ஆகம_குறிப்புகள் ;


1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.

2. மாலை 6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.(கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.)

3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.
முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.

4. காயத்ரி மந்திரத்தை
பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது
சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.

5. கற்பூர ஹாரத்தி :
(சூடம்காண்பித்தல் பற்றி)

சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.

தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்
முகத்துக்கு ஒரு தடவை
கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.

6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்

• விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்

• விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்

• பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இ்லை ஆகும்

இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.

9. கலசத்தின் அா்த்தங்கள்
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
உபசாரம் − பஞ்சபூதங்கள்.

10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...
• சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
• வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
• ஆனி – தேன்
• ஆடி – வெண்ணெய்
• ஆவணி – தயிர்
• புரட்டாசி – சர்க்கரை
• ஐப்பசி – உணவு, ஆடை
• கார்த்திகை – பால், விளக்கு
• மார்கழி – பொங்கல்
• தை – தயிர்
• மாசி – நெய்
• பங்குனி – தேங்காய்.

11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக
கிடைக்கும்.

12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில்  திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.

13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )

14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.

15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்

திருப்பூர் மாவட்டத்தில் கூலிபாளையம் என்ற ஊரில் (வித்ய விகாஸ் பள்ளிக்கு நேர் பின்பு) இந்த சுக்ரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான கோவில் ஆகும்.

இந்த புகழ் பெற்ற ஆலயம் தற்போது இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருக்கிறது..

இதன் ஆலயத்தின் சிறப்புகள் :

• இரண்டு நந்திகளைக் கொண்ட கோவில்.

• ஐந்து லிங்கம் வெவ்வேறு திசையில் இருந்தாலும் சூரியனின் கதிர்கள் சரியாக இந்த லிங்கங்களில் ஒன்றன்பின் பின் ஒன்றாக விழும்.

• இங்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. அந்த பாதையில் குதிரையில் சென்றால் கோவை பேரூரை அடையலாம் என்று இந்திய அகழ்வாராய்ச்சி துறையினரால் கூறப்படுகிறது.

• இந்த கோவிலின் அடியில் மிகப்பெரிய கோவில் புதையுண்டுள்ளது என்று இந்திய அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்கள் கூறகின்றனர்.

இக்கோவிலின் வரலாறு:

சுக்ரீவர் ராவணனை அளிக்க செல்லும் முன் இக்கோவிலை எழுப்பி ஈசனிடம் ஆசி பெற்ற பின் ராமர் அணியில் சேர்ந்தார் என்பது வரலாறு.


ஆரோக்கியமாக வாழ்வதற்காக ஏழு விதிகள்

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அரிசியைக் குறையுங்கள் என யாராவது சொன்னால் தயவுசெய்து காது கொடுத்துக் கேட்காதீர்கள். அரிசி, நமது பாரம்பரிய உணவு. அரிசிதான் இங்கே அதிகம் பயிரிடப்படுகிறது, “அந்தந்த மண்ணில் விளையும் உணவுதான் அந்த மக்களுக்கு” என்பதே ஹெல்த்தி சீக்ரெட். எனவே, அரிசியைத் தவிர்க்காதீர்கள். அரிசி எந்த விதத்திலும் கெடுதி விளைவிக்காது. மாவுச்சத்து உள்ளது போலவே அமினோஅமிலங்களும் இதில் நிரம்பியுள்ளன. அரிசி உணவுகள்தான் செரிமானத்துக்கு ஏற்றவை. எனவே, இட்லியோ சாதமோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

நெய் நன்றாக ஊற்றிச் சாப்பிடுங்கள்.
நெய்யின் கிளைசெமிக் எண் குறைவானது. இதனால், சர்க்கரை நோயாளிகள்கூட பயப்படாமல் நெய் ஊற்றிச் சாப்பிடலாம். நெய்யில் அதிகமான நல்ல கொழுப்பு உள்ளது. இது, இதயத்துக்கு நல்லது. எனவே, சாம்பார் சாதத்தில் நெய் ஊற்றிச் சாப்பிட நடுங்காதீர்கள்.

தேங்காயில் கொலஸ்ட்ரால் இருக்கிறது, முந்திரி சாப்பிட்டால் வெயிட் போடும் என்பதை நம்பி பலர் இதனைத் தவிர்த்துவிடுகின்றனர் இது தவறு. தேங்காயும், முந்திரியும் நம் ஊரில் அதிகம் விளைபவை.

தேங்காய், முந்திரி இரண்டிலும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது;* கொலஸ்ட்ரால் இல்லை. நமது உடல் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் அத்தியாவசியம். நமது கல்லீரல் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்துகொள்கிறது. தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால் உள்ளது என்பது தவறான செய்தி.

பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடுவதைவிட நம்மூர் நிலக்கடலை, முந்திரியைச் சாப்பிடுங்கள்.

கரும்பு நமது ஊரில் அதிகம் விளையக்கூடியது. கரும்பைக் கடித்துச் சாப்பிட்டால், பல்லுக்கும் நல்லது. உடலுக்கும் நல்லது. நாட்டுவெல்லத்தைப் பனிக்காலம் மற்றும் மழைக் காலத்திலும் சாப்பிடுங்கள். சர்க்கரையைக் கோடை காலத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலர், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு பிரவுன் சாக்லேட், செயற்கை இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள். இது தவறு. கரும்பில் இருந்து இயற்கையானமுறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையைச் சாப்பிடத் தயங்காதீர்கள். அளவான சர்க்கரையோடு காபியும், டீயும் தாராளமாக அருந்துங்கள்.

தைராய்டு பிரச்னை பலரை வாட்டி வதைக்கிறது. சிலர் எடையைக் குறைத்தால் தைராய்டு குறையும் என்பார்கள். ஆனால், எடையும் குறைக்க முடியாமல், தைராய்டையும் குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள். இதற்கு எளிய தீர்வு உண்டு.

முதலில், நீங்கள் மின்னணு கேட்ஜெட்டுகள் பயன்படுத்துவதைக் குறையுங்கள்.

குறைந்தபட்சம் இரவு படுக்கைக்குச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாவது டி.வி, செல்போன், லேப்டாப் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள்.

நன்றாக உறங்குங்கள். மனஅழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள்.

வாரம் 150 நிமிடங்கள் பிடித்த உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.

இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரம் முன்பே முடித்துவிடுங்கள். இதைச் செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் இருக்கும்.

சிறுதானியங்களில் பல நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அதற்காக எப்போதும் சிறுதானியம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறுதானியத்தில்தான் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. எனவே, சிறுதானியமும் ஒரு நல்ல உணவு. அவ்வப்போது அதனை எடுத்துக்கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்

பலர் என்னிடம் கேட்கும் கேள்வி, எப்படிச் சாப்பிடும் உணவு அளவைக் குறைப்பது என்பதுதான். நமது நாக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. குழந்தை, தேவைக்கு மீறி தாயிடம் இருந்து தாய்ப்பாலை எப்போதும் குடிக்காது. நமது வயிறு நிறைந்த பின் யாரவது சாதத்தை நம் வாய்க்குள் வைத்துத் திணித்தாலும் நம்மால் விழுங்க முடியாது; துப்பத்தான் முடியும்.

ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம் ஒரு ஜாங்கிரி சுவையாக இருக்கிறது என்றால் நம்மால் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டுதான் சாப்பிட முடியும். மூன்றாவது ஜாங்கிரியைச் சாப்பிடும்போது முதல் ஜாங்கிரியைச் சாப்பிட்ட அதே சுவை இருக்காது. ஆசையின் காரணமாகச் சாப்பிடுவது வேறு, சுவைக்காகச் சாப்பிடும்போது சாப்பிடுவது வேறு. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சுவைக்காகச் சாப்பிடுங்கள்.

சாப்பிடும்போது வேறு எந்த வேலையயும் செய்யாமல், வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், உணவை ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுங்கள்.

உங்களுக்கான உணவுத் தேவையை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் எனச் சொன்னால், நிச்சயம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிடலாமே என்றுதான் மனம் ஏங்கும். எனவே, உணவின் அளவும் சரி, ஆரோக்கியமும் சரி உங்கள் கையில்தான்.

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்


ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.

சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.

புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா

தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

சீரகப் பொடி மற்றும் தேன்

1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

சூப்புடன் சீரகப் பொடி

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி

எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

தொப்பையைக் குறைக்கும் சீரகம்

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

சீரகத்தின் வேறுசில நன்மைகள்

மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

திருவாரூர் தேர் வரலாறு



ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது  திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி திருவாரூர். இங்குள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.

திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிக பெரிய தேராகும். திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது.

இந்த தேர் நான்கு நிலைகளை உடையது அவை முறையே 6 மீட்டர் 1.2 மீட்டர் 1.6 மீட்டர் 1.6 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும்

தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை . பல கலை நயந்துடன் கூடிய வேலைபாடுகள் உடைய இந்த தேர் ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது.

இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும்.

முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. அப்போதெல்லாம் தேர் நிலைக்கு வர வாரக்கணக்காகுமாம். பின்னர் அது படிப்படியாக குறைந்து 4 நாட்களாக நடைபெற்று வந்தது.

