுவாசித்த அந்த அருள் சக்தி உயிரால் உருவாக்கப்பட்ட நம் உடலில் உள்ள கோடிக் கணக்கான அணுக்களிலும் சேர்கின்றது.
அப்பொழுது, அனைத்து அணுக்களும் உயிரைப் போன்றே ஒளியாக மாறும் சந்தர்ப்பம் வருகின்றது.
நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களும்
"உயிருடன் ஒன்றுகின்றது".
இது பேரருளாக, பேரொளியாக மாறுகின்றது.

4. வாசியை போல்சித்தி மற்றொன்றும் இல்லையே
இப்படி, உயிர் வழியாக நம் சுவாசநிலை அமைந்து, அண்டத்திலிருக்கும் ஆற்றலை, இந்தப் பிண்டத்திற்குள் சேர்த்திடல் வேண்டும்
அப்பொழுது, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையமுடியும்.
பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும். அழியா ஒளிச் சரீரம் பெறமுடியும்.
"உயிர் வழி சுவாசம் ஒன்றுதான்" மனிதனைத் தெய்வீக நிலை அடையச் செய்யும்.
மனிதன் முழுமை அடைய.., விண் செல்ல "இதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை".

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி பற்றி பகவான் ஓஷோ


(ஓஷோ அவர்களது பல்வேறு நூல்களிலிருந்து
தொகுக்கப்பட்டது)
.
ஸ்ரீ ரமணர் ஒரு பண்டிதரல்ல. ஏனெனில் அவர்
சிறு வயதிலேயே வீட்டை விட்டு நீங்கினார்.
மீண்டும் சாமான்ய வாழ்க்கைக்குத்
திரும்பவில்லை.அவர் தனது மெய்யான
இல்லத்தை (தான் என்னும் உணர்வை)
அறிந்தார். உண்மையான வீட்டை அடைந்த
பின்னர் யார் தான் சாமானிய வீட்டிற்குத்
திரும்ப விரும்புவர் ? அவர் காட்டும் வழி
நேரான ஒன்று. ‘நான் யார்’ என்னும் தேடுதல்
மூலம் உனது உள்ளத்தின் மையத்தினைச்
சார்வாய் ஆழ்ந்த ஞான உணர்வின் ஸ்தாபகர்
ஸ்ரீ ரமணர் என்றே கூறலாம்.
ஒரு மிகச் சிறிய கையடக்கமான ‘ நான் யார் ‘
என்ற நூலின் வழியாக ஒரு மிகப் பெரிய
உண்மையினை,மிக உயரிய மார்க்கத்தினை
ரமணர் உணர்த்தினார்.பெரும்பாலும்
மௌனத்தில் ஆழ்ந்திருந்த ரமணரின் மோன
உபதேசமே மெய்யான வழி. கலீல் கிப்ரான்
மஹரிஷி ரமணரைச் சந்தித்திருந்தால் மிக்க
ஆன்மிகப் பயன் பெற்றிருப்பார்.அப்போது இந்த
உலக குருவின் குரலை அவர் கேட்டிருப்பார்.
-----( நான் விரும்பும் நூல்கள் : 11ஆம்
பகுதி )
.
எப்படி ரமண மஹரிஷிக்கு சிறுவயதிலேயே
திடீரென ஆன்மிக எழுச்சி ஏற்பட்டது ?
எங்ஙனம் அச்சிறுவனது தனித்துவம்
மறைந்து, அவன் பிரபஞ்ச மெய்யுணர்வு
பெற்றான் ? அச்சிறுவன் ஓர் இறப்புச்
செய்தியைக் கேட்டான். ‘ நான் இறப்பு என்பது
எது என்பதைக் கண்டுணர்வேன் ’ என்று
முடிவுசெய்து கொண்ட அச்சிறுவன்,தன்
உள்தேடுதலில் உடனடியாக ஆழ்ந்தான். இது
ஒரு ஆன்மிக தேடல் என்ற எண்ணம் கூட
அவனுக்கு இல்லை. தனது அறையிலேயே
படுத்துக்கொண்டு,மிகத் தீவிரமான
உந்துதலுடன் தனது உள்ளே அவன்
ஆழ்ந்தான்.
தனது உடலே இறந்துவிட்டது என்று அவன்
பாவித்துக் கொண்டான்.அந்த
இறப்புணர்விலேயே அவன் தீவிரமாக
மூழ்கினான்.உடனே ஒரு ஞானக் கதவு
படீரெனத் திறந்தது.காலத்தையும்
இடத்தையும் கடந்த ஒரு பூரணம் அவனை
அணைத்து கொண்டது. நமது அனைவரும்
வாழ்விழும் அதிஷ்டானமாக அடித்தளமாக
அமைந்துள்ள,அனைத்திற்கும் ஆதாரமான
பூர்ண பிரக்ஞயில் அவன் கரைந்து
விட்டான்.அந்த இறப்பு நாடகத்திலிருந்த
அவன் கண் விழித்தபோது அவன் மிகவும்
ஒரு மாறுபட்ட ஒரு வடிவமாக எழுந்தான்.
அவனுக்குள் என்ன நிகழ்ந்தது ? இதுவரை
எந்தவிதமான சாதனையும் அவன்
செய்ததில்லை. எந்த விதத்திலும் அவன்
தனிப்பட்டுத் திகழ்ந்ததில்லை.
அவனிடமிருந்து
குறிப்பிட்ட ஒன்று என்னவெனில் அவனது மிக
ஆழ்ந்த உறக்கம்தான்.அவனை உறக்கத்திலிருந்
து எழுப்புவது மிகக் கடினமான காரியம்.
அவனை அடித்தாலும்,உதைத்தாலும் அவன்
எழுந்திருக்க மாட்டான்.இதையே
அச்சிறுவனது
தனிச் சிறப்பாக கூறலாம்.ஏனெனில் ஆழ்ந்த
உறக்கம் என்பது சமாதியின் வாயிற்
கதவு.அதன் வழியாக நாம் ஆத்ம லோகத்தில்
பிரவேசிக்கலாம் (எனக்கும் இப்படிப்பட்ட
ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்). --(ஓர் உத்தம
ஆசான்,பகுதி 1,அத்யாயம் 3)
.
ரமண மஹரிஷி கூறுகிறார் : ஆத்ம ஞானம்
என்பது மிக எளிதாகப் பெறக்கூடிய
ஒன்று.ஏனெனில் அதை எங்கேயும் தேடிச்
செல்ல வேண்டியதில்லை. அது
உன்னிடத்திலேயே உள்ளது. எப்போதும்
இருந்து கொண்டே இருப்பது. நீ செய்ய
வேண்டியதெல்லாம் வெளியே நோக்குவதே
விட்டு உள்ளே திரும்பி நோக்க வேண்டிய
ஒன்று தான். அந்த திரும்பி நோக்கிலேயே நீ
ஆத்ம ஞானம் பெறுகிறாய். நீ உடனே ஒரு
பிச்சைக்காரன் என்ற நிலையிலிருந்து
சக்கரவர்த்தி என்ற நிலைக்கு உயர்கிறாய்.ஆத்ம
சிம்மாசனத்தில் அமர்ந்து ஞான
சாம்ராஜ்யத்தை
ஆளத்துவங்குகிறாய். நீ செய்ய
வேண்டியதெல்லாம் திரும்பி காண
வேண்டியதுதான்.அதுவே ஆத்ம ஞானத்தின்
திறவுகோல்.
சூஃபிகள் காட்டிய வழியும் இதுவே.
இம்மானுவேல் காண்ட் போன்ற மேலவை
தத்துவ அறிஞர்களும் ஆத்மிக அறிவு மிகச்
சிரமப்பட்டு அடைய வேண்டிய ஒன்று என்று
கூறியபோது ரமண மகரிஷி அது மிகவும்
எளிதில் அடையக் கூடியது என்று
அறிவுறுத்தினார் அவர் அதனைத் தனது
அனுபவத்திலேயே அறிந்தார் அல்லவா ? - ( “
ஓர் உத்தமன் ஆசான் ; பகுதி 1 ; அத்தியாயம் 1
“ )
.
ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வின் இறுதி
நொடிகள். புற்று நோய் அவரது உடலை
அரித்து விட்டது.அத்தருணத்திலும்,ரமணர்
தன் அருள் பார்வையுடன் புன்முறுவல்
பூத்தார்.அவர் தேகம் தீவிரமான வாதனையை
அனுபவித்திருக்கும்.ஆயினும் அவர் வதனம்
புன்முறுவலுடன் விகசித்தது.அழுத
ுகொண்டிருந்த பக்தர்களைப் பார்த்து அவர்
