மண், மனை, வாழ்க்கை துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று, சாஸ்திரம் கூறுகிறது. இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.
பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற துறவி. ஒருநாள், இவரது சீடர்கள், ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர்.
‘இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன…’ என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார். அதற்கு சீடர்கள், ‘குருவே… காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார். அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை…’ என்றனர்.
உடனே நாராயண தீர்த்தர், ‘இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம்…’ என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.
இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார். வலியின் வேதனை தாளாமல், பகவானை நோக்கி, தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
அதன் விளைவாக, பெருமான், பூபதிராஜபுரம் எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, ‘நாராயண தீர்த்தரே… நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய். அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய். அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய். அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய். நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய்.
‘அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய்.
‘நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன. அதே சமயம். உணவுப்பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது…’ என்றார்.
இதன் பின், பகவான் கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ எனும் பாடல்களைப் பாடி, தன் துயரம் தீர்த்தார் நாராயண தீர்த்தர். தவறு செய்தவர்கள், அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இறைவன் அருளால் மட்டுமே, துயரம் தீரும் என்பதை விளக்கும் வரலாறு இது.
ஊழ்வினை – அனுபவித்தே தீரவேண்டும்!
கந்தர் அனுபூதி பாராயணம்
வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம் செய்து வந்தார்.
இருந்தாலும் வறுமை நீங்கவில்லையே... என வருந்தினார். செல்வ வளம் பெற, லட்சுமி குறித்த வேறு நுாலை பாராயணம் செய்ய வேண்டுமோ? என்ற சந்தேகம் எழுந்தது.
அதை தீர்க்க விரும்பிய அடியவர், காஞ்சிபுரம் புறப்பட்டார். பரமாச்சாரியாரை தரிசித்தார்.
''சுவாமி.... எனக்கு இப்போது, முதல் தேவை பணம் தான். கடன் சுமையால் கஷ்டப்படுகிறேன். வட்டி கட்டமுடியவில்லை. கந்தர் அனுபூதி பாராயணம், வறுமை போக்கும் என எனக்கு தோன்றவில்லை.
லட்சுமி கடாட்சம் பெற ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்'' என்றார்.
பரமாச்சாரியார் அவரிடம், '' முன்ஜென்ம வினைப்பயன் நீங்கும் வரை நம்பிக்கைஉடன் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பின் பலன் கிடைக்கும். இன்னின்ன பலன் பெற இன்னின்ன பாராயணம் என்று அதில் இருக்கிறது. கந்தர் அனுபூதி நிச்சயம் செல்வ வளம் தரும்.''
கந்தர் அனுபூதியில் இதற்கு சான்று இருக்கிறதா சுவாமி?
சுவாமிகள் புன்முறுவலுடன், ''வெளியில் ஏன் தேட வேண்டும். பாட்டுக்குள்ளே சான்று இருக்கிறதே? கந்தர் அனுபூதியின் கடைசி அடியைச் சொல்லேன் பார்க்கலாம்''
அடியவர் கடைசி அடியை ராகத்துடன் 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்றார்.
'அதற்கு என்ன பொருள்?'
'குருவாய் வந்து அருள்புரிவாய் குகனே என்று பொருள்' பரமாச்சாரியார் சிரித்தபடி விளக்க ஆரம்பித்தார். ''வருவாய் அருள்வாய் என்றால் 'வா, வந்து அருள்புரிய வேண்டும்' என்பது ஒரு பொருள். இது தவிர, 'வருவாய் தா' என்றும் ஒரு பொருள் உண்டு இல்லையா? கந்தர் அனுபூதி பாராயணம் செய்தால் 'வருவாய் பெருகும்' என்பதில் இன்னுமா சந்தேகம்? வேறு ஸ்லோகம் தேவையில்லை. கந்தர் அனுபூதியை தொடர்ந்து பாராயணம் செய்ய செல்வ வளம் பெருகும்.
நன்றியுடன் விடைபெற்ற அடியவருக்கு கந்தரனுபூதியின் மகிமை புரிந்தது.