தற்போது 4 புல்டோசர்கள் கொண்டு இழுக்கப்பட்டு வருவதால் அன்று  மாலையே நிலைக்கு கொண்டு வரப்பட்டு விடுகிறது.

திருவாரூர் தேர் எனப்படும் ஆழித்தேரோட்டம்   காலை 7 மணிக்குமேல் தேர் தியாகராஜருடன் பவனி வருகிறது.

இதற்காக கடந்த 22ந்தேதியே  மூலவர் தேரில் வந்து அமர்ந்து விட்டார். அன்றிலிருந்து கடந்த ஒரு வாரமாக தேர் அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.

இன்று காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது.

ஏற்கனவே பல ஆயிரம் பக்தகோடிகள் திருவாரூர் தேரில் அமர்ந்துள்ள தியாகராஜரை தரிசித்து வந்துள்ள நிலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆழித்தேரை இழுக்க தயாராகி உள்ளனர்.

ஆழித்தேர்   ஆருரா, தியாகேசா முழக்கத்திற்கு நடுவில் அசைந்தாடி வருவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

*தேர் குறித்த மேலதிக தகவல்கள்:*

ஆழித் தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என 7 அடுக்குகளை கொண்டது.

இந்த தேரின் நான்காவது நிலையில்தான்  தியாகராஜ சுவாமி வீற்றிருப்பார். இந்த பீடம் மட்டுமே31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது.

மூங்கில்களை கொண்டு முழுமையாக அலங்கரிக்கப்படும்போது, தேரின் உயரம் 96 அடியாக இருக்கும். ஆழித்தேரின் எடை 300 டன்.

இந்த தேரை அலங்கரிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.  தேரை அலங்கரிக்க அதிக அளவில் மூங்கில் கம்பங்களும், 3,000 மீட்டர் அளவுக்கு தேர் சீலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

தேரின் மேற்புறத்தில் 1 மீட்டர் உயரத்திலான கலசம் பொருத்தப்பட்டிருக்கும்.

காகிதக் கூழில் தயாரிக்கப்பட்ட பிரம்மா தேரோட்டி பொம்மையும், நான்கு வேதங்களை முன்னிறுத்தும் பெரிய குதிரை பொம்மைகளும் என ஏராளமான பொம்மைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

தேரை அலங்கரிக்கும்போது, 500 கிலோ எடையுடைய துணிகள், 50 டன் எடையுடை கயிறுகள், 5 டன் பனமர கட்டைகளை பயன்படுத்தப்படுகிறது.

திருவாரூர் தேரின் முன்புறத்தில் 4 பெரிய வடக் கயிறுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு வடக் கயிறு 21 அங்குலம் சுற்றளவும் 425 அடி நீளம் கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொரு சக்கரமும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது.

ஆழித்தேர் ஓடுவதை காண்பதை காட்டிலும், தியாகராஜ கோயிலின் நான்கு வீதிகளிலும் திரும்புவதை காண்பதற்கே, அதிக கூட்டம் கூடும்.

ஏனெனில், அவ்வளவு பிரம்மாண்டமான அந்த தேரின் சக்கரங்களை இருப்பு பிளேட்டுகளின் மீது மசையை கொட்டி, இழுத்து திருப்புகின்றனர்.

பண்டைய காலங்களில்  இந்த பிரம்மாண்ட தேரை இழுப்பதற்கு 12,000 பேர் தேவைப்பட்டனர். அதன்பின், ஆள் பற்றாக்குறையால், மக்கள் வடம் பிடித்து இழுக்கும்போது, பின்புறத்தில் யானைகளை வைத்து முட்டித் தள்ளி தேரை நகர்த்தியுள்ளனர்.

தற்போது மக்கள் வடம் பிடித்து இழுப்பதுடன், பின்புறத்தில் 4 புல்டோசர் எந்திரங்கள் மூலமாக சக்கரங்கள் உந்தித் தள்ளப்படுகிறது.

முன்பு டிராக்டர்களில் ஏராளமான முட்டுக் கட்டைகளை கொண்டு வந்து, தேர் சக்கரங்களில் போட்டு தேரை நிறுத்துவர்.

இதில், சில சமயங்களில் முட்டுக் கட்டை போடுபவர் விபத்தில் சிக்கும் ஆபத்து இருந்ததால், திருச்சியிலுள்ள பாரத மிகு மின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இரும்பு அச்சு மற்றும் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு அதன்மூலமே தேர்தல் நிறுத்தப்படுகிறது.

ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான தேர் என்ற பெருமை உண்டு.

மயிலாடுதுறை_அருகே ஒரு__சித்தர்_தனது அறுபத்து_மூன்று சீடர்களுடன்_ஒரே இடத்தில்_ஐக்கியமான தலம்_ஒன்று_உள்ளது.