கூறினார் : ஏன் அழுகிறீர்கள் ? போவதற்கு
என்று ஒன்றும் இல்லை. நான் எங்கே
உங்களை
விட்டு போகப் போகிறேன் ? நான் இங்கே தான்
தொடர்ந்து இருப்பேன். இந்தத் தேகம்
மண்ணோடு மண்ணாகலாம் .ஆனால் எங்குமே
செல்ல மாட்டேன். இப்போது இந்த அகிலத்தின்
பேரலையாய் இருக்கிறேனோ அப்படியே
தொடர்ந்து இருப்பேன். நான் உங்களை
விட்டுப்
பிரிந்து விடுவேன் என்பது உங்களது தவறான
எண்ணத்தால் உண்டாவது. நான் எப்போதும்
இப்போது போலவே இருப்பேன்.”
ஒரு ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் இடையே
உள்ள வேறுபாட்டை உங்களால் காண
முடிகிறதா ? இந்தத் தேகம் என்பது ஒரு
அஞ்ஞானிக்கு அவனுக்கும் பூர்ண
ப்ரக்ஞைக்கும் இடையே உள்ள தடைச்சுவராக
உள்ளது.ஒரு ஞானிக்கோ அது அவனையும்
பூர்ணத்துவத்தையும் இணைக்கும் பாலம்.
(வெள்ளை ரோஜா,அத்தியாயம் 1)
.
ரமண மஹரிஷி கூறிய நேர் வழி இதுவே.
உண்மையான தியானம் என்பது ஒன்றே
ஒன்றுதான். மௌனமாக அமர்ந்து ‘ நான் யார் ‘
என்று வினவுங்கால் முதலில் மனதின்
மேல்மட்டத்தின் எழும் இவ்வினா,தொடர்ந்து
விசாரித்து வர,அம்புபோல் உள்நோக்கி நம்
மூலத்தை நோக்கிச் செல்கிறது. அந்த வினா
இதயத்தின் ஆழத்தில் ஓர் உணர்வாக
மாறுகிறது. இந்த விசாரணையைத்
தொடருங்கள். ஒரு நாள் இந்த உணர்வும்
முற்றிலும் மறைகிறது. நீங்கள்
வினாவையும்,விடையும் கடந்த
மெய்யுணர்வாக பரிணாமம் அடைகின்றீர்கள். ‘
நான் யார் ‘ என்னும் இந்தக் கேள்வி,உங்கட்கு
எழும் எல்லாக் கேள்விகளையுமே அழிக்க
வல்லது.வினாவே அற்ற பரவெளியை நீங்கள்
அடைகின்றீர்கள். அதுவே உங்களது
தேடுதலின் விடையுமாகும்.அந்த
விளக்கத்தை நீங்கள் அறிந்த பின்னர், உங்களால்
யாருக்குமே அதைச் சொல்லால் விளக்க
முடியாது,அது வினாவையும்,விடையையும்
கடந்த நிலை. (வெள்ளை ரோஜா,அத்தியாயம்
4)
.
ரமண மஹரிஷியிடம் ஒருவர் “ நான் முழு
மௌனம் என்ற நிலையில் என்னைப்
பூரணமாக
அறிய எதைப் பயில வேண்டும் ? “ என்று
கேட்டார். அதற்கு ரமண மஹரிஷியிடம்
விடையாவது : “ ஆத்மாவை அறிய நீ
எதையும் புதிதாகக் கற்க வேண்டியதில்லை.
உண்மையில் இதுவரை நீ கற்றதை எல்லாம்
விட்டு விட வேண்டும்.உன்னையே நீ
பயில்வாய் “ என்றாராம்.
இதுவரை நீ கற்றதெல்லாவற்றையும் மறந்து
விடு.உனது புத்திசாலித்தனம்,சாதுர்யம்
எல்லாவற்றையும் துறந்து,ஒரு குழந்தை
போன்ற தன்மையுடனும்,நம்பிக்கையுடன் உள்
நோக்கிச் சொல். உன்னைத் தவிர வேறு
ஒன்றுமே இப்பிரபஞ்சத்தில் இல்லை. எனவே
ஒரு திறந்த இதயத்துடன் ஞானத்தை
வரவேற்பாய். இதுவே உண்மையான சிரத்தை
உண்மையான அறிதல். (வெள்ளை
ரோஜா,அத்தியாயம் 10)
.
ரமண மஹரிஷியின் உடலை புற்று நோய்
விழுங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து
விடுபட வழியே இல்லை. அவரைக்
குணப்படுத்த பல மருத்துவ நிபுணர்கள்
வந்தனர்.அவர்களுக்கு ஓர் அதிசியம்
காத்திருந்தது.அவர்களுக்கு புரியாத
நிகழ்ச்சியைக் கண்டனர். மஹரிஷியின்
தேகத்தில் தாங்க முடியாத வலி அனுபவம்
இருந்திருக்கும். ஆயினும் அவர் விழிகளில்
அதற்கான அறிகுறியே இல்லை .அவை
எப்போதும் போல பரம சாந்தக் கடலாகவே
ஒளிர்ந்து கொண்டு இருந்தன.ஏனெனில்
அவ்விழிகள் அவரது ஆத்மாவையே
நோக்கிக்கொண்டு இருந்தன. “ காண்பது
அந்தமில்லாக் கண் “ அல்லவா ?
அவரை மருத்துவர்கள் கேட்டனர் : “ பகவானே,
உங்களுக்கு வலியே இல்லையா ? “ ரமண
மஹரிஷி விடையிறுத்தார் : “ வலி இங்கே
உள்ளது என்பது உண்மைதான்.ஆனால்
அவ்வலி என்னால் அனுபவிக்கப்
படுவதில்லை. என் உடலில் வலி உள்ளது
என்பதை அறிவேன். ஆனால் அதை நான் ஒரு
சாட்சியாகவே நோக்கிக்கொண்டு இருக்கிறேன்.
அதனால் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை.”
பலருக்கு எழும் கேள்வி இது.பகவான் போன்ற
பரம ஞானிக்கு எப்படி இந்தக் கொடு நோய்
வந்தது ? “ ஒரு ஞானிக்கு ஏற்படும்
துன்பங்களும்,மகிழ்ச்சியும் அவரது
உடலுக்கே
ஏற்படுபவை.அவை அவர் ஆத்ம சாட்சாத்காரம்
அடைவதற்கு முன் துலங்கிய கர்ம
பலன்களின்
தொடர்ச்சியே.ஒரு கனவில் விதைக்கப்பட்ட
விதைகள் கனவிலேயே வளர்ந்து விதை
கொடுக்கலாம். நான் விழித்து எழுந்த பின்
இவை கனவுக் கனிகள் என்றே உணர்கிறேன்.
நான் கனவிலேயே தொடர்ந்து இருந்தால்
அந்தக் கனிகளை அறுவடை செய்து,அதன்
விதைகளை அடுத்த பயிர்வரை விதைத்து
இருப்பேன்.விழித்தெழுந்துவிட்ட நானோ
இந்தப்
பயனற்ற செயலில் ஈடுபட மாட்டேன்
அல்லவா ? அந்தக் கனவுக் கனிகள் பழுத்து
உதிர்ந்து விட்டன.அவற்றுடன் எவ்விதத்
தொடர்பும் இல்லை.அது போன்றே,ஞானிக்கு
ஏற்படும் இன்ப,துன்பங்களும் பழைய கர்ம
பலங்களின் தொடர்ச்சி என்றும்,அவற்றுடன்
உண்மையான தனக்கு எந்தவிதத் தொடர்பும்
இல்லை என உணர்ந்து உள்ளான்.
ஒருவர் வந்து ரமணர் பாதங்களில்
புஷ்பங்களைச் சமர்ப்பிக்கும் போதும்,அவர்
பற்றற்குக் காண்கிறார்.அந்த பக்தனின்
நல்கருமங்களே அவனை தன் பாதங்களில்
புஷ்பங்களை சமர்ப்பிக்க வைக்கின்றன.அவற்
றை பகவான் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டால்
அந்த பக்தனுக்கு ஒரு புதிய கர்ம
வினைக்கான
ஆரம்பம் நிகிழும். அதே சமயம் ‘ இப்படிச்
செய்ய வேண்டாம் ‘ என்று அவர் மறுத்தால்,
அது பகவானிடம் ஒரு எதிர்மறையான
தர்மத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே
இந்த ஏற்பு மற்றும் மறுப்பு இரண்டுமே
செயல் தொடக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்
அதை ஏற்கவும் இல்லை; மறுக்கவும்
இல்லை.
அவர் எப்பொழுதும் அசைவற்று சாட்சியாக
வீற்றிருந்தார். (வெள்ளை ரோஜா,அத்தியாயம்
3)
.