தீராத நோய் தீர்க்கும் ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்!
திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் செட்டியாபத்து என்ற ஊரில் உள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.
திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில் 4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுற அமைய பெற்றுள்ளது. கிழக்குபுறம் ஒரு வாசலும், மேற்குபுறம் ஒரு வாசலும், வடக்கு புறம் ஒரு வாசலுமாக மூன்று வாசல்களைக் கொண்டிருக்கிறது இந்த ஆலயம்.
வடக்கு புற வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் முதலில் பெரியசாமி சன்னிதியும், அடுத்து வயனப்பெருமாள் மற்றும் அனந்தம்மாள் வீற்றிருக்கும் சன்னிதியும் காணப்படுகிறது. அடுத்ததாக ஆத்தி சுவாமி சன்னிதியும், தொடர்ந்து திருப்புளி ஆழ்வார் சன்னிதியும், அதன் அருகில் பெரியபிராட்டி சன்னிதியும் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரே கோட்டை சுவருக்குள் 6 தெய்வங்களும், 5 சன்னிதிகளும் அமைந்து உள்ளதால், இந்த ஆலயமானது ‘ஐந்து வீட்டு சுவாமிகள் திருக் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பெரிய சுவாமி சன்னிதியின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும், ஆத்தி சுவாமி அருகே குதிரை சுவாமி சன்னிதியும் அமைந்துள்ளன.
பெரியசாமி சன்னிதி தவிர மற்ற சன்னிதிகளில் மூல வருக்கு விக்கிரகங்கள் கிடையாது. பெரியசாமிக்கு மட்டுமே மூலவர் விக்கிரகம் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்கும் சிறப்பு, இந்தக் கோவிலுக்கு மட்டுமே உள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் மாலை நேரத்தில், ‘மாலை சாத்துதல்' பூஜையும் செய்யப்படுகிறது. இடைப்பட்ட நேரங்களில் பணிவிடை (படையல் போடுபவர்கள்) செய்கிறவர்களுக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப் படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள். முன்னதாக ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு இந்த படையல்கள் போடப்படும். அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர், பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமியை வழிபட்டு ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் அவர்கள் குணம் பெறுவார்கள்.
கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் செருப்புகளை அணிந்ததின் அடையாளமாக, கோவிலில் உள்ள செருப்புகளில் ஆத்தி சுவாமியின் கால் விரல்கள் பதிந்த தடங்களை இன்றும் காணலாம். பெரியசாமி சன்னிதியில் கட்டில், தலையணை வைக்கப்பட்டு இருக்கும். இதில் இரவு நேரத்தில் பெரியசாமி படுத்து ஓய்வு எடுப்பதாக நம்பப்படுகிறது. காலையில் நாம் இதனை பார்த்தால் இந்த படுக்கை விரிப்புகள் கலைந்து இருப்பதை காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவிலில் சித்திரை திருவிழாவும், தைத்திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படு கிறது. இதேபோல் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. சித்திரை திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.
திருமணிக்கட்டி மகிமைகள் :
ஐந்து வீட்டு சுவாமி பக்தர்கள் நெற்றியில் திருமணி என்னும் வெள்ளைப்பொட்டு இட்டுக்கொள்வார்கள். இந்த திருமணி என்பது நாமக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் திருமண்ணாகும். இதை தண்ணீரில் குழைத்து பொட்டு இட்டுக்கொள்வர். இந்த கோவிலில் பிரசாதமாக திருமணிக்கட்டியே வழங்கப்படுகிறது. கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்கு பதிலாக திருமணிக்கட்டியை குழைத்து தான் பூசிக்கொள்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள். இதன் மூலம் நோய் குணமாகுவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள்.
இந்த கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும்.
பூஜை கால அட்டவணை
காலசந்தி நடைதிறப்பு - காலை 7 மணி.
பூஜை ஆரம்பம் - காலை 8 மணி.
உச்சி காலை நடைதிறப்பு - பகல் 11 மணி.