சித்தர்காடு

மயிலாடுதுறை_அருகே
ஒரு__சித்தர்_தனது அறுபத்து_மூன்று சீடர்களுடன்_ஒரே இடத்தில்_ஐக்கியமான தலம்_ஒன்று_உள்ளது.

சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி சில ஆலயங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் எனப்படும் இந்தத் திருக்கோவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது.

சோழவள நாட்டில் உள்ள சீர்காழியில், 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை போற்றி வழிபட்டு தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பயனாக திருச்செந்தூர் முருகப்பெருமான், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு, மெய்ஞானம் தந்து அருள் வழங்கினார்.

முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீகாழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர்.

#சமாதி_அடைய #விருப்பம் :

இந்த நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். சீடர்களிடம் தனக்கு உதித்த விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்த சீகாழி சிற்றம்பல நாடிகள், ‘நான் என்னுடைய சீடர்களோடு சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் ஜீவ சமாதி என்னும் நிஷ்டையில் கூட விரும்புகின்றேன். அதற்கு தகுந்த இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்’ என்று கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற மன்னன், அவரது விருப்பப்படியே மயிலாடு துறைக்கு மேற்கு பகுதியில் உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கிக் கொடுத்தான்.

பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான். அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிசயத்தைக் காண பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார்.

அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர்.

இந்த இடம் தற்போது #சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள் வழங்கி வருகின்றது.

சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லாருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகிறார்.

#ஆலய_அமைப்பு :

கிழக்கு பார்த்த வண்ணம் எளிய நுழைவு வாசலைக் கொண்டு அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறைக்குள் தல நாயகர் சீகாழி சிற்றம்பல நாடிகளின் ஜீவ சமாதியும், அதன் மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு காட்சி தருகிறது.

இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.

கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

#விழாக்கள் :

ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம்.

#கசப்புத்_தன்மை :

ஒரு சமயம், சிற்றம்பல நாடிகள் தனது சீடர்களுடன் திருமடத்தில் உணவருந்துவதற்காக அமர்ந்திருந்தார். இதையடுத்து அனைவருக்கும் அன்னமும், பருப்பும் பரிமாறப்பட்டது. அப்போது உணவு வைத்தவர், தவறுதலாக #நெய்க்கு_பதிலாக
#வேப்ப_எண்ணெயை எடுத்து பரிமாறிவிட்டார். சிற்றம்பல நாடிகளும், அவரது சீடர்களும் எந்த வித வேறுபாடுமின்றி உணவருந்தினார்கள்.

ஆனால் கண்ணப்பர் என்ற சீடர் மட்டும், அதன் கசப்புத் தன்மையை உணர்ந்து, அதை வெளிப்படுத்தவும் செய்தார்.

இதைக் கேட்ட சிற்றம்பல நாடிகள், ‘நமது திருக்கூட்டத்தில் இன்னமும் பக்குவம் அடையாத சீடரும் இருக்கின்றார் போலும்’ என்றார்.

தனது தவறை உணர்ந்த கண்ணப்பர், திருக்கூட்டத்தை விட்டு வெளியேறினார். தனது குருநாதருடைய திருவடியை தியானித்தவாறே வடக்கு நோக்கிச் சென்று, தவமியற்றி வாழ்ந்து வந்தார். சில காலம் சென்ற நிலையில், தன் குருவும், மற்ற சீடர்களும் சமாதி நிலையை அடைவது பற்றி அவருக்கு செய்தி கிடைத்தது. இதையடுத்து அவர் குருவின் இருப்பிடம் தேடி ஓடி வந்தார். ஆனால் அதற்குள் சமாதிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. இதனால் சமாதிகளை வணங்கிய அவர், குருவின் சமாதி முன்பாக அமர்ந்து கண்ணீர் விட்டார்.

‘ஆண்ட குருசிற்றம் பலவா அடியேற்கா

மீண்டும் எழுந்தருள வேண்டாவோ– நீண்டவனும்

ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியில்

பூரணமா வையாத போது’

– என்று மனமுருகிப் பாடினார்.

அப்போது சிற்றம்பல நாடிகளின் சமாதி பெருத்த ஓசையுடன் வெடித்தது. தம்மை வணங்கி நின்ற தன் சீடர் கண்ணப்பரை, தம் இருகைகளாலும் தழுவி, தம் மடியில் ஒன்றுபடுத்திக் கொண்டு, மீண்டும் சமாதியில் அமர்ந்தார் சிற்றம்பல நாடிகள்.

#அமைவிடம் :

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை –கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும்,
சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.

இந்த பதிவை பதிவதற்க்கு அருளிய இறைவனுக்கு..
கோடான கோடி வணக்கங்கள்..

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...