நான் யார்?



இப்பிறவியின் நோக்கம் என்ன?

நான் இவ்வுடலை ஏன் எடுத்தேன்?

இவ்வுடல் என்றால் என்ன?

உயிர் என்றால் என்ன?

என்று பல கேள்விகள்
எவர் ஒருவர் தனது பிறப்பின் நோக்கம் அறிந்தவரே அவரே
வாழ தகுதியுடையவராகிறார் அவர்களால் மட்டுமே மீண்டும் பிறவாமை என்ற நிலையை அடைய முடியும்......

எவ்வாறு இந்நிலையை அடையமுடியும் என்றால் அதற்கு
ஒரு குரு இருந்தால் மட்டுமே முடியும்....

 அக்குருவை நான் எவ்வாறு அடையமுடியும் என்றால் ??????????
குருவின் அவசியம்

குருவுக்கு மரியாதை செய்வோம்!

குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்து ஓரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரை உணர்வு அற்றதோர் கோவே.

ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்தார்கள் திருமூல நாயனார்.

குருவின் அவசியம் பற்றி நாயனார் வழி நின்று மேலே உள்ள் பாடலைச் சிந்திப்போம்.

கடவுள் , மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே குருமார்கள். அவர்களைக் கடவுளாகவே நினைத்துப் போற்ற வேண்டும்.குருமார்கள் எல்லாம் கடவுளின் பிரதிநிதிகள் என்றே கொள்ள வேண்டும். சிவபெருமானின் ஆணையை ஏற்று யிவ்வுலகிற்கு நலம் செய்வதற்காகவே பிறப்பெடுக்கும் புண்ணிய மூர்த்திகளே குருமார்கள். பழகிய யானையைக் கொண்டு புதிய யானையைப் பிடிப்பது போல, நம்மைப் போலவே மானிட வடிவம் தாங்கிக் கடவுளே நம்மை உய்விக்கக் குருவடிவில் வருவதாகக் கொள்ள வேண்டும்.

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மணிவாசகப் பெருமான் போன்றவர்களில்லை என்றால் உலகில் அன்பு நெறி காணப்படுமா ?

கட்டையில் நெருப்புள்ளது. அந்த நெருப்பினை (ஒளியை) வெளியே கொண்டுவர, வேறு ஒரு கட்டை வேண்டும். வேறு ஒரு கட்டையுடன் சேர்த்து உரசும் பொழுது, கட்டையினுள்ளிருக்கும் நெருப்பு (ஒளி) வெளியே வருகிறது. அதைப்போல நம் உள்ளேயிருக்கும் ஆன்ம ஒளியை, வேறு மனித வடிவம் தாங்கி வரும் குருவால்தான் வெளியே கொண்டுவர முடியும்.

பசுவிடம் பால் பெறுவதற்கு கன்றுக்குட்டி அவசியமாதல் போல, சிவ பெருமானது திருவருளைப் பெறுவதற்குக் குருவருள் அவசியமாகும்.

சூரிய காந்தக் கல்லின் மீது சூரிய ஒளி பட்டவுடன் நெருப்பு எழுவது போல, குருவின் அருட்பார்வை நம்மீது பட்டவுடன் மெய்ஞானம் தோன்றும். குருவினால் யிப்பிறவியில் பெறும் ஞானம் (அறிவு) எடுக்கின்ற பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகும்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்க

"கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக" என்றும் திருமூல நாயனார் அறிவுறுத்துகின்றார். போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்பதேயிதன் உட்பொருள். பிறகு குருடும் குருடும் கூடிவிளையாடி குழியில் விழுந்தாற் போலாகிவிடும்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடும் குழிவிழுமாறே

(குருட்டினை நீக்குதல்=அறியாமையை நீக்குதல்; குருடு=அறிவிலி; குழிவிழுதல்=துன்பத்திற்குள்ளாதல்)

அறியாமையைப் போகும் நல்லாசிரியரையே தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் தெளிவு பெற்றவராக யிருத்தல் வேண்டும். குரு என்பவர் வாழ்ந்து காட்டுபவர் ஆவார். அவர் வாழும் வாழ்க்கையே பாடமாக அமையும். குரு உலகத்தின் மீது பற்றற்றும், சிவத்தின் மீது மாறாத அன்பும் உடையவராகத் திகழ்வார். அவரால் உலகம் பல நன்மைகளை அடையும். அத்தகைய குருவின் திருமேனியைக் கண்டாலே புண்ணியம் என்கிறார் திருமூலர்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

மாதா, பிதாவால் நம் ஜனனம் நிகழ்கிறது. இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களே! குருவருளால் தான் திருவருள் – இறைவனின் அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, “அ’வில் துவங்கி, உயர்கல்வி வரை கற்றுத் தந்து அவர்களை சீர்திருத்தும் சிற்பிகள் ஆசிரியர்களே! ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு எந்த ஒரு மாணவன் தன்னை சீர்படுத்திக் கொள்கிறானோ, அவன் பிற்காலத்தில் நிம்மதியாக இருப்பான்.

பகவான் கிருஷ்ணரும், குசேலரும் பள்ளிக்கூட நண்பர்கள். அக்காலத்தில் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள், அங்கேயே தங் கிப் படிக்க வேண்டும்; பள்ளி நேரம் தவிர, மற்ற சமயங்களில் குரு இடும் கட்டளைகளைச் செய்ய வேண்டும். ஒருநாள், இவர்களது குரு சாந்தீபனி முனிவரின் மனைவி, கிருஷ்ணரையும், குசேலரையும் சமைப்பதற்கு விறகு பொறுக்கி வரச்சொல்லி விட்டாள்.

குருவின் மனைவியின் கட்டளையை ஏற்ற அந்தக் குழந்தைகள், காட்டில் சென்று விறகு பொறுக்கினர். மழை வந்துவிட்டது. விறகு நனையாமல் இருக்க, ஒரு மரப்பொந்தில் அதை வைத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நின்றனர். இருட்டி விட்டது. குழந்தைகளைக் காணாத குரு, மனைவியைக் கடிந்து கொண்டு குழந்தைகளைத் தேடிச்சென்றார்.