பூஜை ஆரம்பம் - பகல் 12 மணி.
இராக்காலம் நடைதிறப்பு - மாலை 5.30 மணி
கொக்கராயன் பேட்டை கோயில்
எமதர்மராஜன்
தன் உதவியாளர்கள் அன்று எடுத்து வந்த ஆத்மாக்களை பார்த்து வினவுகிறான் .
*எத்தனை தவறுகளை செய்திருந்தாலும் , எந்த ஒரு நற்செயல்களையும் செய்யாவிடினும் ....* *கொக்கரையான் கோயில் கோபுரத்தை தரிசித்திருப்பான்* *எனில், அவன் செய்த பாவங்கள் அனைத்தும்*
*அந்த நொடியில் விலகி சொர்க்க லோகத்தை அடைய அவன் தகுதி பெற்றவன் ஆகிறான்...*
இப்படி ஒரு திருகோயிலா?
தலமா ?
எங்கு உள்ளது ?
*கொங்கு நாட்டில் தான்*
*திருச்செங்கோடு அருகில் ...*
*16 கிலோமீட்டரில்*
*திருச்செங்கோட்டி*
*லிருந்து 16 கி.மீ* *தொலைவிலும்,* நெசவுத் தொழில் சிறந்து விளங்கும் *பள்ளிபாளையத்தி*
*லிருந்து 10 கி.மீ* *தொலைவில்,* கங்கையினும் புனிதமான காவிரி நதிக் கரையில் கொக்கராயான் காண் என வாகீச
பெருமானால் பாடப் பெற்றதும், செங்கல் தொழிலில் சிறந்து விளங்குவதுமான *கொக்கராயன் பேட்டையில்*
*2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோழ மன்னர்களால் கட்டப் பெற்ற*
*ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.*
இத்திருகோயில் பெருமை அளவிடற்கரியது ....
*திருத்தல இறைவன் சுயம்புலிங்கம்,* *வரப்பிரசாதி,* *சான்னித்யம் மிக்கவர்,*
*கருவறையில் அதிர்வலைகளை உணரலாம்.*
சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திருத்தில்லையில் உள்ளது போல்
பாமா, ருக்மணி
சமேத ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி ஆஞ்சநேயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
*இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும்*
*ஸ்ரீ பைரவர்*
*நாய் வாகனமின்றி விளங்குகிறார்.*
*இந்த அமைப்பு*
*வேறு எங்கும் கிடையாது.*
சத்ரு தோஷ பரிகார மூர்த்தியாக விளங்குகிறார்.
பூரட்டாதி நட்ச்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர்.
இத் திருத்தல
இறைவி
மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நிவர்த்தி செய்வதில் வரப் பிரசாதி.
*இறைவன் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி 3 சுவர்களிலும்*
*கற்கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சாவி பொருத்துவதற்கான துளைகளும் உள்ளன. இது போன்றஅமைப்பு வேறெங்கும் கிடையாது.*
*"கல் கோழி கூவும்,*
*கல் கதவு திறக்கும்,* *அப்போது*
*கலியுகம் அழியும்"* *என்பது ஐதீகம்.*
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட
மிகப் பெரிய தீபஸ்தம்பம் உள்ளது.
ஸ்ரீ விநாயகர்,
ஸ்ரீ முருகப் பெருமான்,
ஸ்ரீ தட்க்ஷணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர்,
நவ கிரஹங்கள்,
சூரிய பகவான்,
சப்த கன்னிமாதாக்கள், ஆகிய மூர்த்திகள் ஒருங்கே அமையப் பெற்ற சிவஸ்தலம்.
சனி பகவானுக்கு
தனி சந்நிதி உள்ளது.
*சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு*
*விஜய நகரப் பேரரசை ஆண்டு வந்த*
*கிருஷ்ணதேவராயர் இத் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டதற்கான அவர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன...*
கடவுளை நினைக்கும் நேரம்
மகாபாரத போரில் வெற்றி பெற்ற தர்மர் பட்டம் சூட்டிக்கொண்டார். பாண்டவர்களின் தாயான குந்தியிடம் விடைபெற கிருஷ்ணர் வந்தார்.