குரு பத்தினியின் கட்டளையை நிறைவேற்ற விறகை மறைத்து விட்டு, மழையில் அவர்கள் நனைந்தது கண்டு கண்ணீர் வடித்தார். “நீங்கள் மிக நன்றாக இருப்பீர்கள்… என ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் பலித்தது. துவாரகையின் மன்னரானார் கிருஷ்ணர்; ஏழையான குசேலர், தன் நண்பனின் உதவியால் பெரும் செல்வந்தரானார்.

குருவின் சொல்லை இளமையில் கேட்டு நடப்பவர்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக விளங்குவர்.

நம்மில் குரு அருள் நிரம்புவதை எப்படி கண்டறிந்து கொள்வது?

நினைத்த மாத்திரம் நம்மில் பொங்கும் பிரபஞ்ச ஒர்மை உணர்வு,
எண்ணங்களில் சீர்மை, அகத்தாய்ந்த எண்ணங்களே சொல்லாய் செயலாய் வெளிப்படல்,
புலனின்ப உணர்வுகளில் அளவு முறை, தவறாது அனைத்திடமும் பொங்கும் அன்பு,
நிறை மனம், உள்ளுணர்வு, விளைவை ஆராய்ந்த செயல் முறை, சினமின்மை, கவலையின்மை,
இன்ன பிற பண்புகளால் அறியப் படுவார் குரு வழி நின்ற ஒரு நற்பண்பாளர்.
"சத்குருவின் அருளால் மனதைச் சும்மா இருக்க செய்தாலன்றி எல்லாரும் விரும்பும் அமைதியை எவராலும், எவ்வழியிலும், எவ்வேளையிலும், எவ்விடத்திலும் எவராலும் அடைய முடியாது" என்பார் ரமணர்.

தகப்பனுக்கே உபதேசம் செய்து குருசுவாமியாகியவர் முருகன். ஆகவே குருவுக்கு வயது என்பது இல்லை. குருவானவர் எந்த வயதினராகவும் இருக்கலாம். எந்தப் பாலினத்தவராகவும் இருக்கலாம்.

போலிக் குருவை அடையாளம் கண்டு கொண்டால் உண்மைக் குருவை யார் என்று தெரிந்து கொள்ளலாம்.

"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்ளுவார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழு மாறே"

- திருமந்திரம் -

"ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகும் குரவனே"

- திருமந்திரம் -

'வீணான நினைவுகளை விடாமல் எண்ணுபவர் செய்யும் உபதேசத்தில் சிவத்தியானம் சிறந்து வெளிப்படாது தீமைகளே வெளிப்படும். அவுபதேசத்தைக் கேட்பவர் அறிவு கெடும். அக்குருவால் வாழும் நாட்டுக்கும் அரசுக்கும் தீங்கு வரும்' என்கிறார் போலிக் குரு பற்றி திருமூலர்.

குரு ஒளியாயிருக்கிறார், சீடனுக்கு ஒளியை வழங்குகிறார், சீடனின் மனதில் இருக்கும் இருளை போக்குகிறார், சீடனை ஒளிமயமாக்குகிறார். ஆகவே எவர் சிந்தனைகள், சொற்கள் உன்னை தெளிய வைக்கிறதோ அவரே உனது குரு ஆவார் என்கிறார் சட்டைமுனி.

ஆகவே, உங்களைத் தெளிய வைப்பவரை உணர்வது உங்கள் உள்ளுணர்வேயாகும். அந்த உள்ளுணர்வு உங்கள் குருவை உங்களுக்கு அடையாளம் காட்டும் என்கிறார்கள் சித்தர்கள்.
பிழையேனும் இருப்பின் மன்னிக்கவும்....

                      -

போதி தர்மர் வரலாறு!


புத்தருக்கு 600 ஆண்டுகளுக்குப் பிறகு போதி தர்மர் சீனா போய் சேர்ந்த பொழுது அங்கு ஏற்கனவே 30,000 புத்தமத கோவில்களும் மடாலயங்களும் மேலும் 2,00,000 புத்த பிட்சுக்களும் சீனாவிலிருந்தனர். இரண்டு லட்சம் புத்த பிட்சுக்கள் எனபது சிறிய எண்ணிக்கையல்ல. அது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவிகிதம்.
.
பிரயக்தாரா, போதிதர்மருடைய குரு, அவரை சீனாவுக்கு அனுப்பினாள், ஏனெனில் அவருக்கு முன்பு சீனாவுக்கு சென்ற மக்கள் ஞானமடைந்தவர்களாக இல்லாத போதிலும் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள், மிகவும் கட்டுக்கோப்பான மக்கள், மிகவும் அன்பானவர்கள், அமைதியானவர்கள், கருணை கொண்டவர்கள் ஆனால் யாரும் ஞானமடைந்தவர்களல்ல. மேலும் இப்போது சீனாவுக்கு இன்னொரு கௌளதமபுத்தர் தேவைப்பட்டார், நிலம் தயாராயிருந்தது. சீனாவை சென்றடைந்த முதல் ஞானமடைந்த மனிதர் போதிதர்மர்தான்.
.
நான் தெளிவாக்க விரும்பும் விஷயம் என்னவென்றால் கௌளதமபுத்தர் அவருடைய சங்கத்தில் பெண்களுக்கு தீட்சையளிக்க அச்சப்பட்டார். போதிதர்மர் கௌளதமபுத்தரின் பாதையில் வந்த போதிலும் ஒரு பெண்ணால் தீட்சை பெறும் அளவுக்கு தைரியமுடையவராயிருந்தார். அங்கு மற்ற ஞானமடைந்த மக்கள் இருந்தனர். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தார். இந்த காரணம் என்னவென்றால் ஒரு பெண்ணாலும் ஞானமடைய முடியும், அது மட்டுமல்ல, அவளுடைய சீடர்களும் ஞானமடைய முடியும் என்பதை காட்டுவதற்காகவே. எல்லா புத்தமத ஞானமடைந்த மக்களுக்கிடையிலும் போதிதர்மர் பெயர் தனித்து நிற்கிறது. அது கௌளதமபுத்தருக்கு அடுத்ததாக இருக்கிறது. இந்த மனிதரைப்பற்றி பல செவிவழி செய்திகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏதோ ஒரு முக்கியத்துவம் உள்ளது.
.
முதல் செவிவழி செய்தி : அவர் சீனாவை அடைந்தபோது – சீனாவை சென்றடைய அவருக்கு மூன்றாண்டுகள் ஆயின. – அவரை வரவேற்க சீனப்பேரரசர் வூ வந்திருந்தார். போதிதர்மருடைய புகழ் அவருக்கு முன்பாக அங்கு சென்றடைந்திருந்தது. பேரரசர் கௌதமபுத்தருடைய தத்துவத்திற்கு சிறந்த சேவை செய்திருந்தார். ஆயிரக்கணக்கான பண்டிதர்கள், புத்தமத புத்தகங்களை பாலிமொழியிலிருந்து சீனமொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர், மேலும் பேரரசர் மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு சிறந்த காவலராக விளங்கினார். அவர் ஆயிரக்கணக்கான கோவில்கள் மற்றும் மடாலயங்களை கட்டியிருந்தார். மேலும் அவர் ஆயிரக்கணக்கான பிட்சுக்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அவர் அவருடைய முழு பொக்கிஷத்தையும் கௌதமபுத்தரின் சேவைக்காக செலவழித்துக் கொண்டிருந்தார். அதனால் போதிதர்மருக்கு முன்பு அங்கு சென்ற புத்தபிட்சுக்கள் அனைவரும் பேரரசரிடம் அவர் பெரிய புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் சொர்க்கத்தில் ஒரு கடவுளாக அவதரிப்பார் எனவும் சொல்லி வந்திருந்தனர்.
.
எனவே அவர் போதிதர்மரிடம் கேட்ட முதல் கேள்வியே, “நான் பல மடாலயங்களை கட்டியுள்ளேன், பல பண்டிதர்களுக்கு உணவளித்து வருகிறேன், புத்த தத்துவங்களை படிப்பதற்காக நான் ஒரு பல்கலைகழகத்தையே நிறுவியுள்ளேன், நான் இந்த முழு பேரரசையும் அதன் பொக்கிஷங்களையும் கௌதமபுத்தரின் சேவைகளுக்காக அர்ப்பணித்துள்ளேன். அதற்குப் பரிசாக எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதாக இருந்தது.
.
போதிதர்மரைப் பார்த்து அவருக்கு சிறிது அதிர்ச்சியாகவே இருந்தது. மனிதர் இப்படி இருப்பார் என அவர் நினைக்கவேயில்லை. போதிதர்மர் மிகவும் கோபக்காரராக காட்சியளித்தார். அவர் மிகப்பெரிய கண்களை கொண்டிருந்தார். ஆனால் அவர் ஒரு மென்மையான மலர் போன்ற இதயத்தை – ஒரு தாமரை மலரை போன்ற இதயத்தை – கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முகம் உன்னால் எவ்வளவு அபாயகரமாக கற்பனை செய்ய முடியுமோ அவ்வளவு கடுமையானதாக காட்சியளித்தது. ஒரு கண்ணாடி போட்டிருந்தால் அவர் ஒரு மாபியாகும்பல்காரரைப் போல இருந்திருப்பார்.
.
மிகுந்த அச்சத்துடன் பேரரசர் வூ அந்த கேள்வியை கேட்டார். அதற்கு போதிதர்மர், “எதுவுமில்லை, எந்த பரிசுமில்லை அதற்கு பதிலாக நீ ஏழாவது நரகத்தில் விழ தயாராக இரு” என்று கூறினார். பேரரசர், “நான் எந்த தவறும் செய்யவில்லையே? எதற்காக ஏழாவது நரகம்? புத்த பிட்சுக்கள் கூறும் எல்லாவிஷயங்களையும் நான் செய்து வருகிறேனே” என்று கேட்டார். அதற்கு போதிதர்மர், “நீ உன்னுடைய சொந்த குரலை கேட்கத் தொடங்கும்வரை உனக்கு யாரும் உதவ முடியாது. அது புத்த மதத்தை சேர்ந்தவர்களாயினும் சரி, சேராதவர்களாயினும் சரி. மேலும் நீ இன்னும் உனது உள் குரலை கேட்கவில்லை. நீ அதைக் கேட்டிருந்தால் நீ இப்படி முட்டாள்தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டாய்.
.
கௌதமபுத்தரின் பாதையில் எந்த வெகுமதியும் கிடையாது. ஏனெனில் வெகுமதிக்கான ஆசையே ஒரு பேராசையாக மனதிலிருந்துதான் வருகிறது. கௌதமபுத்தரின் முழு கற்பித்தலும் ஆசையற்ற தன்மையே. மேலும் புண்ணிய செயல்கள் என்று கூறப்படும் கோவில்கள் மற்றும் மடாலயங்கள் கட்டுதல், ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவிடுதல் போன்ற எல்லா செயல்களும் உள் மனதில் ஒரு ஆசையோடு நீ செய்திருந்தால் நீ நரகத்தை நோக்கிச் செல்லும் உனது பாதையை தயார் படுத்துகிறாய். நீ இந்த செயல்களை உனது ஆனந்தத்தின் விளைவாக, உனது ஆனந்தத்தை முழு பேரரசுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக செய்தால், எந்த வெகுமதிக்குரிய ஒரு சிறு ஆசைகூட உனக்கு இல்லாமல் இருந்தால் அந்த செயலே அந்த செயலின் வெகுமதியாகும். இல்லாவிடில் நீ முழுவிஷயத்தையும் தவறவிட்டுவிடுகிறாய். என்றார்.
.
பேரரசர் வூ, “என் மனது எண்ணங்களால் நிரம்பி வழிகிறது. நான் எனது மனதை அமைதிபடுத்த முயன்று வருகிறேன், ஆனால் நான் தோற்றுவிடுகிறேன். இந்த எண்ணங்களாலும் அதன் சத்தத்தின் காரணமாகவும் நீங்கள் உள்குரல் என்று கூறும் விஷயத்தை என்னால் கேட்க முடியவில்லை. எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. “ என்று கூறினார்.
.
போதிதர்மர், “அப்படியென்றால் நாளை அதிகாலை 4 மணிக்கு நான் மலையில் தங்கப்போகும் இடத்திற்க்கு எந்த மெய்க்காப்பாளனும் இல்லாமல் தனியாக வா. அங்கு நான் உனது மனதை எப்போதும் அமைதியோடு இருப்பதாக ஆக்கிவிடுகிறேன்“ என்று கூறினார்.
.
பேரரசர் இந்த மனிதர் உண்மையிலேயே வரம்புமீறிய மூர்க்கத்தனமானவர் என்று எண்ணினார். அவர் ஏராளமான பிட்சுக்களை சந்தித்திருக்கிறார். அவர்கள் மிகவும் பரிவு காட்டுபவர்கள். ஆனால் இவரோ ஒரு பெரிய தேசத்தின் பேரரசர் என்று கூட கவலைப்படவில்லை. மேலும் அதிகாலை இருட்டில் 4 மணிக்கு அவரிடம் செல்வது என்பது…………… மேலும் இந்த மனிதன் ஆபத்தானவனாக தோன்றுகிறான். போதிதருமர் எப்போதும் தன்னுடன் ஒரு கைத்தடியை வைத்திருப்பார். பேரரசர் முழு இரவும் தூங்கவில்லை. “போவதா? வேண்டாமா? இந்த மனிதன் என்ன வேன்டுமானாலும் செய்யக்கூடும், அவர் நம்பமுடியாத மனிதராக தோன்றுகிறார்” மற்றும் இன்னொரு பக்கம் அவரது இதயத்தின் ஆழத்தில் அவர் போதிதருமருடைய நேர்மையை உணர்ந்தார். அவர் நடிப்பவரல்ல, அவர் நீ ஒரு அரசர், தான் ஒரு புத்தபிட்சு என்பதைப்பற்றி ஒரு துளிகூட கவலைப்படவில்லை. அவர் தான் ஒரு பேரரசர் போலவும் அவருக்கு முன்பு நீ ஒரு பிச்சைக்காரன் என்பது போலவும் நடந்து கொள்கிறார். நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன் என்று சொன்ன விதமும்……