குந்தி அவரிடம் எங்களை விட்டுச் செல்கிறாயே! இனி உன்னை காணும் பாக்கியம் இல்லாமல் போய் விடுமே என வருந்தினாள்.
கவலை வேண்டாம். விரும்பும் வரம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்றார் கிருஷ்ணர்.
அதற்கு குந்தி கிருஷ்ணா! தினமும் வாழ்வில் சிறு துன்பமாவது நேரும் வரம் கொடு என்றாள்.
எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும் என்று தானே கேட்பார்கள். நீங்கள் மாறாக கேட்கிறீர்களே! என்றார் கிருஷ்ணர்.
கிருஷ்ணா! இன்பம் வந்தால் கடவுளின் நினைவு வருவதில்லை. துன்பப்படும் போது தான் வருகிறது.
உன்னை தினமும் நினைக்க வேண்டும் என்பதால் இப்படி கேட்டேன் என்றாள் குந்தி.
பழநி மலை முருகன் அதிசய தகவல்கள்
1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.
5. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
7. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
8. அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
9. இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.
10. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.
11. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.
12. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
13. கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.
14. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.
15. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.
மூச்சைக்_கவனி_பேச்சை_குறை.
வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.
ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விடுகிறான்.இந்த அளவு எவ்வளவுக்கு எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு மனிதனின் ஆயுள் கூடும்.ஆயுள் மட்டுமல்ல அறிவும் வளரும்.புத்தி தெளிவடையும். அதே சமயம் இந்த அளவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆயுள் குறையும், புத்தி பேதலிக்கும்.
நாம் கோபப்படும் போதும்,பரபரப்படையும் போதும் நமது இதயத்துடிப்பு அதிகரிக்கும். மூச்சின் அளவும் அதிகரிக்கும். அதனால் தான் கோபம்,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.
அதற்காக தியானம்,பிராணயாமம் போன்ற பல்வேறு வழிமுறைகளை நமக்கு விட்டுச் சென்றார்கள். இதில் பிராணயாமம் என்ற மூச்சுப்பயிற்சியை முறையாகக் கற்றவர்களே செய்ய வேண்டும். பல எளிய முறை மூச்சுப்பயிற்சிகளும் உள்ளன.அவற்றைப் பின்பற்றினாலே நமக்கு பல நன்மைகள் விளையும். இதில் ஓஷோ கூறியுள்ள ஒரு தியானமுறையைப் பார்ப்போம்.
#சுவாசத்தைக்_கவனித்தல் (தியானம்)
"எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை. எளிதானதாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும்.
சுவாசத்தைக் கவனித்தல் என பொருள் இது மிகவும் எளிய முறை.
எப்போது - நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும்,ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..காலம் - 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.
முதல் படி - உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா. வேறு எண்ணங்களை விட்டுவிடு.
நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.
நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும்.இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.
பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள். இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய். தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.
உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது.
அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.
(இப்பதிவை படிக்கும் இந்த நிடங்கள் கூட செய்யலாம்.)
சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.
ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.
அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும்.
உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.
ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.
காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்."
எண்ணங்களைக் குறைத்தால் பேச்சுக் குறையும்.
பேச்சைக் குறைத்தால் மூச்சு குறையும். மூச்சைக் குறைத்தால் சித்தம் தெளிவடையும்.
சித்தம் தெளிவடைந்தால் மொத்தமும் கிடைக்கும்...நன்றி.
THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE
Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser? Get up ten minutes earlier at 5.50 and get used t...
-
Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser? Get up ten minutes earlier at 5.50 and get used t...
-
Do you know MINIMALISM ? Do you know Minimalism Fulfilling real life! ------------------ Our father earned less than me. We are four childr...
-
Medicinal properties of Pearl Millet If eaten daily in the morning in the form of porridge or kali, it prevents the accumulation of b...