.
பேரரசருக்கு புதிராயிருக்கிறது, ஏனெனில் “இந்தியாவிலிருந்து வரும் ஞானவான்களை கேட்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு யுக்திகளையும் வழிமுறைகளையும் அளித்தனர், அவற்றை நான் பயிற்சி செய்து வருகிறேன், ஆனால் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இந்த புதிய மனிதன் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல, மது அருந்தியவனைப்போல, அவ்வளவு பெரிய கண்களையுடைய, பயத்தை உருவாக்கக்கூடிய ஒரு வித்தியாசமான முகத்தைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவர் நேர்மையானவராகவும் தோன்றுகிறார். அவர் ஒரு காட்டுத்தனமான மனிதன். ஆனால் இந்த அபாயம் தகுதியுடையதே.! அவர் என்ன செய்யக்கூடும், அதிகபட்சம் அவர் என்னைக் கொல்ல முடியும்” என்று எண்ணினார். முடிவில் அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. ஏனெனில் ‘அந்த மனிதன் நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன்’ என்று வாக்களித்துள்ளார்.
.
பேரரசர் வூ அதிகாலை 4 மணிக்கு தனியாக இருளில் அவரது இடத்தைச் சென்றடைந்தார். அந்த கோவில் படிகளில் போதிதர்மர் அவருடைய தடியுடன் நின்று கொண்டிருந்தார், அவர், “இரவு முழுவதும் போவதா வேண்டாமா என்று குழம்பினாலும் நீ வருவாய் என எனக்குத் தெரியும். ஒரு ஏழை பிட்சுவைப் பார்த்து, ஒரு ஏழை பிச்சைக்காரனைப்பார்த்து, இந்த உலகத்தில் ஒரு தடியைத் தவிர ஏதும் இல்லாதவனைப் பார்த்து இவ்வளவு பயப்படும் நீ எப்படிப்பட்ட பேரரசன் ? நான் இந்த தடியை வைத்து உனது மனதை அமைதியாக்கப் போகிறேன். “ என்று கூறினார்.
.
பேரரசர், “கடவுளே ஒரு தடியை வைத்து மனதை அமைதிபடுத்துவதை யாராவது எப்போதாவது கேள்விபட்டதுண்டா? அவனை முடித்துவிடலாம், தலையில் ஓங்கி அடிக்கலாம், பிறகு முழு மனிதனும் அமைதியாகிவிடுவான். ஆனால் மனம் அமைதி அடையாதே. ஆனால் இப்போது திரும்பி போவது என்பது முடியாத காரியம்” என எண்ணினார்.
.
போதிதர்மர், “இங்கே கோவில் வராண்டாவில் உட்கார், சுற்றிலும் ஒரு மனிதன் கூட இல்லை, கண்களை மூடிக்கொள், உனக்கு முன்னால் நான் எனது தடியுடன் உட்கார்ந்து கொள்கிறேன். மனதை பிடிப்பதே உனது வேலை. வெறுமனே உனது கண்களை மூடிக்கொண்டு உள்ளே சென்று அது எங்கே இருக்கிறதென்று தேடு. நீ அதனை பிடிக்கிற நொடியில் வெறுமனே எனக்கு அது இங்கே இருக்கிறதென்று கூறு, மற்றதை எனது தடி பார்த்துக்கொள்ளும்” என்று கூறினார்.
.
உண்மையை, அமைதியை, மௌனத்தை தேடும் தேடுதலையுடையவன் அடையக்கூடிய, அடைந்த அனுபவங்களிலேயே மிகவும் வித்தியாசமான அனுபவம் அது. பேரரசர் வூக்கு இப்போது வேறு வழியில்லை. கண்களை மூடி அங்கே அமர்ந்தார். போதிதர்மர் சொல்வதை செய்யக்கூடியவர் என்பதை பேரரசர் நன்றாக உணர்ந்தார். அவர் தன்னுள்ளே எல்லாபக்கமும் தேடினார், அங்கு மனமில்லை. அந்த தடி அதன் வேலையை செய்துவிட்டது.
.
முதன்முறையாக அவர் அப்படி ஒரு சூழலில் இருந்தார். செய்தாகவேண்டும்
.
…… நீ மனதை ஒருவேளை கண்டுபிடித்தால், இந்த மனிதன் அவருடைய தடியை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று உனக்குத் தெரியாது. மேலும் அந்த மௌனமான மலைப்பகுதியில், போதிதர்மருடைய இருப்பில்…. அவருக்கென ஒரு சக்தி வட்டமிருந்தது……. பல ஞானமடைந்த மக்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் போதிதர்மர் தனியாக எதிலும் ஒட்டாமல் எவரெஸ்ட் சிகரம் போல தனித்து நிற்கிறார். அவருடைய ஒவ்வொரு செயலும் தனித்துவமானது மற்றும் ஆணித்தரமானது. அவருடைய ஒவ்வொரு அசைவும் அவருடைய சொந்த கையெழுத்தைக் கொண்டது, அது கடன் வாங்கப்பட்டதல்ல.
.
பேரரசர் மனதை கடுமையாகத் தேடினார், ஆனால் முதன்முறையாக அவரால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு சிறிய தந்திரம். நீ ஒருபோதும் உன் மனதை தேடாததால் மட்டுமே அது அங்கே இருக்கிறது. நீ ஒருபோதும் அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதில்லை என்பதாலேயே அது அங்கே இருக்கிறது. நீ அதைத் தேடும்போது, நீ அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருக்கும்போது விழிப்புணர்வு நிச்சயமாக அதனை முழுமையாக கொன்று விடுகிறது.
.
மணிநேரங்கள் கடந்துவிட்டன. சூரியன் மௌனமாக மலைகளின் மீது, ஒரு குளிர்ந்த தென்றலுடன் உதயமாகிக்கொண்டிருக்கிறான். போதிதர்மரால் பேரரசர் வூ வின் முகத்தில் அப்படி ஒரு அமைதியையும், அப்படியொரு மௌனத்தையும், அப்படியொரு அசைவற்ற தன்மையையும் அவர் ஒரு சிலையைப் போல இருப்பதையும் பார்க்க முடிந்தது. போதிதர்மர் வூ வை உலுக்கி, நிறைய நேரமாகிவிட்டது. நீ மனதை கண்டுபிடித்துவிட்டாயா?” என்று கேட்டார்.
.
பேரரசர் வூ, “உங்களது தடியை உபயோகிக்காமலேயே நீங்கள் எனது மனதை முழுமையாக அமைதிபடுத்திவிட்டீர்கள். எனக்கு எந்த மனமுமில்லை, நீங்கள் கூறிய உள் குரலை நான் கேட்டேன். இப்போது நீங்கள் கூறியது சரி என்று நான் உணர்கிறேன். எதையும் செய்யாமலேயே நீங்கள் என்னை நிலை மாற்றமடையச் செய்துவிட்டீர்கள். இப்போது எல்லா செயல்களுக்கும் அதைச் செய்வதே அதன் வெகுமதியாக இருக்க வேண்டும், இல்லாவிடில் அதனை செய்ய வேண்டியதில்லை என்று நான் உணர்ந்து கொண்டேன். உனக்கு வெகுமதியளிக்க அங்கு யார் இருக்கிறார்கள்? இது ஒரு குழந்தைதனமான சிந்தனை, அங்கு தண்டனை கொடுக்க யார் இருக்கிறார்கள்? உன்னுடைய செயலே தண்டனை. உன்னுடைய செயலே வெகுமதி. நீ சென்றடையும் இடத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடமே உள்ளது என்பதை நான் அறிவேன் இப்போது.” என்று கூறினார்.
.
போதிதர்மர், “நீ ஒரு அபூர்வமான சீடன். வெறும் ஒரு அமர்தலிலேயே மனதின் எல்லா இருட்டும் மறைந்துவிடும் அளவிற்கு விழிப்புணர்வையும் மிகுந்த ஒளியைக் கொண்டுவரும் துணிச்சலும் உள்ள மனிதனாக இருக்கிறாய். நான் உன்மீது அன்பு செலுத்துகிறேன், நான் உன்னை மதிக்கிறேன், ஆனால் ஒரு பேரரசனாக அல்ல.” என்று கூறினார்.
வூ அவரை அரண்மனைக்கு வருமாறு வற்புறுத்தினார். போதிதர்மர், “அது என்னுடைய இடமல்ல, நான் காட்டுத்தனமானவன். (See I am Wild) நான் என்ன செய்வேன் என்று எனக்கேத் தெரியாது என்பதை நீ பார்க்கலாம். நான் நொடிக்கு நொடி இயல்பாக வாழ்கிறேன். நான் மிகவும் கணிக்க இயலாதவன். நான் தேவையில்லாமல் உனக்கும் உனது சபைக்கும் உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கலாம். நான் அரண்மனைகளுக்காக ஆக்கப்பட்டவனல்ல. என்னை என்னுடைய காட்டுத்தனத்தில் வாழவிடு.” என்று கூறினார்.

இரண்டாவது செவிவழி செய்தி என்னவென்றால் டாய் என்ற பெயர் கொண்ட இந்த மலையில் வசித்த போதிதர்மர்தான் தேநீரை உருவாக்கிய முதல் மனிதர் என்பதாகும். டீ என்னும் பெயர் டாய் என்னும் பெயரிலிருந்து வந்ததாகும். ஏனெனில் அது டாய் என்னும் மலையில் உருவாக்கப்பட்டது. எல்லா மொழியிலும் உள்ள தேநீரை குறிக்கும் சொற்கள் ஒரே மூலத்திலிருந்தே வந்துள்ளன. ஆங்கிலத்தில் அது டீ, ஹிந்தியில் அது சாய், சைனீஸ் வார்த்தை ச்சா என்றும் கூறப்படுகிறது. மராத்தியில் அது ச்சா என்றழைக்கப்படுகிறது.
.
போதிதர்மர் தேநீரை உருவாக்கிய விதம் சரித்திரபூர்வ உண்மையாக இருக்க முடியாது. ஆனால் அது முக்கியத்துவமானது. அவர் கிட்டதட்ட எல்லா நேரங்களிலும் தியானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இரவில் சில நேரங்களில் தூங்கத் தொடங்கி விடுவார். எனவே தூங்காமல் இருப்பதற்காக, அவருடைய கண்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுப்பதற்காக அவரது கண் இமைகளின் முடிகள் அனைத்தையும் பிடுங்கி அவர் கோவில் நிலத்தில் எறிந்து விட்டார். கதை என்னவென்றால் இந்த கண் இமைகளிலிருந்துதான் தேநீர் செடி வளர்ந்தது. அவைதான் முதல் தேநீர் செடிகள். அதனால்தான் தேநீரை குடித்தபிறகு உன்னால் தூங்க முடியாது. மேலும் புத்த மதத்தில் தியானத்திற்காக தேநீர் அருந்துவது பழக்கமாகி விட்டது. தேநீர் மிகவும் உதவி புரியக் கூடியது. எனவே முழு புத்த உலகமும் தியானத்தின் ஒரு பகுதியாக தேநீர் அருந்துகிறது. ஏனெனில் அது உன்னை சுறுசுறுப்புடனும் விழிப்புடனும் வைத்திருக்கிறது. இரண்டு லட்சம் புத்த மத பிட்சுக்கள் சீனாவிலிருந்தாலும் கூட போதிதர்மர் தனது சீடர்களாக ஏற்றுக் கொள்ள தகுதியுடையவர்களாக நான்கு பேரை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது. அவர் உண்மையாகவே மிகவும் குறிப்பாக தேர்ந்தெடுத்தார். அவரது முதல் சீடரான ஹூய்கோவை கண்டுபிடிக்க அவருக்கு கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் பிடித்தது. இது ஒரு சரித்திர உண்மை. ஏனெனில் மிகவும் பழமையான குறிப்புகள் உள்ளன.
.
கிட்டதட்ட போதிதர்மருடைய காலத்திய குறிப்புகள் எல்லாவற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றவை குறிப்பிட படா விட்டாலும் வூ வை அரண்மனைக்கு திருப்பி அனுப்பிய பிறகு அவர் கோவில் சுவற்றைப் பாரத்தபடி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடப்படுள்ளது. அவர் அதனை ஒரு சிறந்த தியானமாக ஆக்கிக் கொண்டார். அவர் வெறுமனே எளிமையாக சுவற்றை பார்த்துக் கொண்டே இருப்பார். அதிகநேரம் நீ சுவற்றை பார்த்துக் கொண்டேயிருந்தால் உன்னால் யோசிக்க முடியாது. மெதுமெதுவாக அந்த சுவற்றைப் போலவே உனது மனதின் திரையும் காலியாகி விடுகிறது.
.
மேலும் அதற்கு இரண்டாவது காரணமும் இருந்தது. என்னுடைய சீடனாக இருக்கும் தகுதியுடைய யாராவது ஒருவர் வரும்வரை நான் யாரையும் பார்க்க மாட்டேன் என அவர் அறிவித்தார். மக்கள் வருவார்கள், அவருக்கு பின் அமர்வார்கள். அது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. இந்த முறையில் யாரும் பேசியதில்லை. அவர் சுவற்றிடம் பேசுவார். மக்கள் அவருக்கு பின் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அவர் வருபவர்களை பார்க்க மாட்டார். ஏனெனில் அவர் வருபவர்கள் என்னை அதிகமாக காயப்படுத்துகிறார்கள். அவர்கள் வெறும் சுவறைப் போல இருக்கிறார்கள். யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஒரு அறியாமை நிலையில் மக்களைப் பார்ப்பது ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மையான ஒரு சுவறைப் பார்ப்பது கேள்வியேயில்லை. ஒரு சுவர் எப்படியிருந்தாலும் அது சுவரே. அது கேட்க முடியாது. எனவே காயப்பட தேவையில்லை. யாராவதொருவர் அவருடைய செயலின் மூலம் அவர் எனது சீடராக தயாராக இருக்கிறார் என்று நீரூபித்தால் மட்டுமே நான் வருபவர்களைப்பார்த்து திரும்புவேன் என்று கூறினார், ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த செயல் அவருக்கு திருபதியளிக்கும் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. பிறகு அந்த இளைஞன் ஹூய்கோ வந்தான். அவன் அவனுடைய கைகளில் ஒன்றை வாளால் வெட்டி அந்தக் கையை போதிதர்மர் முன் வீசிவிட்டு, இது ஆரம்பம்தான். நீங்கள் திரும்புங்கள் அல்லது என் தலை உங்கள் முன் உருளும். நான் எனது தலையையும் வெட்டப்போகிறேன் என்றான்.
.
போதிதர்மர் திரும்பி, நீ எனக்கு சீடனாக தகுதியுடைய மனிதன். தலையை வெட்ட வேண்டியதில்லை. நாம் அதனை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த மனிதன் ஹூய்கோதான் அவரது முதல் சீடர். முடிவில் போதிதர்மர் சீனாவை விட்டு செல்லும்போது அவர் ஹூய்கோவிற்குப்பிறகு மேலும் மூன்று சீடர்களை சேர்த்திருந்தார். அவர் சீனாவை விட்டு செல்ல முடிவெடுத்த பிறகு தனது நான்கு சீடர்களையும் அழைத்து, எளிமையான வார்த்தைகளில், சிறிய வாக்கியங்களில், தந்தி முறையில் என்னுடைய போதனைகளின் மூலத்தைக் கூறுங்கள். நாளைக்காலையில் நான் இமயமலைக்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளேன். அதனால் உங்கள் நால்வரில் ஒருவரை வாரிசாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். என்றார்.
.
முதலாமவன், மனதை தாண்டிச் செல்வது, முற்றிலும் மௌனமாக இருப்பது, அதன்பிறகு அனைத்தும் தானாகவே நடக்கிறது எனக் கூறினான். போதிதர்மர், நீ கூறியது தவறல்ல, ஆனால் நீ என்னை திருப்திபடுத்தவில்லை. உன்னிடம் எனது தோல் உள்ளது என்றார்.
.
இரண்டாமவன், நான் இல்லை, பிரபஞ்சம் மட்டுமே உள்ளது, என்பதை அறிந்து கொள்வதே உங்களது அடிப்படையான போதனை என்றான்.
.
போதிதர்மர், சிறிது பரவாயில்லை, ஆனால் அது எனது தகுதியளவிற்கில்லை. உன்னிடம் எனது எலும்புகள் உள்ளன. என்றார்.
.
மூன்றாவது மனிதன், அதைப்பற்றி ஏதும் சொல்ல முடியாது. எந்த வார்த்தையும் அதை கூறும் சக்தியற்றது என்றான். போதிதர்மர், நன்று, ஆனால் நீ ஏற்கனவே அதைப் பற்றி ஏதோ ஒன்றைக் கூறிவிட்டாய் உனக்கு நீயே முரண்பட்டு விட்டாய் வெறுமனே உட்கார். உன்னிடம் எனது சதை உள்ளது என்றார்
.
நான்காவதாக அவரது முதல் சீடன் ஹூய்கோ அவரது காலில் விழுந்தான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. போதிதர்மர், நீ அதை சொல்லிவிட்டாய். நீதான் எனது வாரிசாகப் போகிறாய் என்றார்.
.
ஆனால் இரவில் ஏதோ ஒரு சீடன் அவன் வாரிசாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்காக அவருக்கு விஷமளித்துவிட்டான்.
.
எனவே அவர்கள் அவரை புதைத்தனர். ஆனால் வித்தியாசமான மூன்றாவது செவிவழி செய்தி என்னவென்றால் ஒரு அரசாங்க அதிகாரி மூன்று வருடங்களுக்குப் பிறகு சீனாவிற்கு வெளியே இமயமலையை நோக்கி போதிதர்மர் நடந்துபோய்க் கொண்டிருப்பதை பார்த்தார். போதிதர்மருடைய கையில் அவருடைய தடியிருந்தது. மேலும் அவருடைய செருப்பு அந்த தடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் அவர் வெறும் காலில் நடந்து கொண்டிருந்தார். அந்த அதிகாரிக்கு அவரைத் தெரியும். அந்த அதிகாரி அவரிடம் பலமுறை வந்திருக்கிறார். அவர் ஒருமாதிரி இருந்தாலும்கூட போதிதர்மர் மீது அந்த அதிகாரி அன்பு செலுத்தினார். அதிகாரி அவரிடம் இந்த தடிக்கும் இதில் ஒரு செருப்பு தொங்குவதற்கும் என்ன அர்த்தம் என்று கேட்டார். போதிதர்மர் விரைவில் நீ அறிந்து கொள்வாய். நீ எனது மக்களை சந்தித்தால் வெறுமனே அவர்களிடம் நான் ஒரேடியாக இமயமலைக்கு செல்கிறேன் என்று கூறிவிடு என்று கூறினார்.
.
அதிகாரி, அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக போதிதர்மர் வாழ்ந்து கொண்டிருந்த மலையில் இருக்கும் மடாலயத்திற்கு சென்றார். அங்கு அவர் போதிதர்மருக்கு விஷம் வைக்கப்பட்டதையும் அவர் இறந்து விட்டதையும் கேள்விப்பட்டார். அங்கு அவரது சமாதியிருந்தது. அதிகாரி பேரரசரின் எல்லைப்பகுதியில் நியமிக்கப்பட்ட காரணத்தால் இதைப்பற்றி கேள்விப்பட வில்லை. அவர், கடவுளே, நான் அவரைப் பார்த்தேன். நான் ஏமாந்திருக்க முடியாது. ஏனெனில் நான் முன்பே அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் அதே மனிதன்தான். அதே கோபக்கண்கள், அதே தீப்போன்ற காட்டுத்தனமான உருவம், மேலும் உச்சக்கட்டமாக அவர் அவருடைய தடியில் அவருடைய ஒரு செருப்பை சுமந்திருந்தார் என்று கூறினார்.
.
சீடர்களால் அவர்களது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது சமாதியைத் திறந்தனர். அவர்கள் அங்கு கண்டதெல்லாம் ஒரே ஒரு செருப்பு மட்டுமே. அந்த காரணத்தை விரைவில் நீ அறிந்து கொள்வாய் என்று போதிதர்மர் ஏன் கூறினார் என்று அந்த அதிகாரி புரிந்து கொண்டார்.
.
நாம் யேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி மிகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் யாரும் அதிகமாக போதிதர்மரின் உயிர்த்தெழுந்தது பற்றி பேசுவதில்லை. ஒருவேளை அவர்கள் அவரை புதைத்தபோது அவர் கோமாவில் இருந்திருக்கலாம், அவர் சுயநினைவுக்கு வந்தவுடன் சமாதியிலிருந்து வெளியே வந்து ஒரு செருப்பை அங்கேயே விட்டுவிட்டு இன்னொரு செருப்பை அவரது தடியில் கட்டிக் கொண்டு திட்டமிட்டப்படி அவர் சென்று விட்டார்.
.
அவர் அழிவற்ற இமயமலையின் பனிக்கட்டிகளில் இறக்க விரும்பினார். அவர் அவரைக் குறித்து எந்த சமாதியும், எந்த சிலையும் இருக்கக்கூடாது என விரும்பினார். அவர் அவருக்கு பின்பு தொழுவதற்கு எந்த காலடி தடத்தையும் விட்டு வைக்கவில்லை. அவரை நேசிப்பவர்கள் அவரது சொந்த இருப்பினுள் நுழைய வேண்டும். நான் தொழப் போவதில்லை மற்றும் அவர் கிட்டதட்ட காற்றில் மறைந்துவிட்டார். என்ன நடந்தது, எங்கு அவர் இறந்தார் என்பது குறித்து யாரும் எதையும் கேள்விப்படவில்லை. அவர் கண்டிப்பாக இமயமலையின் அழிவற்ற பனிகளில் எங்கோ புதைந்திருக்கவேண்டும்.

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன்..?



கோயிலில் உள்ள அம்மனுக்கு பட்டுப்புடவை கட்டி மலர் மாலை சூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி,  வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகியஅணிகலன்கள் அணிவித்தாலே அலங்காரம் முழுமையடையும்.

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவேதான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

1.தாலி –தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.

2. தோடு –எதையும் காதோடு போட்டுக்கொள்.  வெளியில் சொல்லாதே !

3. மூக்குத்தி – மூக்குதான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.

4. வளையல் –
கணவன் உன்னை வளைய, வளைய வர  வேண்டும், என்பதற்காக,

5. ஒட்டியாணம் –
கணவன், மனைவி இருவரும் ஈருடல்  ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !

6. மோதிரம் –
எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

இவை தவிர நகைகள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக உருவானவை, அதிகமான ஆபரணங்கள்தங்கத்தில் அணியப்படுவதன் காரணம்வெப்பமான நாடுகளில் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது.
அத்துடன் தங்கம் எப்பொழுதும் எமது உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

7,கொலுசு:
பொதுவாக எல்லா நகைகளையும்  தங்கத்தில் அணியும் நாம், காலில்  அணியும் நகைகளை வெள்ளியில்தான் அணிகிறோம்.
இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமிஇருப்பதால் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன்வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினைதொட்டுக்கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக்குறைத்து கட்டுப்படுத்துகிறது.

8.மெட்டி:
மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால்  விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்தசக்தி கால் நரம்புகளில்  ஊடுருவி நோய்களை தடுக்கும்  ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

9.மோதிரம்:
விரல்களில் அணியப்படும் மோதிரம் பதற்றத்தை குறைக்கவும்,  இனிமையான பேச்சுத்திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது.
அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளைஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம்  அணிவதால் இதயக்கோளாறுகள்  மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும்  உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

10.மூக்குத்தி:
மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும்கூட நவீன உலகில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப்பெண்களுக்கு  மண்டை ஓட்டுப்பகுதியில் சில வாயுக்கள்காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்குத்தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு  மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும்பலமான வலுவான பகுதிகளாகும்.
வலது புறமாக சுவாசம் செல்லும் போதுதான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.

சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி, மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.

11.காதணி:
தோடு என்பது காதில் அணியும் ஆபரணம். பெண்கள்; அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒருமுக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...